விளையாட்டு

"இந்தியா பாகிஸ்தான் இரு அணிகளும் வேஸ்ட்.. அவ்வளவு மோசமாக ஆடினார்கள்" - பிரபல முன்னாள் வீரர் விமர்சனம் !

ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா பாகிஸ்தான் என இரு அணிகளுமே மிகவும் மட்டமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் கூறியுள்ளார்.

"இந்தியா பாகிஸ்தான் இரு அணிகளும் வேஸ்ட்.. அவ்வளவு மோசமாக ஆடினார்கள்"  - பிரபல முன்னாள் வீரர் விமர்சனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

துபாயில் நடைபெற்ற ஆசியக்கோப்பை தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வுசெய்தது. உலக கிரிக்கெட்டில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பின்னர் ஆடிய இந்திய அணியில் கே.எல்.ராகுல் முதல் பந்திலேயே அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். எனினும் தொடர்ந்து ஜோடி சேர்ந்த விராட் கோலி - ரோகித் சர்மா நிதானமாக விளையாடி முதல் விக்கெட்டிற்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதனால் இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கை அதிகரித்தது.

"இந்தியா பாகிஸ்தான் இரு அணிகளும் வேஸ்ட்.. அவ்வளவு மோசமாக ஆடினார்கள்"  - பிரபல முன்னாள் வீரர் விமர்சனம் !

ஆனால் சிறிய தவறால் ரோகித், விராட் கோலி இருவருமே அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். அதன்பின்னர் இறுதியில் ஜடேஜா,பாண்டியா அதிரடி ஆட்டம் காரணமாக 2 பந்துகள் எஞ்சிய நிலையில் இந்திய அணி திரில் வெற்றிபெற்றது.

இந்த ஆட்டம் தொடர்பாக பல்வேறு முன்னாள் வீரர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தரும் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியா -பாகிஸ்தான் போட்டி குறித்து பேசியுள்ள அவர், " இந்த போட்டியில் இரு அணிகளுமே மிகவும் மட்டமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இரு அணிகளுமே வெற்றி பெறுவதற்காக ஆடவில்லை. தோல்வி அடைய வேண்டும் என்று ஆடினர். இந்திய அணியில் ரோகித் சர்மா எதற்காக ரிஷப் பண்டை நீக்கிவிட்டு தினேஷ் கார்த்திக்கை கொண்டு வந்தார் என்று தெரியவில்லை.

"இந்தியா பாகிஸ்தான் இரு அணிகளும் வேஸ்ட்.. அவ்வளவு மோசமாக ஆடினார்கள்"  - பிரபல முன்னாள் வீரர் விமர்சனம் !

அதேபோல பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் இப்திகார் அகமதை எதற்காக 4ஆவது இடத்தில் ஆட வைத்தார்?. இந்தியா பேட்டிங் செய்த போது சூர்யகுமார் யாதவுக்கு முன்னதாகவே ஜடேஜாவை ரோகித் சர்மா களம் இறக்கி விட்டது ஏன் ?. இப்படி இரு அணிகளுமே பல தவறுகளை செய்துள்ளது. ஒட்டு மொத்தமாக பார்த்தால் இரண்டு அணிகளுமே தோல்விக்காகத் தான் விளையாடி உள்ளனர். இதுதான் மிகவும் மோசமான போட்டி" என்று விமர்சித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories