விளையாட்டு

"கோலி செய்ததை இளம்வீரர் செய்திருந்தால் அவ்வளவுதான்" - மீண்டும் விராட்டை சீண்டிய கம்பீர் !

கோலி ஆடிய அப்படியொரு ஷாட்டை ஒரு இளம் வீரர் ஆடியிருந்தால் நிச்சயம் அவர் மீது பெரும் விமர்சனம் வைக்கப்பட்டிருக்கும் என கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.

"கோலி செய்ததை இளம்வீரர் செய்திருந்தால் அவ்வளவுதான்" - மீண்டும் விராட்டை சீண்டிய கம்பீர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பாகிஸ்தான் அணிக்கு எதிரான பரபரப்பான ஆசிய கோப்பை போட்டியை கடைசி ஓவரில் வென்றது இந்திய அணி. ஹர்திக் பாண்டியாவின் அசத்தலான பேட்டிங் மூலம் 148 என்ற இலக்கை எட்டியது இந்திய அணி. இந்தப் பொட்டியில் 34 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. கேஎல் ராகுல் ஆட்டமிழந்ததும் களமிறங்கிய அவர், தொடக்கத்தில் மிகவும் தடுமாறினார். ரன் ஏதும் எடுக்காமலேயே அவர் ஆட்டமிழந்திருப்பார். இரண்டாவது ஸ்லிப்பில் இருந்த ஃபகர் ஜமான் கேட்சை தவறவிட்டதால் தப்பிப் பிழைத்தார் கோலி. அதன்பிறகு ஓரளவு சிறப்பாக ஆடிய அவர், முகமது நவாஸ் பந்துவீச்சில் இரட்டை மனதோடு ஒரு ஷாட் ஆடி இஃப்திகார் அஹமதுவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் ஓப்பனர் கௌதம் கம்பீர், விராட் கோலி அவுட் ஆன விதத்தை விமர்சித்திருக்கிறார். கோலி அவுட் ஆனதும் இந்திய அணி 10 ஓவர்களில் 53 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து கொஞ்சம் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தது. முகமது நவாஸ் வீசிய முந்தைய ஓவரின் கடைசி பந்தில்தான் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்திருந்தார்.

"கோலி செய்ததை இளம்வீரர் செய்திருந்தால் அவ்வளவுதான்" - மீண்டும் விராட்டை சீண்டிய கம்பீர் !

"நிச்சயம் விராட் கோலி தான் அவுட் ஆனதை நினைத்து வருத்தம் அடைந்திருப்பார். ஏனெனில், ரோஹித் ஷர்மாவின் விக்கெட்டை இந்திய அணி சில பந்துகளுக்கு முன்பு தான் இழந்திருந்தது. அப்படியிருக்கும்போது அந்த நிலையில் அவர் அப்படியொரு ஷாட்டை அடித்தது நிச்சயம் திருப்திகரமாக இருந்திருக்காது. நல்லவேளை அப்படியொரு ஷாட்டை ஒரு இளம் வீரர் ஆடவில்லை. ஆடியிருந்தால் நிச்சயம் அவர் மீது பெரும் விமர்சனம் வைக்கப்பட்டிருக்கும்" என்று போட்டி முடிந்த பிறகு நடந்த ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் கூறினார் கௌதம் கம்பீர்.

"சர்வதேச அரங்கில் அத்தனை ரன்கள் அடித்த ஒரு வீரர், நிச்சதம் அந்த ஷாட்டைப் பார்க்கும்போது அது தேவையில்லாத ஒன்று தான் என்பதை உணர்வார் என்று நான் நிச்சயம் நம்புகிறேன். 34 பந்துகள் விளையாடி 35 ரன்கள் எடுத்திருக்கிறீர்கள். அப்போதுதான் உங்கள் கேப்டன் அவுட் ஆகிச் செல்கிறார். அந்த இன்னிங்ஸை இன்னும் சற்று கட்டமைத்திருந்தால் இந்தப் போட்டி இந்தியாவுக்கு இன்னும் எளிமையாக அமைந்திருக்கும்" என்றும் கூறினார் கம்பீர்.

"கோலி செய்ததை இளம்வீரர் செய்திருந்தால் அவ்வளவுதான்" - மீண்டும் விராட்டை சீண்டிய கம்பீர் !

கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பைக்குப் பின்பிருந்து, இந்தப் போட்டி வரையிலும் இந்தியா விளையாடியிருந்த 24 சர்வதேச டி20 போட்டிகளில் நான்கில் மட்டுமே விராட் கோலி விளையாடியிருந்தார். கிட்டத்தட்ட சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து 7 வாரங்கள் ஒதுங்கி இருந்த கோலி, இந்தத் தொடர் மூலம் தான் இந்திய அணிக்குத் திரும்பினார். கோலியின் ஷாட் மிகவும் மோசமான ஒன்று என்றும் விமர்சனம் செய்திருக்கிறார் கௌதம் கம்பீர்.

"இது டி20 போட்டி. சில நேரங்களில் உங்கள் உள்ளுணர்வு சொல்வது சரி என்று தோன்றும். அதை நம்ப வேண்டும். ஆனால் கோலி அடித்த ஷாட் ஒன்றுமே இல்லாத ஷாட். மிகவும் விரக்தியடைய வைக்கும் ஒரு ஷாட். நீங்கள் ஒரு சிக்ஸர் அடிக்க முயற்சி செய்து ஆட்டமிழந்திருந்தால் பரவாயில்லை. நீங்கள் ஒரு பெரிய ஷாட் அடிக்க நினைத்தீர்கள் என்று ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் இங்கு எதுவுமே இல்லை. அவர் கேப்பில் அடிக்கவும் நினைக்கவில்லை, சிக்ஸர் அடிக்கவும் முற்படவில்லை. அது ஒன்றுமே இல்லாத, தேவையில்லாத ஷாட். அதனால் அவர் நிச்சயம் அதிகம் விரக்தியடைந்திருப்பார்" என்று கூறினார் கௌதம் கம்பீர்.

banner

Related Stories

Related Stories