விளையாட்டு

"அதற்கு பின்தான் என் நம்பிக்கை அதிகரிக்கத் தொடங்கியது"-மறக்கமுடியாத போட்டி குறித்து விராட் கோலி கருத்து!

2012ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டிக்கு பின்தான் நம்பிக்கை அதிகரிக்கத் தொடங்கியது என விராட் கோலி கூறியுள்ளார்.

"அதற்கு பின்தான் என் நம்பிக்கை அதிகரிக்கத் தொடங்கியது"-மறக்கமுடியாத போட்டி குறித்து விராட் கோலி கருத்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

விராட் கோலி, 2019ம் ஆண்டு வரை உச்சகட்ட ஃபார்மில் இருந்தார். கடந்த 3 ஆண்டுகளாக அவர் தன்னுடைய சிறப்பான ஃபார்மில் இல்லை. அனைத்து விதமான போட்டிகளிலும் தடுமாறி வருகிறார். இருந்தாலும் ஒருநாள் போட்டிகளில் அவருடைய சராசரி இன்னும் 57.68 என்று பிரம்மிக்க வைக்கும் வகையில் இருக்கிறது. இவையெல்லாம் கடந்த தசாப்தத்தின் தொடகத்தில் ஆரம்பித்தது. அவருடைய மிகச் சிறப்பான இன்னிங்ஸ்கலில் ஒன்று, 2012ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் வந்தது!

அந்தப் போட்டியில் இந்திய அணி 330 ரன்களை சேஸ் செய்தது. அவ்வளவு பெரிய இலக்கை சேஸ் செய்யும்போது ஓப்பனர் கௌதம் கம்பீரை இரண்டாவது பந்திலேயே இழந்தது இந்தியா. ரன் ஏதும் எடுக்காமல் நடையைக் கட்டினார் கம்பீர். அதன் பிறகு களம் புகுந்தார் 23 வயதே ஆன விராட் கோலி. அதன் பிறகு அவர் செய்ததெல்லாம் அசாத்தியத்தின் உச்சம். பாகிஸ்தான் பௌலர்களின் பந்துவீச்சை நாலாப்புறமும் சிதறவிட்டார் விராட். 148 பந்துகளில் 183 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அவருடைய அட்டகாசமான இன்னிங்ஸின் காரணமாக 48வது ஓவரிலேயே வெற்றி பெற்றது இந்திய அணி. இன்று வரை அதுதான் ஒருநாள் போட்டிகளில் அவருடைய அதிகபட்ச ஸ்கோராக இருக்கிறது.

"அதற்கு பின்தான் என் நம்பிக்கை அதிகரிக்கத் தொடங்கியது"-மறக்கமுடியாத போட்டி குறித்து விராட் கோலி கருத்து!

"ஆசிய கோப்பை தொடர் எப்போதுமே மறக்க முடியாத ஒன்று. அதிலும் அந்த 183 இன்னிங்ஸை மறக்கவே முடியாது. எனக்கு அதுதான் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் கொடுத்தது என்று சொல்லவேண்டும். 23 வயதில் என்னால் அப்படி ஒரு இன்னிங்ஸை ஆட முடிந்தது. பாகிஸ்தானுக்கு எதிராக ஞாயிற்றுக் கிழமை நாளில் ஒரு மிகப் பெரிய போட்டி. அதிலும் ஒரு மிகப் பெரிய இலக்கை சேஸ் செய்கிறோம். அந்த ஆட்டம் எனக்கே சற்று ஆச்சர்யமாகத்தான் இருந்தது. அதில் இருந்து என்னுடைய நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கியது" என்று கூறியிருக்கிறார் கோலி. 2022 ஆசிய கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகளுக்கு முன்பாக, விராட் கோலியின் பேட்டி ஒன்றை தங்கள் வலைதளத்தில் வெளியிட்டது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். அதில் இவ்வாறு கூறியிருக்கிறார் விரார் கோலி.

"என்னால் மறக்க முடியாத, நான் மிகவும் சிறப்பாகக் கருதும் இன்னொரு போட்டி என்றால் அதுவும் பாகிஸ்தானுக்கு எதிரானது தான். வங்கதேசத்தில் நடந்த போட்டியில், மிகவும் கடினமான ஆடுகளத்தில் நான் சுமார் 49 ரன்கள் எடுத்தேன். இது போன்ற போட்டிகள் எப்போதுமே என் மனதில் நீடித்து நிலைத்திருக்கும்" என்றும் கூறினார் விராட்.

"அதற்கு பின்தான் என் நம்பிக்கை அதிகரிக்கத் தொடங்கியது"-மறக்கமுடியாத போட்டி குறித்து விராட் கோலி கருத்து!

இந்த ஆண்டு ஆசிய கோப்பை போட்டிகள் டி20 ஃபார்மட்டில் நடக்கிறது. இதற்கு முன்பு 2016ம் ஆண்டு டி20 ஃபார்மட்டில் நடந்திருந்தது. அப்போது பாகிஸ்தானை இந்திய அணி 83 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தது. மிர்பூரில் நடந்த போட்டியில் ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. பேட்ஸ்மேன்கள் மிகவும் தடுமாறினார்கள். பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்கள் முகமது ஆமிர், முகமது ஷமி ஆகியோருக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறினார்கள். அந்தப் போட்டியில் 51 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார் விராட் கோலி.

"பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளின்போது மைதானத்துக்கு வெளியே இருந்து உருவாகும் நெருக்கடிகளை நீங்கள் புறந்தள்ளவே முடியாது. ஆனால் ஒரு வீரராக நீங்கள் களத்துக்குள் நுழைந்துவிட்டால், அதுவும் மற்றொரு போட்டியைப் போலத்தான். இதை நான் பல முறை சொல்லியிருக்கிறேன். வெளியே நடப்பவை நம்மை அதை நோக்கி இழுக்கும், ஆனால் அதையும் நீங்கள் அனுபவிக்கத் தொடங்கிவிட்டால், அதுவும் வழக்கமான போட்டியாக மாறிவிடும்" என்று கூறினார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி.

banner

Related Stories

Related Stories