விளையாட்டு

"இதுதான் இந்திய டி20 உலகக்கோப்பை அணி, 90% உறுதி" - கேப்டன் ரோஹித் ஷர்மா ஓபன் டாக் !

டி20 உலகக் கோப்பையில் விளையாடும் இந்திய அணி 80 முதல் 90 சதவிகிதம் முடிவு செய்யப்பட்டுவிட்டதாக கேப்டன் ரோஹித் ஷர்மா கூறியுள்ளார்.

"இதுதான் இந்திய டி20 உலகக்கோப்பை அணி, 90% உறுதி" - கேப்டன் ரோஹித் ஷர்மா ஓபன் டாக் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே இந்திய அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பல பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் அது போட்டிகளின் முடிவுகளில் பெரிய அளவில் தாக்கம் ஏதும் ஏற்படுத்துவதில்லை. கிட்டத்தட்ட ஒவ்வொரு பொசிஷனில் இந்திய அணிக்கு 2 மாற்று வீரர்கள் இருக்கிறார்கள். இது இந்திய அணியின் பலத்தை காட்டுகிறது. ஆசிய கோப்பை, டி20 உலகக் கோப்பை போன்ற தொடர்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், நட்சத்திர வீரர்களின் இடத்துக்கு அந்த பேக் அப் வீரர்களை எப்படி தயார்படுத்துவது என்று தானும் பயிற்சியாளர் ரோஹித் ஷர்மாவும் திட்டம் தீட்டியிருப்பதாகக் கூறினார்.

"பும்ராவும், ஷமியும், மற்ற பெரிய வீரர்களும் இந்திய அணியில் தொடர்ந்து விளையாடிக்கொண்டிருக்கமாட்டார்கள். அதனால் மற்ற வீரர்களைத் தயார் செய்வது முக்கியம். இந்திய அணியின் பெஞ்ச் பலத்தை அதிகப்படுத்துவது பற்றி பயிற்சியாளர் டிராவிட்டுடன் பேசியிருக்கிறேன். நாம் விளையாடும் கிரிக்கெட்டின் அளவு, காயங்கள் ஆகியவற்றை கணக்கில் கொண்டால் அது மிகவும் முக்கியம்" என்று கூறியிருக்கிறார் ரோஹித் ஷர்மா.

"இதுதான் இந்திய டி20 உலகக்கோப்பை அணி, 90% உறுதி" - கேப்டன் ரோஹித் ஷர்மா ஓபன் டாக் !

சொல்லப்போனால் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுப்பதால் இந்திய அணி இந்த ஆண்டு இதுவரை 7 கேப்டன்களைக் கண்டிருக்கிறது. விராட் கோலி, பும்ரா, ரோஹித் ஷர்மா, பும்ரா, ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் போன்றவர்கள் பல முறை ஓய்வு பெற்றனர். இவர்கள் யாருமே ஜிம்பாப்வே அணிக்கெதிராக விளையாடிக்கொண்டிருக்கும் இந்திய அணியில் இல்லை. ஓரிரு வீரர்களை மட்டுமே இந்திய அணி நம்பியிருக்கக்கூடாது என்று கூறியிருக்கிறார் கேப்டன் ரோஹித் ஷர்மா.

"நாங்கள் ஓரிரு வீரர்களை மட்டுமே நம்பியிருக்கும் அணியாக இருக்க விரும்பவில்லை. அனைத்து வீரர்களுமே வெற்றிக்கு பங்களிக்கக் கூடிய ஒரு அணியாக நாங்கள் இருக்கவேண்டும். அதனால் முடிந்த வரை இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்புகள் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். சீனியர் வீரர்களோடு அவர்கள் இணைந்து விளையாடும்போது, அது அவர்களின் கரியருக்கு பெரிய அளவில் உதவும்" என்று கூறியிருக்கிறார் ரோஹித் ஷர்மா.

"இதுதான் இந்திய டி20 உலகக்கோப்பை அணி, 90% உறுதி" - கேப்டன் ரோஹித் ஷர்மா ஓபன் டாக் !

இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் ஸ்குவாடு பற்றி ரோஹித்திடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், 80 முதல் 90 சதவிகிதம் இந்தியாவின் ஸ்குவாடு முடிவு செய்யப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார். அந்தத் தொடருக்கு இன்னும் சில மாதங்கள் இருப்பதால், சில மாற்றங்கள் இருந்தாலும் இருக்கலாம் என்று குறியிருக்கிறார் இந்திய கேப்டன்.

"இன்னும் டி20 உலகக் கோப்பைக்கு இரண்டு, இரண்டரை மாதங்கள் இருக்கின்றன. அதற்கு முன்பு ஆசிய கோப்பை இருக்கிறது. ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா என இரண்டு அணிகளை இந்தியாவில் எதிர்கொள்கிறோம். கிட்டத்தட்ட 80 முதல் 90 சதவிகித அணி உறுதியாகிவிட்டது. ஆனாலும் சூழ்நிலைகளைப் பொறுத்து மூன்று அல்லது நான்கு மாற்றங்கள் இருக்கலாம். இப்போதைக்கு நாங்கள் இந்தியாவில் விளையாடப்போகிறோம், ஐக்கிய அரபு அமீரகத்தில் விளையாடப்போகிறோம். ஆனால் ஆஸ்திரேலியாவில் சூழ்நிலைகள் வேறு மாதிரி இருக்கும். அதனால் ஆஸ்திரேலிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப அணிக்கு யார் பொறுத்தமாக இருப்பார்கள் என்று பார்க்கவேண்டும்" என்று கூறியிருக்கிறார் ரோஹித் ஷர்மா.

banner

Related Stories

Related Stories