விளையாட்டு

"BCCI ஓய்வூதியத்தை நம்பியே இருக்கிறேன், என் நிலை சச்சினுக்கும் தெரியும்?" - பிரபல இந்திய வீரர் வேதனை !

ஓய்வுக்கு பிறகு பிசிசிஐ பென்சனை மட்டுமே நம்பி இருக்கிறேன் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி கூறியுள்ளார்.

"BCCI ஓய்வூதியத்தை நம்பியே இருக்கிறேன், என் நிலை சச்சினுக்கும் தெரியும்?"  - பிரபல இந்திய வீரர் வேதனை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்திய அணிக்காக 104 ஒருநாள் போட்டிகள் மற்றும் 17 டெஸ்ட் போட்டிகளை விளையாடியவர் வினோத் காம்பிளி. இவரும் சச்சின் டெண்டுல்கரும் ஒன்றாகவே பள்ளி காலத்தில் கிரிக்கெட் விளையாட தொடங்கினர். அந்த காலத்தில் இருவர் சேர்ந்து அதிக ரன்கள் சேர்த்த ஜோடி என்ற சாதனையையும் படைத்தனர்.

சச்சினை தொடர்ந்து வினோத் காம்பிளி இந்திய அணிக்காக களமிறங்கியபோது அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. ஆரம்பத்தில் ஜொலித்தவர் பின்னர் தடுமாறத்தொடங்கினார். அதோடு அவருக்கு அதிர்ஸ்டமும் இருக்கவில்லை. இதனால் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

"BCCI ஓய்வூதியத்தை நம்பியே இருக்கிறேன், என் நிலை சச்சினுக்கும் தெரியும்?"  - பிரபல இந்திய வீரர் வேதனை !

பின்னர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த வினோத் காம்பிளி சில அணிகளுக்கு பயிற்சியாளராக பணியாற்றினார். ஆனால் அங்கும் போதிய வாய்ப்பின்றி தடுமாறினார். இதில் கொரோனா ஊரடங்கு அவரை கடுமையாகப் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்கியது.

இந்த நிலையில், தனது நிலை குறித்து அவர் பேசியுள்ளார். அதில், ஓய்வுக்கு பிறகு பிசிசிஐ பென்சனை மட்டுமே நம்பி இருக்கிறேன், எனக்கு வருமானம் கொடுக்கும் பிசிசிஐ-க்கு நான் நன்றி கடன் பட்டுளேன். அந்த வருமானம்தான் எனது குடும்பத்தை காத்து வருகிறது.

"BCCI ஓய்வூதியத்தை நம்பியே இருக்கிறேன், என் நிலை சச்சினுக்கும் தெரியும்?"  - பிரபல இந்திய வீரர் வேதனை !

என்னுடைய பொருளாதார நிலை சச்சினுக்கு தெரியும். ஆனாலும் அவரிடமிருந்து நான் எதையும் எதிர்பார்க்கவில்லை. மிடில் செக்ஸ் குளோபல் அகெடமியில் பணியை எனக்கு பெற்றுத்தந்தவர் சச்சின்தான். அவர் எப்போதும் எனக்கு நல்ல நண்பனாக இருக்கிறார். எனது வருமானத்துக்கு மும்பை கிரிக்கெட் கூட்டமைப்பு தனக்கு ஏதாவது பணி வாய்ப்புகள் வழங்கவேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories