விளையாட்டு

"இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு இருக்கும் வித்தியாசம் இவர்தான்"- இந்திய வீரரை புகழ்ந்த பாகிஸ்தான் வீரர்!

ஹர்திக் பாண்டியா போன்ற ஒரு ஆல்ரவுண்டர் இந்திய அணியில் இருப்பது ஒரு மிகப்பெரிய மாற்றதை ஏற்படுத்துகிறது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஆகிப் ஜாவேத் கூறியுள்ளார்.

"இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு இருக்கும் வித்தியாசம் இவர்தான்"- இந்திய வீரரை புகழ்ந்த பாகிஸ்தான் வீரர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

2022ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை தொடர் ஆகஸ்ட் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இலங்கையில் நடக்கவேண்டிய தொடர், அங்கு நிலவிவரும் அசாதாரண அரசியல் சூழ்நிலைகளால் இடம் மாற்றப்பட்டிருக்கிறது. இதற்கு முன் 2018ம் ஆண்டு இதே இடத்தில் நடந்த இந்தத் தொடர் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பியிருக்கிறது.

துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் நடக்கும் அதன் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானை சந்திக்கிறது இந்திய அணி. பாகிஸ்தானுக்கு எதிராக கடைசியாக இந்திய அணி 2021 டி20 உலகக் கோப்பையில் விளையாடியது. இதே துபாய் மைதானத்தில் நடந்த அந்தப் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது பாகிஸ்தான் அணி. இந்தப் போட்டிக்கு முன்பாக இரண்டு அணிகளையும் ஒப்பிட்டு தன் கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆகிப் ஜாவேத்.

"இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு இருக்கும் வித்தியாசம் இவர்தான்"- இந்திய வீரரை புகழ்ந்த பாகிஸ்தான் வீரர்!

பாகிஸ்தான் அணிக்காக உலகக் கோப்பை வென்றவரான ஆகிப் ஜாவேத், இந்தியா vs பாகிஸ்தான் போட்டி பற்றி ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்தார். அப்போது அந்த இரண்டு அணிகளுக்குமான வித்தியாசம் மிடில் ஆர்டர் பேட்டிங் லைன் அப்பில் தான் இருக்கிறது என்று தெரிவித்தார். இரண்டு அணிகளுமே போட்டியை வெல்லக்கூடிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள் என்று கூறிய அவர், ஹர்திக் பாண்டியா போன்ற ஒரு ஆல்ரவுண்டர் இந்திய அணியில் இருப்பது ஒரு மிகப்பெரிய மாற்றதை ஏற்படுத்துகிறது என்றும் கூறினார்.

"இரண்டு அணிகளுக்கும் உள்ள வித்தியாசம் பேட்டிங்கில் தான் இருக்கிறது. இந்தியாவின் பேட்டிங் ஆர்டர் அனுபவம் நிறைந்ததாக இருக்கிறது. ரோஹித் ஷர்மா போன்ற ஒரு வீரர் சிறப்பாக விளையாடினால் தனி ஒரு ஆளாக இந்திய அணிக்குப் போட்டியை வென்று கொடுத்துவிடுவார். அதே போலத்தான் ஃபகர் ஜமான். அவர் கட்டுக்கோப்பாக விளையாடினால் பாகிஸ்தான் அணிக்கு தனி ஆளாக போட்டியை வென்றுகொடுத்துவிடுவார். ஆனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இருக்கும் வித்தியாசம் அந்த மிடில் ஆர்டர் தான். அந்த அணிகளின் ஆல் ரவுண்டர் தேர்வுமே ஒரு மிகப்பெரிய வித்தியாசம். ஏனெனில் பாகிஸ்தான் அணியில் ஹர்திக் பாண்டியாவைப் போன்ற ஒரு ஆல் ரவுண்டர் இல்லை" என்று கூறியிருக்கிறார் அவர்.

"இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு இருக்கும் வித்தியாசம் இவர்தான்"- இந்திய வீரரை புகழ்ந்த பாகிஸ்தான் வீரர்!

துபாயில் கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி தோற்றபோது, ஹர்திக் பாண்டியா இந்தியாவின் பிளேயிங் லெவனில் இடம் பெற்றிருந்தார். ஆனால் அந்தப் போட்டியில் முழுக்க முழுக்க பேட்ஸ்மேனாகத்தான் தேர்வு செய்திருந்தார். அந்தப் போட்டியில் இந்திய அணிக்கு ஆறாவது பௌலிங் ஆப்ஷன் இல்லாமல் இருந்தது. அந்த சூழ்நிலையில் அந்த அணியின் ஓப்பனர்களான பாபர் ஆசம், முகமது ரிஸ்வான் இருவரும் மிகச் சிறப்பாக விளையாடி பாகிஸ்தான் அணி இலக்கை எட்ட உதவினார். அதன் மூலம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற அந்த அணி, முதல் முறையாக இந்தியாவை உலகக் கோப்பையில் வீழ்த்தியது.

அந்த தொடருக்குப் பிறகு இந்திய அணியில் இருந்து விலகியிருந்த ஹர்திக் பாண்டியா, ஐபிஎல் 2022 தொடருக்குத்தான் மீண்டும் திரும்பினார். அந்தத் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டவர், ஆல் ரவுண்டராகவும் ஜொலித்தார். அவருடைய அட்டகாசமான செயல்பாட்டுக்குப் பிறகு இந்திய சர்வதேச டி20 அணிக்குத் திரும்பினார். இந்திய அணிக்கும் சிறப்பாக விளையாடி தன்னுடைய இடத்தை நிரந்தரமாக்கிக்கொண்ட அவர், ஆசிய கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பை போன்ற தொடர்களில் இந்திய அணியின் துருப்புச் சீட்டாக இருப்பார் என்று கருதப்படுகிறது.

banner

Related Stories

Related Stories