விளையாட்டு

“பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்திய - அணிக்குத் திரும்பிய கோலி” : சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சொன்ன முக்கிய தகவல் !

சமீபத்திய போட்டிகளில் கோலியின் அணுகுமுறையைப் பாராட்டியிருக்கிறார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ரேக்கர்.

“பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்திய - அணிக்குத் திரும்பிய கோலி” : சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சொன்ன முக்கிய தகவல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சமீப காலமாக ஃபார்மில் இல்லாமல் தவித்து வரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவிருக்கும் ஆசிய கோப்பை தொடரின் மூலம் மீண்டும் அணிக்குத் திரும்புகிறார். கிட்டத்தட்ட 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிய அவரது தடுமாற்றம் சுமார் 3 ஆண்டுகளாக சர்வதேச அரங்கில் தொடர்ந்து வருகிறது.

சமீபத்தில் நடந்த முடிந்த வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணம், அடுத்து நடக்கவிருக்கும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடர் போன்றவற்றில் அவர் விளையாடவில்லை. இது அவருடைய எதிர்காலத்தின் மீது பெரும் கேள்விகளை எழுப்பியிருந்த நிலையில், இப்போது ஒரு முக்கியமான தொடருக்கு அணிக்குத் திரும்பியிருக்கிறார் கோலி.

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணத்துக்கு முன்பு நடந்த இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் கோலி விளையாடினார். கடந்த ஆண்டு ஆடப்படாத அந்த கடைசி டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்தது. அதன் முதல் இன்னிங்ஸில் 11 ரன்களே எடுத்த விராட், இரண்டாவது இன்னிங்ஸிலும் 20 ரன்கள் மட்டும்தான் எடுத்தார்.

“பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்திய - அணிக்குத் திரும்பிய கோலி” : சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சொன்ன முக்கிய தகவல் !

அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிரான 2 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய அவர் மொத்தமே 12 ரன்கள் தான் எடுத்தார். ஒருநாள் தொடரிலும் 17, 16 என மிகவும் குறைவான ரன்களைத் தான் எடுத்தார் முன்னாள் நம்பர் 1 வீரரான விராட் கோலி. 33 வயதான கோலிக்கு கடந்த 12 மாதங்கள் மிகவும் மோசமானதாக மாறியிருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் 3 ஃபார்மட்களிலும் இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார் அவர்.

கோலியின் திறமைக்கு சமீபத்திய செயல்பாடுகள் மிகவும் அதிர்ச்சியளிப்பதாக இருந்தாலும், சமீபத்திய போட்டிகளில் அவரின் அணுகுமுறையைப் பாராட்டியிருக்கிறார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ரேக்கர். சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணி கடைபிடித்துவரும் அட்டாக்கிங் அணுகுமுறையை விராட்டின் பேட்டிங்கில் காண முடிந்தது என்று கூறியிருக்கிறார் அவர்.

"கோலியின் ரசிகர்கள் நிச்சயம் கொண்டாடவேண்டும். ஏனெனில் கோலியின் அந்த கிளாஸ் மீண்டும் திரும்பிவிட்டது. சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியாவின் அணுகுமுறை பற்றி கோலிக்கு அனுபவம் கிடைத்தது. இங்கிலாந்து தொடரில் அவர் அந்த அனுபவத்தைப் பெற்றிருக்கிறார். அதை அவர் அரவணைத்துக்கொண்டிருக்கிறார். அவரால் பெரிய ஸ்கோர் எடுக்க முடியாவிட்டாலும், அதை அவர் ஏற்றுக்கொண்டிருக்கிறார். அதற்காக விராட் கோலியை நிச்சயம் பாராட்டவேண்டும்" என்று ஒரு தனியார் சேனல் நிகழ்ச்சிக்குக் கொடுத்த பேட்டியில் கூறியிருக்கிறார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.

“பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்திய - அணிக்குத் திரும்பிய கோலி” : சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சொன்ன முக்கிய தகவல் !

"அவர் அதிக ரன்கள் எடுக்கிறாரா என்று யோசிக்கவில்லை. அவுட் ஆகி விடுவோமா என்று கூட கோலி யோசிக்கவில்லை. இங்கிலாந்து தொடரில் அதிக ரன்கள் எடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருந்தார் கோலி. இருந்தாலும் அவர் அதைப் பற்றிக் கவலைப்படாமல் இந்திய அணியின் அணுகுமுறையைக் கடைபிடித்தார். களமிறங்கி தான் சந்தித்த முதல் பந்தில் இருந்தே பௌண்டரி அடிக்க முயற்சி செய்தார் அவர்" என்று கோலியைப் பாராட்டியிருக்கிறார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.

ஆசிய கோப்பை தொடரின் நடப்பு சாம்பியனான இந்திய அணி தங்கள் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை ஆகஸ்ட் 28ம் தேதி எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியின்போது நிச்சயம் அனைவரின் பார்வையும் விராட் கோலியின் மீது இருக்கும். இந்த ஆண்டு இதுவரை 4 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியிருக்கும் விராட் கோலி மொத்தம் 81 ரன்கள் தான் அடித்திருக்கிறார். இந்த வருடம் அவருடைய சராசரி வெறும் 20.25 தான்.

banner

Related Stories

Related Stories