விளையாட்டு

ஆசிய கோப்பை.. இந்திய அணியில் அஷ்வினுக்கு எப்படி இடம் கிடைத்தது?: தேர்வு குழுவை விமர்சித்த முன்னாள் வீரர்!

ஆசிய கோப்பை 2022 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய கோப்பை.. இந்திய அணியில் அஷ்வினுக்கு எப்படி இடம் கிடைத்தது?: தேர்வு குழுவை விமர்சித்த முன்னாள் வீரர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆசிய கோப்பை 2022 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவிருக்கிறது. இந்தத் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை திங்கள் கிழமை அறிவித்தது பி.சி.சி.ஐ. ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியில் முன்னாள் கேப்டன் விராட் கோலி இடம்பிடித்திருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம், ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் போன்றவற்றில் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருந்தது. சமீப காலமாக காயத்தால் அவதிப்பட்டுக்கொண்டிருந்த துணைக் கேப்டன் கே.எல் ராகுல் மீண்டும் ஃபிட்டாகியிருப்பதால் அணிக்குத் திரும்பியிருக்கிறார். அதேசமயம் காயம் காரணமாக ஜஸ்ப்ரித் பும்ரா இந்தத் தொடரில் இடம்பெறவில்லை. இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் கிரண் மோரே இந்த அணித் தேர்வை பற்றிய தன் கருத்தைக் கூறும்போது, ரவிச்சந்திரன் அஷ்வினின் தேர்வை கேள்விக்குறியாக்கியிருக்கிறார்.

ஆகஸ்ட் 17ம் தேதி தொடங்கும் இந்தத் தொடருக்கு இந்திய அணி இரண்டு ஸ்பின் ஆல்ரவுண்டர்களைத் தேர்வு செய்திருக்கிறது. யுஸ்வேந்திர சஹால், அஷ்வின், ரவி பிஷ்னாய், ரவீந்திர ஜடேஜா, தீபக் ஹூடா ஆகியோர் இந்திய அணியில் இருக்கும் சுழற்பந்துவீச்சு ஆப்ஷன்கள்.

ஆசிய கோப்பை.. இந்திய அணியில் அஷ்வினுக்கு எப்படி இடம் கிடைத்தது?: தேர்வு குழுவை விமர்சித்த முன்னாள் வீரர்!

இதுபற்றிப் பேசிய கிரண் மோரே, "எனக்குமே இந்த அணியைப் பார்க்கும்போது ஆச்சர்யமாகத்தான் இருந்தது. இந்த அணியில் அஷ்வின் எப்படி இடம்பெற்றார் புரியவில்லை? ஒவ்வொரு முறையும் இதுதான் நடக்கிறது. கடைசி டி20 உலகக் கோப்பையிலும் அவர் அணியில் இடம்பெற்றிருந்தார். ஆனால் விளையாடவில்லை. அவருடைய ஐபிஎல் செயல்பாட்டை எடுத்துப் பாருங்கள். அந்த இடம் முகமது ஷமிக்கு, அக்‌ஷர் படேலுக்கோ கொடுக்கப்பட்டிருக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன். அதுவும் இல்லாமல் அகஷட் படேல் சமீபத்தில் கூட மிகவும் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். ஷமி எப்போதுமே எனக்குப் பிடித்தமான வீரர். அவர் நிச்சயம் உலகக் கோப்பை தொடரில் இடம்பிடிப்பார். என்னைப் பொறுத்தவரை அணியில் விக்கெட் எடுக்கக் கூடிய பௌலர்கள் தேவை. ஷமியால் பவர்பிளேவில், மிடில் ஓவர்களில், டெத் ஓவர்களில்... எல்லா ஏரியாக்களிலும் விக்கெட் எடுக்க முடியும்" என்று கூறியிருக்கிறார்.

ஆசிய கோப்பை.. இந்திய அணியில் அஷ்வினுக்கு எப்படி இடம் கிடைத்தது?: தேர்வு குழுவை விமர்சித்த முன்னாள் வீரர்!

கிரண் மோரே மட்டுமல்ல, அஷ்வினின் தேர்வு பலமுறை பலராலும் கேள்விப்படுதப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு இன்னொரு முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்தும் இந்திய சர்வதேச டி20 அணியில் அஷ்வின் இடம்பெற்றிருப்பது குறித்து கேள்வி எழுப்பினார். 8 மாதங்கள் கழித்து மீண்டும் டி20 அணியில் அஷ்வின் இடம்பிடித்திருப்பதை விமர்சித்திருந்தார் அவர்.

"இது மிகப் பெரிய கேள்வியை எழுப்பியிருக்கிறது. அஷ்வினின் தேர்வைப் பொறுத்தவரை நான் மிகவும் குழப்பம் அடைந்திருக்கிறேன். அவர் ஏன் அணியில் இருந்து கழட்டிவிடப்படவில்லை, அதன் பிறகு அவர் ஏன் அணியில் விளையாடவில்லை, இங்கிலாந்து அணிக்கு எதிரான சர்வதேச டி20 தொடரில் அவர் ஏன் விளையாடவில்லை, இப்போது திடீரென வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஏன் விளையாடவில்லை. எதுவுமே புரியவில்லை. இது எல்லோரையுமே குழப்பிக்கொண்டுதான் இருக்கிறது.

அணியில் உங்களின் முதல் சுழற்பந்துவீச்சாளாராக ஜடேஜா தான் இருக்கப்போகிறார். அவர் போக யுஸ்வேந்திர சஹால், அக்‌ஷர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோரும் இருக்கின்றனர். இவர்கள் நால்வரில் யாரேனும் இருவர் மட்டும் தான் உலகக் கோப்பைக்குச் செல்லபோகிறார்கள். எனக்கு அஷ்வினின் வாய்ப்பு பற்றித் தெரியவில்லை. இருந்தாலும், ஒரு ஆல்ரவுண்டராக அவர் செயல்பட முடியும் என்பது அவருக்கு சாதகமாக அமையலாம். ஆனால் என்னுடைய முதல் தேர்வு சஹாலாகத்தான் இருக்கும். ஏனெனில் அவர் லெக் ஸ்பின்னர்" என்று கூறியிருந்தார் ஶ்ரீகாந்த்.

banner

Related Stories

Related Stories