விளையாட்டு

கிரிக்கெட் வீரர்களும் மனிதர்கள் தான்.. விராட் கோலிக்கு ஆதரவாக பேசிய இந்திய அணியின் நட்சத்திர விரர்!

விராட் கோலிக்கு ஆதரவாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஷிகர் தவான் கருத்து தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் வீரர்களும் மனிதர்கள் தான்.. விராட் கோலிக்கு ஆதரவாக பேசிய இந்திய அணியின் நட்சத்திர விரர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஃபார்ம் அவுட் பிரச்சனையால் கடந்த சில மாதங்களாகவே தவித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் கடந்த சில தொடர்களில் அவர் தொடர்ந்து ஓய்வு எடுத்துக்கொண்டிருப்பதும் பெரும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது. முன்னாள் வீரர்களும் கிரிக்கெட் வல்லுநர்களும் தொடர்ந்து இதுகுறித்து கருத்து தெரிவித்துவருகின்றனர். தொடர்ந்து ஃபார்ம் அவுட் பிரச்சனையால் தவித்து வரும் விராட் கோலி அடிக்கடி ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து போட்டிகளில் விளையாடவேண்டும் என்று பலரும் தெரிவித்திருக்கின்றனர். போட்டிகளில் தொடர்ந்து ஆடும்போதுதான் மீண்டும் ஃபார்முக்குத் திரும்ப முடியும் என்பது அவர்களின் கருத்தாக இருக்கிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் 2022 டி20 உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் 2 ஆண்டுகளே இருக்கும் நிலையில், கோலி இப்படி ஓய்வு எடுப்பது சரியான முடிவு இல்லை என்று கூறியிருக்கிறார்கள். இந்த விமர்சனங்களுக்கு மத்தியில் இந்த விஷயத்தில் கோலிக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார் இந்திய அணியின் முன்னணி வீரர் ஷிகர் தவான்.

ஐபிஎல் 200 தொடருக்குப் பிறகு இந்திய அணியின் ஒரேயொரு சர்வதேச சுற்றுப் பயணத்தில் மட்டுமே இடம்பெற்றிருக்கிறார் விராட் கோலி. இந்தியாவில் நடந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் அவர் விளையாடவில்லை. அதேபோல் அயர்லாந்து சுற்றுப் பயணத்திலும் அவர் பங்கேற்கவில்லை. இங்கிலாந்து சுற்றுப் பயணத்துக்கு இந்திய அணிக்குத் திரும்பியவர், எட்ஜ்பாஸ்டன் நகரில் நடந்த அந்த கடைசி டெஸ்ட் போட்டியில் பங்கேற்றார். மேலும் டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் மொத்தம் 4 போட்டிகளில் விளையாடினார். 2 சர்வதேச டி20 போட்டிகளிலும் சேர்த்தே 12 ரன்கள் மட்டுமே எடுத்த அவர், இரண்டு ஒருநாள் போட்டிகளில் 33 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

கிரிக்கெட் வீரர்களும் மனிதர்கள் தான்.. விராட் கோலிக்கு ஆதரவாக பேசிய இந்திய அணியின் நட்சத்திர விரர்!

தற்போது இந்திய அணி கரீபியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக விளையாடிக்கொண்டிருக்கிறது. 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 சர்வதேச போட்டிகள் அடங்கிய இந்த சுற்றுப் பயணத்தில் கோலி பங்கெடுக்கவில்லை. அடுத்து இந்திய அணி கலந்துகொள்ளவிருக்கும் ஜிம்பாப்வே சுற்றுப் பயணத்துக்கும் அவர் இல்லை.

சமீபத்தில் ஒரு பேட்டியில் இதுபற்றிப் பேசியபோது விராட் கோலிக்கு ஆதரவு அளித்திருக்கிறார் ஷிகர் தவான். விராட் கோலி மட்டுமல்லாது ரோஹித் ஷர்மா போன்ற முன்ன்ணி வீரர்களும் இந்திய அணியின் ரொடேஷன் பாலிசியால் ஓய்வு பெறுகிறார்கள் என்பதைக் குறிப்பிட்டிருக்கிறார் அவர்.

கிரிக்கெட் வீரர்களும் மனிதர்கள் தான்.. விராட் கோலிக்கு ஆதரவாக பேசிய இந்திய அணியின் நட்சத்திர விரர்!

"தன்னுடைய மிகச் சிறந்த செயல்பாட்டைக் கொடுப்பதற்கு ஒரு வீரருக்கு சரியான ஓய்வு தேவை. ஒரு வீரர் தொடர்ந்து ஓய்வே இல்லாமல் விளையாடிக்கொண்டிருந்தால் உளவியல் ரீதியாக அவர் மிகவும் சோர்வடைந்துவிடுவார். அதனால் உளவியல் ரீதியான ஓய்வு ஒவ்வொருவருக்கும் மிகவும் அவசியம். அதனால்தான் சர்வதேச கிரிக்கெட்டில் வீரர்களுக்கு ஓய்வு கொடுப்பதற்காக இப்போது ரொடேஷன் பாலிசி அதிகமாக கடைபிடிக்கப்படுகிறது. ஒரு வீரர் எல்லா இடங்களுக்கும் பயணித்துக்கொண்டே இருந்தால் சோர்வடைந்துவிடுவார். யோசித்துப் பாருங்கள், கிரிக்கெட் வீரர்களும் மனிதர்கள் தான். மேலே நிர்வாகத்தில் இருப்பவர்கள் இதைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அதனால்தான் சரியான பேலன்ஸ் கிடைப்பதற்காக சரியாகத் திட்டமிட்டு இதை செய்துகொண்டிருக்கிறார்கள்" என்று கூறினார் தவான்.

விராட் கோலி மட்டுமல்ல, இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மாவுமே ஒரு சில போட்டிகளைத் தவறவிட்டார். ஐபிஎல் 2022 தொடருக்குப் பிறகு இந்திய அணியின் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணத்தில் மட்டுமே அவர் கலந்துகொண்டார். அதுவும் டி20 தொடர் மட்டுமே. அந்த ஒருநாள், ஜிம்பாப்வே சுற்றுப் பயணம் போன்றவற்றில் இந்திய அணியை ஷிகர் தவான் தான் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories