விளையாட்டு

"இவருக்கு இது தேவையில்லாத வேலை, இப்படியா செய்வது?" -டிராவிட்டை விமர்சித்த முன்னாள் இந்திய வீரர்!

முதலாவது டி.20 போட்டியில் இந்திய அணி துவக்க வீரராக சூர்யகுமார் யாதவ் களமிறக்கப்பட்டதை முன்னாள் இந்திய வீரர் முகமது கைப் விமர்சித்துள்ளார்.

"இவருக்கு இது தேவையில்லாத வேலை, இப்படியா செய்வது?" -டிராவிட்டை விமர்சித்த முன்னாள் இந்திய வீரர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மேற்கு இந்திய தீவுகள் அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை பெற்றுள்ளது. இந்த இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி.20 போட்டி ஆகஸ்ட் 1ம் தேதி நடைபெற உள்ளது.

"இவருக்கு இது தேவையில்லாத வேலை, இப்படியா செய்வது?" -டிராவிட்டை விமர்சித்த முன்னாள் இந்திய வீரர்!

முதலாவது டி.20 போட்டியில் இந்திய அணி துவக்க வீரராக சூர்யகுமார் யாதவ் களமிறக்கப்பட்டார். அதேபோல கடந்த தொடர்களில் சிறப்பாக ஆடிவந்த தீபக் ஹூடாவுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. அணி கேப்டன் ரோஹித் மற்றும் பயிற்சியாளர் டிராவிட்டின் இந்த முடிவை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் முன்னாள் இந்திய வீரர் முகமது கைப்பும் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "சூர்யகுமார் யாதவை துவக்க வீரராக களமிறக்கியது ஏன் என்பதை புரிந்து கொள்ளவே முடியவில்லை. சில போட்டிகளில் ரிஷப் பண்ட்டை துவக்க வீரராக களமிறக்கிய இந்திய அணி, இந்த முறை அவரை துவக்க வீரராக களமிறக்காமல் சூர்யகுமார் யாதவை களமிறக்கினார்கள் என்பது தெரியவில்லை.

"இவருக்கு இது தேவையில்லாத வேலை, இப்படியா செய்வது?" -டிராவிட்டை விமர்சித்த முன்னாள் இந்திய வீரர்!

கேப்டன் ரோஹித் சர்மாவும், பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் புதிதாக முயற்சி எடுக்க நினைத்தால், குறைந்தது 5-6 போட்டிகளிலாவது வீரர்களுக்கு சரியான வாய்ப்பை வழங்க வேண்டும். சூர்யகுமார் யாதவ் மிடில் ஆர்டரில் களமிறங்கி போட்டியின் தன்மைக்கு ஏற்ப விளையாடக்கூடியவர். அவரால் இறுதி வரை களத்தில் இருந்து போட்டியை வெற்றிகரமாக முடித்து கொடுக்க முடியும். சூர்யகுமார் யாதவ் நான்காவது இடத்தில் களமிறங்குவதே அவருக்கும், இந்திய அணிக்கும் பயனுள்ளதாக இருக்கும்' என்று தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories