விளையாட்டு

தீபக் ஹூடா ஒரு சிறந்த வீரர்.. சர்டிபிகேட் கொடுக்கும் இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர்!

தீபக் ஹூடா ஒரு சிறந்த வீரர் என இந்திய அணியில் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் பாராட்டியுள்ளார்.

தீபக் ஹூடா ஒரு சிறந்த வீரர்.. சர்டிபிகேட் கொடுக்கும் இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கௌதம் கம்பீர் - இந்தியாவின் மிகச் சிறந்த ஓப்பனர்களுள் ஒருவர் மட்டுமல்ல. திறமைகளைக் கண்டறிவதிலும் வல்லவர் அவர். தொடக்க காலத்தில் இருந்தே ரிஷப் பண்டை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார் கம்பீர். இன்று இந்தியாவின் மிகச் சிறந்த நம்பிக்கையாக உருவெடுத்திருக்கிறார் பண்ட். ஒவ்வொரு நாளும் அவருடைய மதிப்பு பன்மடங்கு அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அதேபோல் சஞ்சு சாம்சன் மீதும் பெரும் நம்பிக்கை கொண்டவர் கம்பீர். பண்ட் போல் இந்தியாவில் அவருக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் ஒன்று இருக்கிறது.

சமீப காலத்தில் நவ்தீப் சைனி, சூர்யகுமார் யாதவ் ஆகியோரையும் அதீதமாகவே பாராட்டியிருக்கிறார். ஆனால் இப்போது லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஐபிஎல் அணியின் ஆலோசகராக இருக்கும் கம்பீர் வேறொரு இளம் வீரரின் திறமையை தொடர்ந்து பரைசாற்றிக் கொண்டிருக்கிறார். அது தீபக் ஹூடா. அவர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடுவதைப் பார்த்து ஹூடாவை பாராட்டியிருக்கிறார் அவர். பரோடாவைச் சேர்ந்தவரான தீபக் ஹூடா, 2022 ஐபிஎல் தொடரில் லக்னோ சூபப்ர் ஜெயிண்ட்ஸ் அணிக்காக விளையாடினார். இத்தொடரில் 451 ரன்கள் குவித்து அசத்தினார் அவர். தன்னுடைய அந்த சிறப்பான ஃபார்மை சர்வதேச அரங்கிலும் தொடர்ந்தார் அவர். அயர்லாந்து அணிக்கு எதிராக இந்தியா மோதிய சர்வதேச டி20 தொடரில் கோலிக்கு வழி விடும் வரை மிகவும் சிறப்பாக ஆடினார் ஹூடா.

தீபக் ஹூடா ஒரு சிறந்த வீரர்.. சர்டிபிகேட் கொடுக்கும் இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர்!

லக்னோ சூப்பர்ஜெயிண்ட்ஸ் அணியின் துணைப் பயிற்சியாளரும் இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பருமான விஜய் தாஹியா, தீபக் ஹூடாவின் இந்த அசுர வளர்ச்சியில் கௌதம் கம்பீரின் பங்களிப்பு அலப்பரியது என்று கூறியிருக்கிறார். ஐபிஎல் தொடரின்போது ஹூடாவுக்கு கம்பீர் அளவற்ற ஆதரவு கொடுத்ததாகவும் அவர் கூறியிருக்கிறார். லக்னோ அணியில் இணைவதற்கு முன்பு அவர் பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடிக் கொண்டிருந்தார். ஆனால் அங்கு அவரை சரியாகப் பயன்படுத்தவில்லை. ஆனால் லக்னோ அணியோடு இணைந்த பிறகு எல்லாம் மாறத் தொடங்கியது.

"என்ன நடந்தாலும் சரி நீ எல்லா போட்டிகளிலும் விளையாடுவாய் என்று ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்பே தீபக் ஹூடாவிடம் கூறினார் கௌதம் கம்பீர். அதைக் கேட்டதும் ஹூடாவுக்கு பெரிய அதிரச்சியாக இருந்தது. ஏனெனில் அதுவரை எந்த ஐபிஎல் அணியிடம் இருந்தும் அவருக்கு அப்படியொரு ஆதரவு கிடைக்கவில்லை" என்று கூறினார் தாஹியா.

தீபக் ஹூடா ஒரு சிறந்த வீரர்.. சர்டிபிகேட் கொடுக்கும் இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர்!

தனக்குக் கிடைத்த வாய்ப்பை மிகவும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார் தீபக் ஹூடா. இந்திய அணிக்காக அவர் விளையாடிய மூன்று போட்டிகளில் 47*, 104, 33 என அடித்துக் குவித்தார். டெர்பிஷயர் அணிக்கு எதிரான போட்டியிலும் 59 ரன்கள் அடித்து அசத்தினார் அவர்.

"அவர் எப்போதுமே கற்றுக்கொள்ளும் ஆர்வம் கொண்டவர். ஒவ்வொரு நாளும் முன்னேறவேண்டும் என்ற ஆசை கொண்டவர். அவர் பயிற்சி செய்வதிலேயே அவருடைய தாகம் நன்றாகத் தெரியும். சில நேரங்களில் அதிகமாகவே பயிற்சி செய்துவிடுவார். இந்த ஷார்ட் ஃபார்மட் எந்த நேரத்திலும் வீரர்களை ஏமாற்றி விடும். அதனால் அவரை சில நேரங்களில் குறைவாக பயிற்சி செய்யச் சொல்லி வலியுறுத்துவோம். ஏனெனில், இந்த மனநிலை இருக்கும்போது நீங்கள் நன்றாக சென்றுகொண்டிருந்தால் எந்த பிரச்சனையும் தெரியாது. அதேசமயம் பிரச்சனைகள் தெரியத் தொடங்கினால் அது சிக்கலாக மாறும். ஆனால் அவர் இதை கற்றுக்கொள்வார். இதுவும் கற்றுக்கொள்ளலின் அங்கம் தான்" என்றும் கூறியிருக்கிறார் தாஹியா.

banner

Related Stories

Related Stories