விளையாட்டு

31 வயதில் ஓய்வை அறிவித்துள்ள இங்கிலாந்து ALL ROUNDER! இந்திய வீரர்களின் நிலை என்ன?

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகப் பிரபல இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

31 வயதில் ஓய்வை அறிவித்துள்ள இங்கிலாந்து ALL ROUNDER! இந்திய வீரர்களின் நிலை என்ன?
Clive Mason
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

31 வயதான இங்கிலாந்து வீரர் பெண் ஸ்டோக்ஸ், 83 டெஸ்டுகள், 104 ஒருநாள், 34 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஜோ ரூட்டின் விலகளுக்கு பின்னர் டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டார்.

அதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் 0, 21, 27 என ரன்கள் எடுத்தார். ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. இதனால் அவர் மீது இங்கிலாந்து பத்திரிகைகள் கடும் விமர்சனம் வைத்தன.

இந்நிலையில் இது தொடர்பாக கடும் அதிருப்தியில் இருந்த அவர், ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகத் திடீரென அறிவித்துள்ளார்.

31 வயதில் ஓய்வை அறிவித்துள்ள இங்கிலாந்து ALL ROUNDER! இந்திய வீரர்களின் நிலை என்ன?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்துக்குப் பிறகு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக வெளிப்படையாக அவர் அறிவித்துள்ளார். மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்பது கடினமாக இருப்பதால் இம்முடிவை எடுத்ததாக அவர் விளக்கமளித்துள்ளார்.

இந்தியாவில் மோசமாக ஆடினாலும் தனது நட்சத்திர அந்தஸ்து காரணமாக பல வீரர்கள் 35,37 வயது வரை விடாப்பிடியாக அணியில் ஆடி வருகின்றனர். இதன் காரணமாக பல இளம் வீரர்களின் திறன் வெளியே தெரியாமலே மறைந்து விடுகிறது. பலர் அணியின் இடம் பெற்றும் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் வெளியே அனுப்பப்படுகின்றனர்.

31 வயதில் ஓய்வை அறிவித்துள்ள இங்கிலாந்து ALL ROUNDER! இந்திய வீரர்களின் நிலை என்ன?

இது போன்ற சூழலில் இங்கிலாந்து வீரர்கள் தங்களால் தொடர்ந்து சிறப்பாக ஆடமுடியாது என்று உணர்ந்ததும் ஓய்வு பெறுவது பல காலமாக நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இங்கிலாந்து அணியின் அப்போதைய கேப்டன் மோர்கன் ஓய்வு பெற்ற நிலையில் தற்போது பென் ஸ்டோக்ஸ் ஓய்வை அறிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories