உலகம்

வெடித்துச் சிதறிய விமானம்.. பெரும் சத்தம் கேட்டதால் அதிர்ச்சி! கிராமமக்களுக்கு ராணுவம் எச்சரிக்கை!

நடுவானில் விமானம் வெடித்துச் சிதறியதில் 8 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெடித்துச் சிதறிய விமானம்.. பெரும் சத்தம் கேட்டதால் அதிர்ச்சி! கிராமமக்களுக்கு ராணுவம் எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நேற்று முன்தினம் ஐரோப்பிய நாடான செர்பியாவில் இருந்து வங்கதேசத்துக்கு உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான ஆன்&2 மெரிடியன் சரக்கு விமானம் சென்றுகொண்டிருந்தது.

இந்த விமானம் கிரீஸ் நாட்டின் கவாலா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 40 கி.மீட்டர் தொலைவில் பறந்துகொண்டிருந்தது. அப்போது விமானத்தின் என்ஜினில் பழுது ஏற்பட்டுள்ளதாக விமான பைலட் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்துள்ளார்.

வெடித்துச் சிதறிய விமானம்.. பெரும் சத்தம் கேட்டதால் அதிர்ச்சி! கிராமமக்களுக்கு ராணுவம் எச்சரிக்கை!

ஆனால் சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையோடு இருந்த தொடர்பை இழந்துள்ளது. உடனே இது தொடர்பாக போலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. போலிஸார் விமானம் காணாமல்போன இடத்தில சோதனை நடத்தியபோது, விமானம் எரிந்த நிலையில் தரையில் கிடந்துள்ளது. மேலும் அதில் பயணம் செய்த உக்ரைன் நாட்டை சேர்ந்த 8 பேர் உயிரிழந்தனர்.

பின்னர் இது தொடர்பாக அந்த பகுதியில் இருந்த கிராம மக்களிடம் விசாரணை நடத்தியபோது, விமானம் நடுவானில் விதித்து சிதறியதாகவும், பெரும் வெடிச்சத்தம் கேட்டதாகவும் கூறினர்.

வெடித்துச் சிதறிய விமானம்.. பெரும் சத்தம் கேட்டதால் அதிர்ச்சி! கிராமமக்களுக்கு ராணுவம் எச்சரிக்கை!

பின்னர் விமானத்தில் கொண்டுசெல்லப்பட்ட பொருள்கள் தொடர்பாக விசாரித்தபோது, பத்துக்குள்ளான விமானத்தில் 11.5 டன் எடை கொண்ட வெடி மருந்துகள் அனுப்பப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதன் காரணமாக விமானம் எரிந்துகிடந்த இடத்தின் அருகில் யாரும் செல்லவேண்டாம் என்று ராணுவம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories