விளையாட்டு

"டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் இதுவரை கண்டிராத சிறந்த ஆட்டம்".. இந்திய வீரர்களை பாராட்டிய AB De Villiers!

ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பண்ட் இருவரும் செய்த அந்த கவுண்ட்டர் அட்டாக், டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் பார்த்த மிகச் சிறந்த செயல்பாடுகளில் ஒன்று என தென்னாப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸ் பாராட்டியுள்ளார்.

"டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் இதுவரை கண்டிராத சிறந்த ஆட்டம்".. இந்திய வீரர்களை பாராட்டிய AB De Villiers!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

எட்ஜ்பாஸ்டன் நகரில் நடந்துவரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில், ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி வருகிறது இந்திய அணி. இங்கிலாந்து அணிக்கு 378 ரன்களை இலக்காக நிர்ணயித்திருக்கிறது பும்ராவின் அணி. ஆனால், முதல் நாள் இந்திய அணி இவ்வளவு ஆதிக்கம் செலுத்தவில்லை. ஒருகட்டத்தில் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 98 ரன்களே எடுத்திருந்தது. அப்படித் தடுமாறிக்கொண்டிருந்த இந்திய அணியை ரிஷப் பண்ட் - ரவீந்திர ஜடேஜா பார்ட்னர்ஷிப் மீட்டெடுத்தது. அவர்கள் இருவரும் இணைந்து 222 ரன்கள் குவித்து இந்திய அணியை நல்ல நிலைக்கு கொண்டுவந்தனர்.

"டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் இதுவரை கண்டிராத சிறந்த ஆட்டம்".. இந்திய வீரர்களை பாராட்டிய AB De Villiers!

தன்னுடைய அதிரடி ஆட்டத்துக்குப் பெயர் போன ரிஷப் பண்ட், அந்த கடினமான சூழ்நிலையில் இந்திய அணிக்காக மிகச் சிறப்பான செயல்பாட்டைக் கொடுத்தார். வெறும் 111 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர், 146 ரன்களை விளாசி அசத்தினார். அதேசமயம் ஜடேஜாவோ கணக்கிட்டு விளையாடினார். பண்ட் ஆடும் வரை அவருக்கு ஆதரவாக நிதானமாக விளையாடியவர், அதன்பிறகு அடித்து ஆடி நன்றாக சேர்த்தார். 13 பௌண்டரிகள் அடித்த அவர், 194 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அவர்களின் அந்த இன்னிங்ஸ்களுக்குப் பிறகு ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா இருவரும் தங்கள் செயல்பாட்டுக்கு கிரிக்கெட் உலகத்தில் பெரும் பாராட்டைப் பெற்றனர். தென்னாப்பிரிக்க கிரிக்கெட் ஜாம்பவான் ஏ பி டி வில்லியர்ஸும் இவர்கள் இருவரின் அந்த இன்னிங்ஸை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார். டிவிட்டரில் தன் பதிவில் இதுபற்றிப் பேசியிருக்கும் டி வில்லியர்ஸ், சமீப காலமாக நேரலையில் போட்டிகளைப் பார்க்க முடிவதில்லை என்று கூறியிருக்கிறார். இருந்தாலும் ஹைலைட்ஸில் இந்த இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் போட்டியைப் பார்த்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

இந்தப் போட்டியைப் பற்றிய தன் கருத்தைப் பதிவிட்டிருக்கும் டி வில்லியர்ஸ், கவுன்ட்டர் அட்டாக் செய்து ஆடிய ரிஷப் பண்ட் - ரவீந்திர ஜடேஜா பார்ட்னர்ஷிப், டெஸ்ட் போட்டிகளில் தான் பார்த்த மிகச் சிறந்த பார்ட்னர்ஷிப்களில் சிறந்த ஒன்று என்று கூறியிருக்கிறார்.

"நான் சமீபமாக அதிகம் வீட்டில் இருப்பதில்லை. அதனால் நிறைய கிரிக்கெட் ஆட்டங்களைப் பார்க்க முடியாமல் தவறவிட்டுவிடுகிறேன். இப்போதுதான் இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் ஹைலைட்ஸைப் பார்த்தேன். ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பண்ட் இருவரும் செய்த அந்த கவுண்ட்டர் அட்டாக், டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் பார்த்த மிகச் சிறந்த செயல்பாடுகளில் ஒன்று" என்று ட்வீட் செய்திருக்கிறார் டி வில்லியர்ஸ்

banner

Related Stories

Related Stories