விளையாட்டு

"இந்த 5 பேரால் டெஸ்ட் தொடரே ஆபத்தை சந்தித்தது"- இந்திய வீரர்கள் மீது ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் புகார்

2020-21 பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின்போது இந்திய வீரர்களின் செயலால் எரிச்சலடைந்ததாக ஆஸ்திரேலிய வீரர் டிம் பெயின் கூறியுள்ளார்.

"இந்த 5 பேரால் டெஸ்ட் தொடரே ஆபத்தை சந்தித்தது"- இந்திய வீரர்கள் மீது  ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் புகார்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு இடையே கடந்த 2020-21 ம் ஆண்டு நடந்த பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்தியா கைப்பற்றி பெரும் சாதனையை படைத்தது.

இந்த தொடரின்போது கொரோனா பாதுகாப்பு வளையத்தை மீறி இந்திய வீரர்களான ரோகித் சர்மா, ரிஷப் பந்த், சுப்மன்கில், பிரித்வி ஷா, நவ்தீப் சைனி ஆகியோர் ஓட்டலில் இருந்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

"இந்த 5 பேரால் டெஸ்ட் தொடரே ஆபத்தை சந்தித்தது"- இந்திய வீரர்கள் மீது  ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் புகார்

இந்த நிலையில் இந்த தொடரில் இந்திய பெற்ற வெற்றியை மையமாக வைத்து ஆவணப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. நீரஜ் பாண்டே இயக்கியுள்ள இந்த ஆவணப்படம் வூட் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஆஸ்திரேலிய தொடர் பற்றிய பல்வேறு காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதில் ஒரு பகுதியாக இந்த தொடர் குறித்து அப்போதைய ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெயின் உரையாடியுள்ளார். அதில் பேசிய அவர், ' பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியே சென்ற அந்த 4-5 பேரினால் டெஸ்ட் தொடரே ஆபத்துக்குள்ளானது. உண்மையாக சொல்ல வேண்டுமானால் ஒரு கப் சிக்கன், சிப்ஸ் அல்லது வேறு எதோ ஒன்றுக்காக இப்படி சுயநலமாக செயல்பட்டது தவறு.

"இந்த 5 பேரால் டெஸ்ட் தொடரே ஆபத்தை சந்தித்தது"- இந்திய வீரர்கள் மீது  ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் புகார்

எங்கள் அணியினர் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை குடும்பத்துடன் கொண்டாடாமல் கிரிக்கெட் விளையாட வந்திருந்தனர். அந்த தியாகம் எதிரணிக்கும் இருக்க வேண்டும். பொறுப்பில்லாமல் கொரோனா விதிகளை மீறி இந்திய வீரர்கள் செயல்பட்டது எங்களது அணிக்கு எரிச்சலாக இருந்தது" எனக் கூறியுள்ளார்.

டிம் பெயினின் இந்த கருத்து இணையத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து டிம் பெயினுக்கு ஆதரவாகவும், எதிராகவும் இணையவாசிகள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories