விளையாட்டு

#IPL 2022.. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதப்போவது யார்.. Eliminator சுற்றில் மோதும் LSG vs RCB!

இன்றைய ஐ.பி.எல் எலிமினேட்டர் போட்டியில் லக்னோ சூப்பர்ஜெயின்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

#IPL 2022..  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதப்போவது யார்.. Eliminator சுற்றில் மோதும் LSG vs RCB!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

எலிமினேட்டர்: லக்னோ சூப்பர்ஜெயின்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

இடம்: ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா

நேருக்கு நேர்: போட்டிகள்: 1

லக்னோ சூப்பர்ஜெயின்ட்ஸ் வெற்றி: 0

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றி: 1

முடிவு இல்லை: 0

சிறந்த பேட்டர்:

லக்னோ சூப்பர்ஜெயின்ட்ஸ்: கே.எல்.ராகுல் - 14 போட்டிகளில் 537 ரன்கள்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ஃபாஃப் டுப்ளெஸ்ஸி - 14 போட்டிகளில் 443 ரன்கள்

சிறந்த பௌலர்:

லக்னோ சூப்பர்ஜெயின்ட்ஸ்: அவேஷ் கான் - 12 போட்டிகளில் 17 விக்கெட்டுகள்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: வனிந்து ஹசரங்கா - 14 போட்டிகளில் 24 விக்கெட்டுகள்

2022 ஐபிஎல் தொடரில் இதுவரை: லீக் சுற்றின் 14 போட்டிகளில் லக்னோ சூப்பர்ஜெயின்ட்ஸ் அணி 9 வெற்றிகளைப் பதிவு செய்தது. 5 போட்டிகளில் தோல்வி அடைந்தது. மொத்தம் 18 புள்ளிகள் பெற்ற அந்த அணி, புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்தது. ரன்ரேட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை விட பின்தங்கியிருந்ததால் அந்த அணி மூன்றாம் இடமே பிடிக்க முடிந்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 14 போட்டிகளில் எட்டில் வெற்றி பெற்றது. ஆறு போட்டிகளில் தோல்வியடைந்தது. 16 புள்ளிகள் பெற்ற அந்த அணி, நான்காவது இடம் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி, குவாலிஃபயர் 1ல் தோல்வி அடையும் அணியோடு மோதும். அந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இந்தப் போட்டியில் தோற்கும் அணி தொடரிலிருந்து வெளியேறும்.

#IPL 2022..  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதப்போவது யார்.. Eliminator சுற்றில் மோதும் LSG vs RCB!

இந்த சீசனில் இவ்விரு அணிகளும் மோதிய முந்தைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ஃபாஃப் டுப்ளெஸ்ஸி 64 பந்துகளில் 96 ரன்கள் விளாசினார். துஷ்மந்தா சமீரா, ஜேசன் ஹோல்டர் இருவரும் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். அடுத்து பேட்டிங் செய்த லக்னோ சூப்பர்ஜெயின்ட்ஸ் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்கள் மட்டுமே எடுத்தது. குருனால் பாண்டியா 42 ரன்களும், கேஎல் ராகுல் 30 ரன்களும் எடுத்தனர். ஜோஷ் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அணியின் வெற்றிக்குப் பெரிதாக உதவினார். ஃபாஃப் டுப்ளெஸ்ஸி ஆட்ட நாயகன் விருது வென்றார்.

கடைசிப் போட்டியில்: லக்னோ சூப்பர்ஜெயின்ட்ஸ் அணி தங்கள் கடைசிப் போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, விக்கெட் ஏதும் இழக்காமல் 210 ரன்கள் குவித்தது. குவின்டன் டி காக் 70 பந்துகளில் 140 ரன்கள் குவித்து அசத்தினார். கேப்டன் கேஎல் ராகுல் 51 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். ஐபிஎல் வரலாற்றில் முதலில் பேட்டிங் செய்த அணி விக்கெட்டே இழக்காமல் 20 ஓவர்கள் ஆடியது இதுதான் முதல் முறை. அடுத்து விளையாடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது. ஷ்ரேயாஸ் ஐயர் 50, நித்திஷ் ராணா 42 ரன்கள் எடுத்தனர். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ரிங்கு சிங் 15 பந்துகளில் 40 ரன்கள் விளாசினார். லக்னோ தரப்பில் மோஷின் கான், மார்கஸ் ஸ்டாய்னிஸ் இருவரும் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தங்கள் கடைசி போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது. முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. ஜாஷ் ஹேசில்வுட் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அடுத்து விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 8 பந்துகள் மீதமிருக்கையில் இலக்கை எட்டியது. விராட் கோலி அதிகபட்சமாக 73 ரன்கள் எடுத்தார். டுப்ளெஸ்ஸி 44 ரன்களும், மேக்ஸ்வெல் 40 ரன்களும் எடுத்தனர்.

banner

Related Stories

Related Stories