விளையாட்டு

3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் - இது DK 2.0.. நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!

தினேஷ் கார்த்திக் இங்கிலாந்து சென்றபோது, ​​தமிழ்நாட்டு வீரர் என்பதில் இருந்து விலகிவிட்டதாக தோன்றியது.

3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் - இது DK 2.0.. நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நடப்பு ஐ.பி.எல். தொடருக்கான லீக் போட்டிகள் நடந்து முடிந்து ப்ளே ஆஃப் சுற்றுக்கு குஜராத், ராஜஸ்தான், லக்னோ, பெங்களூரு ஆகிய அணிகள் முன்னேறியிருக்கின்றன. நாளை (மே 24) முதல் ப்ளே சுற்றுக்கான போட்டி கொல்கத்தாவில் குஜராத்திற்கும், ராஜஸ்தானுக்கும் நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவுடனான 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்திருக்கிறது. அதில், ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் தினேஷ் கார்த்திக்கும் விக்கெட் கீப்பராக இடம்பெற்றிருக்கிறார்.

2021ம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் வர்ணனையாளர் குழுவில் இடம்பிடித்த தினேஷ் கார்த்திக் இங்கிலாந்து சென்றபோது, ​​தமிழ்நாட்டு வீரர் என்பதில் இருந்து விலகிவிட்டதாக தோன்றியது.

3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் - இது DK 2.0.. நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!

இருப்பினும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் எனும் பெயரில் இந்திய அணியின் ஜெர்ஸியை மீண்டும் அணிய வேண்டும் என்ற தனது கனவுகளை தினேஷ் கார்த்திக் ஒருபோதும் கைவிடவில்லை என்பது தற்போது தெளிவாகியுள்ளது.

கடைசியாக நடைப்பெற்ற சையது முஷ்டாக் அலி டிராபி மற்றும் விஜய் ஹசாரே டிராபி ஆகிய உள்நாட்டு போட்டிகளில் தமிழகத்திற்காக களமிரங்கிய தினேஷ் கார்த்திக் 8 போட்டிகளில் 376 ரன்கள் எடுத்தார், இதில் இறுதிப் போட்டி சதமும் அடங்கும். தொடர்ந்து ஐ.பி.எல். 2022 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தினேஷ் கார்த்திக் தற்போது இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் போட்டியில் இடம் பெற்றுள்ளார்.

2019 உலக கோப்பைக்கு பிறகு தனது மோசமான ஃபார்ம் காரணமாக இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்துவந்த தினேஷ் கார்த்திக் 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் இடம் பெற்றிருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் t20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றதை அடுத்து ”உங்களை நீங்கள் முழுவதுமாக நம்பினால் நடக்க வேண்டியவை அனைத்தும் நடக்கும். அனைவரது ஆதரவுக்கும் நன்றி. இந்த கடின உழைப்பு தொடரும்” என ட்விட்டரில் தினேஷ் கார்த்திக் குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவை பலரும் பகிர்ந்து அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

banner

Related Stories

Related Stories