விளையாட்டு

முக்கிய கட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்.. CSK-வை வீழ்த்தி Play Off வாய்ப்பை உறுதி படுத்துமா?

நாளை நடைபெறும் ஐ.பி.எல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது.

முக்கிய கட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்.. CSK-வை வீழ்த்தி Play Off வாய்ப்பை உறுதி படுத்துமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

போட்டி 68: ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்

இடம்: பிராபோர்ன் ஸ்டேடியம், மும்பை

நேருக்கு நேர்: போட்டிகள்: 25

ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி: 10

சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி: 15

முடிவு இல்லை: 0

சிறந்த பேட்டர்:

ராஜஸ்தான் ராயல்ஸ்: ஜாஸ் பட்லர் - 13 போட்டிகளில் 637 ரன்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட் - 13 போட்டிகளில் 366 ரன்கள்

சிறந்த பௌலர்:

ராஜஸ்தான் ராயல்ஸ்: யுஸ்வேந்திர சஹால் - 13 போட்டிகளில் 24 விக்கெட்டுகள்

சென்னை சூப்பர் கிங்ஸ்: டுவைன் பிராவோ - 10 போட்டிகளில் 16 விக்கெட்டுகள், முகேஷ் சௌத்ரி - 12 போட்டிகளில் 16 விக்கெட்டுகள்

2022 ஐபிஎல் தொடரில் இதுவரை:

இதுவரை 13 போட்டிகளில் விளையாடியிருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. 5 போட்டிகளில் தோற்றிருக்கிறது. 16 புள்ளிகள் பெற்றிருக்கும் அந்த அணி, புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால், அந்த அணி பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துவிடும். இரண்டாவது இடத்தில் இருக்கும் லக்னோவை விட நல்ல ரன்ரேட் வைத்திருப்பதால், இந்தப் போட்டியின் வெற்றி அந்த அணியை இரண்டாவது இடத்திற்கு எடுத்துச் செல்லும். அதன்மூலம் அந்த அணி குவாலிஃபயர் 1 போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெறும். நல்ல ரன்ரேட் வைத்திருப்பதால், இந்தப் போட்டியில் தோற்றாலும் அந்த அணி பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்கும். பிராபோர்ன் மைதானத்தில் இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலுமே அந்த அணி வெற்றி பெற்றிருக்கிறது.

முக்கிய கட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்.. CSK-வை வீழ்த்தி Play Off வாய்ப்பை உறுதி படுத்துமா?

நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் நான்கில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. ஒன்பது போட்டிகளில் தோல்வியைத் தழுவியிருக்கிறது. மொத்தம் எட்டு புள்ளிகளே பெற்றிருக்கும் அந்த அணி, புள்ளிப் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் அந்த அணி பத்தாவது இடத்தைத் தவிர்க்க முடியும். இந்த சீசன், பிராபோர்ன் மைதானத்தில் விளையாடிய இரண்டு போட்டிகளிலுமே சூப்பர் கிங்ஸ் தோற்றிருக்கிறது.

கடைசிப் போட்டியில்:

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தங்கள் கடைசிப் போட்டியில் லக்னோ சூப்பர்ஜெயின்ட்ஸ் அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. யஷஷ்வி ஜெய்ஸ்வால் 41 ரன்களும், தேவ்தத் படிக்கல் 39 ரன்களும் எடுத்தனர். அடுத்து விளையாடிய லக்னோ சூப்பர்ஜெயின்ட்ஸ் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்களே எடுத்தது. டிரென்ட் போல்ட், பிரஷித் கிருஷ்ணா, ஒபெட் மெக்காய் மூவரும் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் தங்கள் கடைசிப் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோற்றது. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. இந்த சீசனில் முதல் வாய்ப்பைப் பெற்ற தமிழக வீரர் ஜெகதீசன் 33 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். அடுத்து விளையாடிய குஜராத் டைட்டன்ஸ், ஐந்து பந்துகள் மீதமிருக்கையில் அந்த இலக்கை அடைந்தது. சென்னைக்காக அறிமுகமான இலங்கை பௌலர் மதீஷ் பதிரானா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். மொயீன் அலி 1 விக்கெட் வீழ்த்தினார்.

மாற்றங்கள்:

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை. கடைசிப் போட்டி என்பதால், சென்னை அணியில் ஒருசில மாற்றங்கள் இருக்கலாம். ஒருவேளை இன்னும் சில வீரர்கள் தங்கள் முதல் வாய்ப்பைப் பெறலாம். இல்லையெனில், சீனியர்கள் மீண்டும் வரவழைக்கப்படலாம்.

banner

Related Stories

Related Stories