விளையாட்டு

”இந்த வெற்றி பயணம் தொடரும்” : சர்வதேச டென்னிஸ் அரங்கில் 1000வது வெற்றியை பதிவு செய்த ஜோகோவிச் நெகிழ்ச்சி!

உலக டென்னிஸ் அரங்கில் 1000வது வெற்றியை பதிவு செய்த ஜோகோவிச், இந்த வரிசையில் 5வது வீரராகவும் இணைந்தார்.

”இந்த வெற்றி பயணம் தொடரும்” : சர்வதேச டென்னிஸ் அரங்கில் 1000வது வெற்றியை பதிவு செய்த ஜோகோவிச் நெகிழ்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலக டென்னிஸ் அரங்கில் நம்பர் ஒன் இடத்தில் உள்ள செர்பிய வீரர் ஜோகோவிச் ஆயிரமாவது வெற்றியை பதிவு செய்துள்ளார். இந்த வெற்றியை பெற்றவர்கள் பட்டியலில் 5வது வீரராகவும் இணைந்துள்ளார்.

இத்தாலியின் ரோம் நகரில் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் அரையிறுதியில் நார்வே வீரர் Casper Ruud-யை நேர்செட்டில் வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி பெற்றார். இதன்மூலம், உலக டென்னிஸ் அரங்கில் 1000வது வெற்றியை பதிவு செய்த ஜோகோவிச், இந்த வரிசையில் 5வது வீரராகவும் இணைந்தார்.

முன்னதாக, ஜிம்மி connors, ரோஜர் ஃபெடரர், இவான் டெண்டில், ரஃபேல் நடால் ஆகியோர் 1000 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து நெகிழ்ந்த ஜோகோவிச், கடந்த வருடங்களில் ஃபெடரர், நடால் இருவரும் இந்த இலக்கை எட்டி மகிழ்ந்த தருணத்தை பார்த்தேன். நானும், என்னுடைய வாழ்வில் இந்த இலக்கை எட்ட வேண்டும் என்ற வேட்கையுடன் இருந்தேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, ஆயிரமாவது வெற்றியை பெற மிகவும் நீண்ட காலமானது. என்னுடைய வெற்றி பயணம் தொடரும் என்றார்.

banner

Related Stories

Related Stories