விளையாட்டு

“மீண்டும் வருவாரா..?” : ராஜஸ்தான் அணியை விட்டு திடீரென வெளியேறிய வீரர் - என்ன காரணம்?

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியை முடித்து விட்டு திடீரென ஷிம்ரன் ஹெட்மையர் தனது தாயகமான வெஸ்ட்இண்டீசுக்கு திரும்பியுள்ளார்.

“மீண்டும் வருவாரா..?” : ராஜஸ்தான் அணியை விட்டு திடீரென வெளியேறிய வீரர் - என்ன காரணம்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஐ.பி.எல்-லில் 15 வது சீசன் மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கிட்டதட்ட 70 போட்டிகளையும் தாண்டி லீக் சுற்று உச்சகட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகளோடு ஆரம்பமான தொடர் பல ஸ்வாரஸ்யங்களுடன் நடந்துக் கொண்டிருக்கிறது. சாம்பியன் அணிகள் என்று கூறப்பட்ட மும்பை,சென்னை அணிகள் தொடர் தோல்விகள் காரணமாக புள்ளி பட்டியலில் கடைசி இடங்களில் உள்ளது. புதிதாக களம் இறங்கியுள்ள இரு அணிகளும் முதல் இரண்டு இடங்களில் முன்னிலையில் உள்ளது.

கடந்த வருடம் எல்லா போட்டிகளிலும் சொதப்பியது ராஜஸ்தான் அணி. அதன் காரணமாக நெட்டிசன்களால் ஆராரோ அணி RR அணி என கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானது. ஆனால் இந்த வருடம் மெகா ஏலத்தில் இருந்தே அதிகம் பார்வைக்குள்ளானது ராஜஸ்தான் அணி தான்.

வீரர்களை ஏலத்தில் எடுத்தது, முதல் போட்டியில் வெற்றியை கைப்பற்றியது என எல்லாவற்றிலும் சிறந்த அணியாக ராஜஸ்தான் அணி திகழ்ந்தது. எல்லா அணிகளும் Chasing-இல் வெற்றியைக் கைப்பற்ற , கைவசம் இருக்கும் டாப் பவுலகர்களை வைத்து அதிகமாக Defend செய்து வெற்றியைக் கைப்பற்றத் தொடங்கியது ராஜஸ்தான் அணி.

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி 14 புள்ளிகளோடு புள்ளிப் பட்டியலில் 3வது இடத்தில் இருக்கிறது. 2008-இல் வரலாற்றின் முதல் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியப் பிறகு தற்போது வரை ராஜஸ்தான் அணியால் அடுத்த கோப்பையை வெல்ல முடியவில்லை.

இந்த வருடம் எப்படியாவது 2 வது கோப்பையை வென்றே ஆகவேண்டும் என்ற முனைப்பில் விளையாடி வருகிறது. கிட்டதட்ட Orange Cap மற்றும் Purple Cap இரண்டும் ராஜஸ்தான் அணி வீரர்களிடம் தான் இருக்கிறது.

பினிஷர் ஹெட்மயர்:

ராஜஸ்தான் அணியின் தொடர் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஷிம்ரன் ஹெட்மயரும் ஒருவர். பந்து வீச்சில் ட்ரெண்ட் போல்ட், சஹல்,அஸ்வின், பிரசீத் என அனைவரும் துருப்பு சீட்டாக இருக்க, பேட்டிங்கில் ஜாஸ் பட்லர் எதிரணி பவுலர்களை திக்குமுக்காட வைத்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் மிடிலில் விளையாடும் எந்த வீரர்களும் அவர்களின் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இப்படி மிடிலில் தடுமாறினாலும் கடைசி நேரத்தில் களமிறங்கும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷிம்ரன் ஹெட்மயர் அதிரடி சரவெடியாக வெடித்து போட்டியை ஃபினிஷ் செய்து வருகிறார். பஞ்சாப்பிற்கு எதிரான கடைசி ஆட்டத்தில் இக்கட்டான சூழலில் களமிறங்கிய ஹெட்மயர் 16 பந்துகளில் 31 ரன்களை எடுத்து அதிரடி ஃபினிஷிங் செய்து வெற்றியை கைப்பற்றினார் .

அந்த வகையில் இந்த வருடம் 11 போட்டிகளில் 166 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி 291 ரன்களை எடுத்துள்ளார். சுமார் 72.75 பேட்டிங் சராசரியை வைத்துள்ளார்.

ராஸ்தான் அணியை விட்டு வெளியேறிதன் காரணம்:

ராஜஸ்தான் அணி வெற்றி நடைபோட்டு நாக்-அவுட் சுற்றை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியை முடித்து விட்டு திடீரென ஷிம்ரன் ஹெட்மையர் தனது தாயகமான வெஸ்ட்இண்டீசுக்கு திரும்பியுள்ளார். அவரின் மனைவி இன்னும் ஒரு சில நாட்களில் தனது முதல் குழந்தையை பெற்றெடுக்க உள்ளதன் காரணமாக அந்த சிறப்பான தருணத்தின் போது அவருடன் இருக்க நினைத்த ஹெட்மையர் அதற்காக ராஜஸ்தான் அணி நிர்வாகத்திடம் அனுமதியைப் பெற்று தாயகம் திரும்பியுள்ளார்.

ஒருபக்கம் இது மகிழ்ச்சி அளித்தாலும், இன்னொரு பக்கம் அடுத்து வரப்போகும் போட்டிகளில் ஹெட்மயரின் பங்கு இல்லாதது அணியை பாதிக்குமா அன்ற பயம் ஏற்பட்டுள்ளது. இன்னும் பிளே ஆஃபிற்கு செல்ல 3 முக்கியமான போட்டிகள் இருக்கும் நிலையில் ரசிகர்கள் ஹெட்மயர் மீண்டும் வருவாரா என்ற எதிர்ப்பார்ப்போடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

banner

Related Stories

Related Stories