போட்டி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ்
இடம்: மஹாராஷ்டிரா கிரிக்கெட் அசோஷியேஷன் ஸ்டேடியம், புனே.
நேருக்கு நேர்: போட்டிகள்: 29
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றி: 9
சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி: 19
முடிவு இல்லை: 1
சிறந்த பேட்டர்:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ஃபாஃப் டுப்ளெஸ்ஸி - 10 போட்டிகளில் 278 ரன்கள்
சென்னை சூப்பர் கிங்ஸ்: ஷிவம் தூபே - 8 போட்டிகளில் 247 ரன்கள் சிறந்த பௌலர்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: வனிந்து ஹசரங்கா - 10 போட்டிகளில் 15 விக்கெட்டுகள்
சென்னை சூப்பர் கிங்ஸ்: டுவைன் பிராவோ - 8 போட்டிகளில் 14 விக்கெட்டுகள்.
2022 ஐபிஎல் தொடரில் இதுவரை: 10 போட்டிகளில் விளையாடியிருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐந்து வெற்றிகளையும், ஐந்து தோல்விகளயும் பதிவு செய்திருக்கிறது. 10 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் ஐந்தாம் இடம் (மே 2 நிலவரப்படி) பெற்றிருக்கிறது அந்த அணி. 7 போட்டிகளின் முடிவிலேயே 10 புள்ளிகள் பெற்றிருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, தொடர்ந்து 3 தோல்விகளைச் சந்தித்திருக்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் அந்த அணி நான்காம் இடத்துக்கு முன்னேறும். புனே மைதானத்தில் விளையாடியிருக்கும் 2 போட்டிகளில் தலா 1 வெற்றியையும் 1 தோல்வியையும் சந்தித்திருக்கிறது. இதுவரை 9 போட்டிகளில் விளையாடியிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ், 3 போட்டிகளில் மட்டும் தான் வெற்றி பெற்றிருக்கிறது.
6 போட்டிகளில் தோற்றிருப்பதால், வெறும் 6 புள்ளிகளோடு புள்ளிப் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது அந்த அணி. இந்த அணியும் புனே மைதானத்தில் விளையாடியிருக்கும் 2 போட்டிகளில் தலா 1 வெற்றியையும் 1 தோல்வியையும் சந்தித்திருக்கிறது. இந்த சீசன், இந்த 2 அணிகளும் மோதிய முந்தைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் வென்று தான், இந்த சீசனின் முதல் வெற்றியைப் பதிவு செய்தது சிஎஸ்கே. முதலில் பேட்டிங் செய்த சூப்பர் கிங்ஸ், 4 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் குவித்தது. உத்தப்பா 88 ரன்களும், ஷிவம் தூபே 95 ரன்களும் விளாசினர். அடுத்து விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 9 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது. டாப் ஆர்டர் சொதப்பினாலு, ஷபாஸ் அஹமது, சூயஷ் பிரபுதேசாய், தினேஷ் கார்த்திக் ஆகியோர் அதிரடியாக ஆடி நல்ல ஸ்கோர் வர உதவினர். சென்னை தரப்பில் சுழற்பந்துவீச்சாளர்கள் மஹீஷ் தீக்ஷனா 4 விக்கெட்டுகளும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
கடைசிப் போட்டியில்: கடைசிப் போட்டியில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கெதிராக விளையாடியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. அந்தப் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. விராட் கோலி, ரஜாத் படிடார் ஆகியோர் அரைசதம் அடிக்க, 6 விக்கெட்டுகள் இழப்புகு 170 ரன்கள் எடுத்தது அந்த அணி. இந்த இலக்கை 3 பந்துகள் மீதம் வைத்து சேஸ் செய்தது குஜராத் டைட்டன்ஸ். ஹபாஸ் அஹமது, வனிந்து ஹசரங்கா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான தங்கள் கடைசி போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த சூப்பர் கிங்ஸ், 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. ருதுராஜ் கெய்க்வாட் 99 ரன்களும், டெவன் கான்வே 85 ரன்களும் எடுத்தனர். அடுத்து விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் சௌத்ரி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
மாற்றங்கள்: இரண்டு அணிகளிலும் மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை.
பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ஃபாஃப் டுப்ளெஸ்ஸி (C), விராட் கோலி, ரஜாத் படிடார், கிளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், ஷபாஸ் அஹமது, தினேஷ் கார்த்திக் (WK), வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், ஜாஷ் ஹேசில்வுட், முகமது சிராஜ்.
சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, மிட்செல் சான்ட்னர், ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ்.தோனி (WK) (C), டுவைன் பிரிட்டோரியஸ், மஹீஷ் தீக்ஷனா, முகேஷ் சௌத்ரி, சிமர்ஜித் சிங்.