விளையாட்டு

யுஸ்வேந்திர சஹாலின் சுழலில் சிக்குமா அல்லது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துமா கொல்கத்தா? இன்று KKR vs RR!

இன்றைய ஐ.பி.எல் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

யுஸ்வேந்திர சஹாலின் சுழலில் சிக்குமா அல்லது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துமா கொல்கத்தா? இன்று KKR vs RR!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

போட்டி: கொல்கத்தா நைட்ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்

இடம்: வான்கடே மைதானம், மும்பை

நேருக்கு நேர்: போட்டிகள்: 25

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் வெற்றி: 13

ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி: 12

முடிவு இல்லை: 0

சிறந்த பேட்டர்:

கொல்கத்தா நைட்ரைடர்ஸ்: ஷ்ரேயாஸ் ஐயர் - 9 போட்டிகளில் 290 ரன்கள்

ராஜஸ்தான் ராயல்ஸ்: ஜாஸ் பட்லர் - 9 போட்டிகளில் 566 ரன்கள்

சிறந்த பௌலர்:

கொல்கத்தா நைட்ரைடர்ஸ்: உமேஷ் யாதவ் - 9 போட்டிகளில் 14 விக்கெட்டுகள்

ராஜஸ்தான் ராயல்ஸ்: யுஸ்வேந்திர சஹால் - 9 போட்டிகளில் 19 விக்கெட்டுகள்

2022 ஐபிஎல் தொடரில் இதுவரை: இதுவரை 9 போட்டிகளில் விளையாடியிருக்கும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. வெற்றியோடு சீசனைத் தொடங்கிய அந்த அணி 6 போட்டிகளில் தோற்றிருக்கிறது. 6 புள்ளிகள் மட்டுமே பெற்றிருப்பதால், புள்ளிப் பட்டியலில் எட்டாவது இடத்தில் (ஏப்ரல் 30-ன் படி) அந்த அணி. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் ஆறாவது இடம் வரை முன்னேறலாம். வான்கடே மைதானத்தில் இதுவரை 3 போட்டிகளில் விளையாடியிருக்கும் அந்த அணி, 2 வெற்றியும் ஒரு தோல்வியும் சந்தித்திருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் 9 போட்டிகளில் விளையாடியிருக்கிறது.

ஆனால், அவர்களின் வெற்றி தோல்வி எண்ணிக்கை, கொல்கத்தாவுக்கு தலைகீழாக இருக்கிறது - 6 வெற்றிகள், 3 தோல்விகள். 12 புள்ளிகளோடு அந்த அணி புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் (ஏப்ரல் 30-ன் படி) இருக்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் ராஜஸ்தான் ராயல்ஸ் இரண்டாவது இடத்துக்கு முன்னேறும். இந்த அணியும் வான்கடே மைதானத்தில் 3 போட்டிகளில் விளையாடி 2 வெற்றியும், 1 தோல்வியும் சந்தித்திருக்கிறது. இந்த சீசன், இவ்விரு அணிகளும் மோதிய முந்தைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான், ஜாஸ் பட்லர் சதமடித்ததில் 217 ரன்கள் குவித்தது. அதை சிறப்பாக சேஸ் செய்துகொண்டிருந்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ், யுஸ்வேந்திர சஹாலின் சுழலில் சிக்கி ஒரே ஓவரில் வெற்றியை இழந்தது. சஹால் ஹாட்ரிக் விக்கெட்டுகள் உள்பட 5 விக்கெட்டுகள் வீழ்த்த, கொல்கத்தா 210 ரன்களே எடுத்தது.

கடைசிப் போட்டியில்: கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி தங்கள் கடைசி போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது. அந்த அணி முதலில் பேட்டிங் செய்து 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்களே எடுத்தது. அதை 19-வது ஓவர் முடிவிலேயே சேஸ் செய்தது டெல்லி கேபிடல்ஸ். ராஜஸ்தான் ராயல்ஸும் தங்கள் கடைசிப் போட்டியில் தோல்வியையே சந்தித்தது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது அந்த அணி.

மாற்றங்கள்: கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் ஆரோன் ஃபின்ச் நீக்கப்பட்டு பேட் கம்மின்ஸ் கொண்டுவரப்படலாம். கம்மின்ஸ் ஃபிட்டாக இல்லையெனில், சாம் பில்லிங்ஸை களமிறக்கலாம். பில்லிங்ஸ் இறங்கினால், பாபா இந்திரஜித் இடத்தில் அஜிங்க்யா ரஹானே விளையாடவும் வாய்ப்பிருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் டேரில் மிட்செல் இடத்தில் ஜேம்ஸ் நீஷம் இறக்கப்படலாம்.

பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்:

கொல்கத்தா நைட்ரைடர்ஸ்: வெங்கடேஷ் ஐயர், அஜிங்க்யா ரஜானே / பாபா இந்திரஜித் (WK), ஷ்ரேயாஸ் ஐயர் (C), நித்திஷ் ராணா, ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸல், பேட் கம்மின்ஸ் / சாம் பில்லிங்ஸ் (WK), சுனில் நரைன், டிம் சௌதி, உமேஷ் யாதவ், ஹர்ஷித் ராணா

ராஜஸ்தான் ராயல்ஸ்: ஜாஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (C) (WK), ரியான் பரக், ஷிம்ரன் ஹிட்மெயர், டேரில் மிட்செல் / ஜேம்ஸ் நீஷம், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சஹால், குல்தீப் சென்

banner

Related Stories

Related Stories