விளையாட்டு

டெல்லியின் ரன் குவிப்புக்கு காரணமான உமேஷ் யாதவ்.. ரன்களை வாரி வழங்கியதற்கு காரணம் என்ன?

டெல்லி அணி இவ்வளவு பெரிய ஸ்கோரை எட்டியதற்கு கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் மிக முக்கிய காரணமாக இருந்துள்ளார்.

டெல்லியின் ரன் குவிப்புக்கு காரணமான உமேஷ் யாதவ்.. ரன்களை வாரி வழங்கியதற்கு காரணம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டியில் டெல்லி அணி முதலில் பேட் செய்தது. சிறப்பாக ஆடிய அந்த அணி 215 ரன்களை எடுத்திருந்தது. இந்த சீசனில் இதுவரை நடந்திருக்கும் போட்டிகளில் ஓர் அணி எடுத்திருக்கும் அதிகபட்ச ஸ்கோர் இது. டெல்லி அணி இவ்வளவு பெரிய ஸ்கோரை எடுத்ததற்கு கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் மிக முக்கிய காரணமாக இருந்துள்ளார்.

பேட் கம்மின்ஸ் மற்றும் வருண் சக்கரவர்த்தி என கொல்கத்தா அணியின் ஒட்டுமொத்த பந்துவீச்சு குழுவுமே சுமாராக செயல்பட்டிருக்கும்போது, உமேஷ் யாதவின் பந்துவீச்சை குறிப்பிட்டு விமர்சிக்கவேண்டிய தேவை என்ன இருக்கிறது? ஏனெனில், உமேஷ் யாதவ்தான் இந்த சீசனில் இதுவரை மிகச்சிறப்பாக செயல்பட்ட பௌலராக இருக்கிறார். பர்ப்பிள் நிற தொப்பியும் அவரிடம்தான் இருக்கிறது. அதனால்தான் அவரின் பெர்ஃபார்மென்ஸ்களுக்கு அதிக கவனம் கொடுக்க வேண்டியிருக்கிறது.

முதல் நான்கு போட்டிகளில் உமேஷ் யாதவின் செயல்பாடுகள் கீழே, Vs CSK - 4 ஓவர்கள் வீசி 20 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். கடந்த சீசனின் ஆரஞ்சு தொப்பியை வென்றிருந்த ருத்துராஜை டக் அவுட் ஆக்கியிருந்தார்.

Vs RCB - 4 ஓவர்கள் வீசி 16 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். விராட் கோலியை நான்கே பந்துகளில் அவுட் ஆக்கியிருந்தார்.

டெல்லியின் ரன் குவிப்புக்கு காரணமான உமேஷ் யாதவ்.. ரன்களை வாரி வழங்கியதற்கு காரணம் என்ன?

Vs PBKS - 4 ஓவர்கள் வீசி 23 ரன்களை கொடுத்து ஒரு மெய்டனோடு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ஐ.பி.எல் கரியரில் அவரின் பெஸ்ட் பெர்ஃபார்மென்ஸ் இது. கேப்டன் மயங்க் அகர்வாலின் விக்கெட்டை முதல் ஓவரிலேயே வீழ்த்தியிருந்தார்.

Vs MI - 4 ஓவர்கள் வீசி 25 ரன்களை கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். கேப்டன் ரோஹித் சர்மாவின் விக்கெட்டை ஷார்ட் பிட்ச் டெலிவரியில் வீழ்த்தியிருந்தார். 4 போட்டிகளிலும் சராசரியாக அவரின் எக்கானமி 5 ஐ சுற்றியே இருந்தது. 9 விக்கெட்டுகளோடு பர்ப்பிள் கேப்பையும் அவர்தான் வைத்திருந்தார்.

ஆனால், இன்று டெல்லிக்கு எதிரான போட்டியில் அப்படியே தலைகீழாக பயங்கரமாக பந்துவீசியிருக்கிறார். 4 ஓவர்களில் 48 ரன்களை கொடுத்திருந்தார். இதற்கு மிக முக்கிய காரணம், அவர் டெத் ஓவர்களில் இரண்டு ஓவர்களை வீசியிருந்தார். 17 மற்றும் 19 வது ஓவரை வீசியவர், 19 வது ஓவரில் மட்டும் 23 ரன்களை கொடுத்திருந்தார். ஷர்துல் தாகூர் மற்றும் அக்சர் படேல் இருவரும் பிரித்தெடுத்தார்கள். ஷர்துல் தாகூர் இரண்டு சிக்சர்களையும் அக்சர் படேல் ஒரு சிக்சரையும் அடித்திருந்தார். சிவப்பு ஜெர்சியில் பழைய உமேஷ் யாதவ் கொஞ்சம் கண் முன் வந்து போனார்.

பவர்ப்ளேயிலேயே உமேஷை பிரதானமாக வீச வைத்து கொல்கத்தா காரியத்தை சாதித்துக் கொண்டிருந்தது. உமேஷ் யாதவ் அடக்க ஒடுக்கமாக வீசியிருந்த முதல் 4 போட்டிகளிலும் சேர்த்தே டெத் ஓவரில் 1 ஓவரைத்தான் வீசியிருந்தார். ஆனால், இன்றைய போட்டியில் மட்டும் 2 ஓவர்களை வீசியிருக்கிறார்.

உமேஷ் யாதவ் டெத் ஓவரில் கொஞ்சம் பலவீனமானவர் என்பதால் அவரை கொல்கத்தா அணி பவர்ப்ளேயில் மட்டுமே பயன்படுத்தி வந்தது. இந்தப் போட்டியில் வேறு திட்டங்களுடன் கொஞ்சம் மாற்றி முயன்று பார்த்து கொல்கத்தா தோற்றிருக்கிறது. ஆனால், பெரிய பிரச்சனையில்லை. இப்போது முயன்று பார்க்காமல் எப்போது முயன்று பார்ப்பது?

banner

Related Stories

Related Stories