விளையாட்டு

“சிறிது தவறி இருந்தால் உயிர் போயிருக்கும்.. மும்பை வீரரால் இறந்திருப்பேன்” : ரகசியத்தை உடைத்த சஹால் !

மும்பை வீரரால் நான் இறந்திருப்பேன் என யுஷ்வேந்திர சஹால் கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“சிறிது தவறி இருந்தால் உயிர் போயிருக்கும்.. மும்பை வீரரால் இறந்திருப்பேன்” : ரகசியத்தை உடைத்த சஹால் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் யுஷ்வேந்திர சஹால். இவர் தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார். இதற்கு முன்பு நடைபெற்ற தொடர்களில் மும்பை அணியில் இடம் பெற்றிருந்தார்.

இந்நிலையில், மும்பை வீரரால் நான் இறந்திருப்பேன் என வீடியோ ஒன்றில் யுஷ்வேந்திர சஹால் பேசியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஐ.பி.எல் தொடரில் இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடிய யுஷ்வேந்திர சஹால் 7 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார். இந்நிலையில் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், சஹாலிடம் பேட்டி ஒன்று எடுத்துள்ளார்.

அதில் பேசிய அவர், "2013ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் நான் மும்பை அணியில் இடம் பெற்று இருந்தேன். அப்போது விடுதியில் நாங்கள் தங்கியிருந்தபோது சக வீரர் ஒருவர் குடிபோதையில் இருந்தார். அவர் திடீரென என்னை தூக்கி 15வது மாடி பால்கனியில் இருந்து கீழே தொங்க விட்டார்.

அன்று சிறிது தவறி இருந்தாலும் என் உயிர் போயிருக்கும். அங்கிருந்தவர்கள் தான் என்னை காப்பாற்றினார்கள் என தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை ராஜஸ்தான் அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக்கி வருகிறது.

banner

Related Stories

Related Stories