விளையாட்டு

“IPL-ல் இடமில்லை.. கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடப்போகும் புஜாரா” : முன்னணி அணிக்கு ஒப்பந்தம்!

இந்திய வீரர் சடேஷ்வர் புஜாரா இங்கிலாந்தின் கவுன்டி கிரிக்கெட்டில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

“IPL-ல் இடமில்லை.. கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடப்போகும் புஜாரா” : முன்னணி அணிக்கு ஒப்பந்தம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

இந்திய அணியின் முன்னணி வீரர் சடேஷ்வர் புஜாரா இங்கிலாந்தின் கவுன்டி கிரிக்கெட்டில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 2022 சீசனில் சசெக்ஸ் அணிக்காக கையெழுத்திட்டிருக்கிறார் புஜாரா. கவுன்டி போட்டிகள் முடிந்ததும் ஆகஸ்ட் இரண்டாம் தேதி தொடங்கும் ராயல் ஒருநாள் கோப்பையிலும் அவர் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு முன்பு யார்க்‌ஷயர் மற்றும் குளோசஸ்டர்ஷயர் அனிகளுக்காக விளையாடியிருக்கும் புஜாரா, 6 போட்டிகளில் விளையாடுவதற்காக ஏற்கெனவே ஒப்பந்தம் ஆகியிருந்தார். ஆனால், கொரோனாவின் காரணமாக அந்தப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன.

2021 ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்த புஜாரா, இந்த ஆண்டுக்கான ஏலத்திலும் பெயர் கொடுத்திருந்தார். ஆனால், எந்த அணியும் அவரை எடுக்கவில்லை. அதனால், இங்கிலாந்து சென்று கவுன்ட்டி போட்டிகளில் ஆடவிருக்கிறார் அவர். கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து சுமாராக விளையாடிக்கொண்டிருந்த புஜாரா, தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் பெரிதாக சோபிக்கவில்லை.

தற்போது நடந்துவரும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில், புஜாரா, ரஹானே ஆகியோரின் இடத்தில் ஹனுமா விஹாரி, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் விளையாடி வருகின்றனர். இருந்தாலும், அவர்கள் இருவருக்கும் தேசிய அணியின் கதவுகள் திறந்தே இருக்கும் என்று கூறியிருக்கிறார் இந்திய தேசிய அணியின் தேர்வுக்குழுத் தலைவர் சேத்தன் ஷர்மா.

சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவதாலும், குழந்தை பிறந்திருப்பதாலும் சசெக்ஸ் அணியிலிருந்து விலகினார் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட். அவருக்குப் பதிலாகத்தான் இப்போது புஜாரா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

“முதல் சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கும் சரியான நேரத்தில் புஜாரா அணியோடு இணைவார். ராயல் ஒருநாள் தொடர் முடியும் வரை இருப்பார்” என்று தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறது சசெக்ஸ்.

“வரலாற்றுச் சிறப்புமிக்க சசெக்ஸ் அணியோடு இணைந்து விளையாடுவதைப் பெருமையாக நினைக்கிறேன். அதற்காகக் காத்திருக்கிறேன். சசெக்ஸ் குடும்பத்தோடு இணையவும், அதன் கிரிக்கெட் பாரம்பரியத்தில் அங்கம் வகிக்கவும் காத்திருக்கிறேன். இதற்கு முன்பு இங்கிலாந்தில் கவுன்டி கிரிக்கெட் விளையாடியதை நான் பெரிதும் விரும்பியிருக்கிறேன். அதனால், இந்த கிளப்பின் வெற்றியில் பங்காற்றக் காத்திருக்கிறேன்” என்று கூறினார் புஜாரா.

banner

Related Stories

Related Stories