விளையாட்டு

தமிழக வீரர்களை நம்பி கோடிகளை கொட்டிய ஐ.பி.எல் அணிகள்... காரணம் என்ன?

ஐ.பி.எல் மெகா ஏலத்தில் தமிழக வீரர்களுமே அதிக கவனத்தை ஈர்த்திருந்தனர். சில தமிழக வீரர்கள் பெரிய டிமாண்ட்டோடு பல கோடிகளுக்கு வாங்கப்பட்டிருந்தனர்

தமிழக வீரர்களை நம்பி கோடிகளை கொட்டிய ஐ.பி.எல் அணிகள்... காரணம் என்ன?
• Twitter
• Facebook
• WhatsApp
Prem Kumar
Updated on

ஐ.பி.எல் மெகா ஏலத்தில் தமிழக வீரர்களுமே அதிக கவனத்தை ஈர்த்திருந்தனர். சில தமிழக வீரர்கள் பெரிய டிமாண்ட்டோடு பல கோடிகளுக்கு வாங்கப்பட்டிருந்தனர். சில வீரர்கள் அடிப்படை விலைக்கே வாங்கப்பட்டிருந்தாலும் அவர்களுக்கும் இது நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. ஏலத்தில் அணிகளால் வாங்கப்பட்ட தமிழக வீரர்கள் பற்றிய அலசல் இங்கே...

உள்ளூர் போட்டிகள்தான் இந்திய கிரிக்கெட்டின் உயிர்நாடி. அந்த வகையில், இந்திய உள்ளூர் தொடர்களிப் முக்கிய தொடர்களான விஜய் ஹசாரே மற்றும் சையத் முஷ்தாக் அலி தொடர் இரண்டிலுமே தமிழக அணி பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த இரண்டு தொடர்களுமே லிமிட்டெட் ஓவர் ஒயிட்பால் ஃபார்மட்டுகள். இதில், கடந்த இரண்டு வருடமாக சையத் முஷ்தாக் அலி டி20 தொடரை தமிழக அணியே வென்றிருக்கிறது. கடைசியாக நடந்த விஜய் ஹசாரே தொடரையும் தமிழக அணியே வென்றிருக்கிறது. இந்த தொடர்களில் கலக்கிய தமிழக வீரர்களுக்கு ஐ.பி.எல் ஏலத்தில் கூடுதல் எதிர்பார்ப்பு இருந்தது.

தமிழகத்தை சேர்ந்த கீழ்வரிசை வீரரான ஷாரூக்கான் பஞ்சாப் அணியால் 9 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்தார். சென்னை அணி உட்பட பல அணிகளும் இவருக்காக போட்டி போட்டிருந்தனர். கடந்த சையத் முஷ்தாக் அலி தொடரில் கர்நாடகாவிற்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் சிக்சர் அடித்து தமிழக அணியை சாம்பியனாக்கியிருப்பார். விஜய் ஹசாரே தொடரிலும் பல போட்டிகளில் கடைசிக்கட்ட ஓவர்களில் நல்ல அதிரடி காட்டி அணியை காப்பாற்றியிருப்பார். அந்த ஆட்டங்களே ஷாரூக்கானுக்கு ஒரு பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது. பல கோடிக்கு விலை போவார் என பல முன்னணி வீரர்களும் ஆருடம் கூறியிருந்தனர். அதேதான் நடந்திருக்கவும் செய்தது. கடந்த சீசனில் 5.25 கோடிக்கு ஷாரூக்கானை வாங்கிய அதே பஞ்சாப் இந்த முறை 9 கோடிக்கு அவரை வாங்கியிருக்கிறது.

ஷாரூக்கான்

ஷாரூக்கான்

அனுபவ வீரரான தினேஷ் கார்த்திக்கை பெங்களூரு அணி 5.5 கோடிக்கு வாங்கியிருந்தது. விக்கெட் கீப்பர் மற்றும் ஃபினிஷராக ஆடுவார் என்பதால் சென்னை அணியும் இவருக்கு கடுமையாக முயன்றிருந்தது. 5 கோடிக்கு மேல் சென்றதால் சென்னை கொஞ்சம் பின்வாங்க கடைசியில் பெங்களூரு அணியே வென்றது. தினேஷ் கார்த்திக் ஏற்கனவே பெங்களூரு அணிக்கு ஆடியிருக்கிறார். பெங்களூரு அணியின் கேப்டன் யார் என முடிவாகததால் தினேஷ் கார்த்திக் கேப்டன் ஆகவும் ஒரு வாய்ப்பிருக்கிறது.

தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்

ரவிச்சந்திரன் அஷ்வினை ராஜஸ்தான் அணி 5 கோடிக்கு வாங்கியுள்ளது. டெஸ்ட், ஓடிஐ, டி20 என 3 ஃபார்மட்டிலும் சரிவை சந்தித்து மூன்றிலுமே மீண்டெழுந்து கம்பேக் கொடுத்து நல்ல ஃபார்மில் இருக்கிறார். உலகக்கோப்பை அணியிலும் ஆடி தன்னை நிரூபித்திருக்கிறார். இந்திய ஒயிட்பால் ஃபார்மட்டில் தொடர்ந்து நீடிக்க அஷ்வின் இந்த ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தானுக்கு சிறப்பாக ஆடிக்கொடுத்தாக வேண்டும். அஷ்வினுடன் சஹாலையும் எடுத்திருப்பதால் ராஜஸ்தான் அணி பயங்கர உற்சாகத்தில் இருக்கிறது.

ரவிச்சந்திரன் அஷ்வின்

ரவிச்சந்திரன் அஷ்வின்

தமிழக வீரர் நடராஜனை அதே சன்ரைசர்ஸ் அணி 4 கோடிக்கு வாங்கியிருக்கிறது. 2020 ஐ.பி.எல் சீசனில் வீசிய யார்க்கர்கள் மூலம் நடராஜன் பிரபலமடைந்தார். அந்த 2020 சீசன் மூலம் ஒரே ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் 3 ஃபார்மட்டுக்கும் அறிமுகமாகியிருந்தார். சமீபமாக காயங்களால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார். அதிலிருந்து மீண்டுள்ள அவர் மீண்டும் தன்னை நிரூபித்து காண்பிப்பேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், யார்க்கரை தாண்டி பந்தை ஸ்விங் செய்யும் கலையயும் கற்று வருவதாக கூறியிருக்கிறார். இந்த ஆண்டு இறுதியில் நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பையே நடராஜனின் இலக்காக இருக்கக்கூடும். அதற்கு இந்த ஐ.பி.எல் சீசன் ரொம்பவே முக்கியம்.

தமிழக வீரர்களை நம்பி கோடிகளை கொட்டிய ஐ.பி.எல் அணிகள்... காரணம் என்ன?

சாய் கிஷோரை 3 கோடிக்கு குஜராத் அணி வாங்கியிருக்கிறது. இடதுகை ஸ்பின்னரான இவர் பயங்கர எக்கானமிக்கலாக வீசக்கூடியவர். பவர்ப்ளேயிலுமே நன்றாக வீசுவார். இப்போது பேட்டிங்கிலுமே சில சமயங்களில் டாப் ஆர்டரில் இறங்கி சர்ப்ரைஸ் கொடுக்கிறார். வலுவான பௌலிங் கொஞ்சம் பேட்டிங் என இரண்டும் இருப்பதாலயே இவருக்கு குஜராத் 3 கோடி கொடுத்திருக்கிறது.

கடந்த சீசன்களில் சென்னை அணிக்கு பேக் அப் வீரராக மட்டுமே இருந்தவர் இனி களத்தில் இறங்கி தன்னுடைய திறனை நிரூபிக்கக்கூடும். ஆல்ரவுண்டரான விஜய் சங்கரையும் 1.4 கோடிக்கு குஜராத் வாங்கியிருக்கிறது. சமீபமாக பேட்டிங்கில் சொதப்பினாலும், க்ளிக்காகும் பட்சத்தில் ஒரு 3டி வீரராக பட்டையை கிளப்புவார். தமிழக அணியின் வெற்றிகரமான கேப்டனாகவும் செயல்பட்டிருக்கிறார்.

தமிழக வீரர்களை நம்பி கோடிகளை கொட்டிய ஐ.பி.எல் அணிகள்... காரணம் என்ன?

முருகன் அஷ்வின் பெரிய வெளிச்சம் இல்லாமல் நீண்ட காலமாக சீராக வீசிக்கொண்டிருக்கும் லெக் ஸ்பின்னர். அவரை 1.6 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் ஏலத்தில் எடுத்திருக்கிறது. மும்பை அணியில் சரியான வாய்ப்பு கிடைக்கும்பட்சத்தில் இதுவரை பெறாத வெளிச்சத்தை பெறுவார்.

வாஷிங்டன் சுந்தரை 8.75 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஏலத்தில் எடுத்துள்ளது. ஒரு ஆஃப் ஸ்பின்னர் மற்றும் இடக்கை பேட்ஸ்மேனாக மேலிருந்து கீழ் வரை எங்கே வேண்டுமானாலும் ஆடக்கூடியவர். காயம் காரணமாக கடந்த உலகக்கோப்பையை தவறவிட்டிருந்தார். நடராஜனை போலவே அடுத்த உலகக்கோப்பைக்கு தயாரவதற்கு இந்த ஐ.பி.எல் சீசன் அவருக்கு ரொம்பவே முக்கியம்.

தமிழக வீரர்களை நம்பி கோடிகளை கொட்டிய ஐ.பி.எல் அணிகள்... காரணம் என்ன?

இவர்கள் போக ஜெகதீசன் நாராயணன், ஹரி நிஷாந்த் ஆகியோரை சென்னை அணி அடிப்படை விலையான 20 லட்சத்திற்கு வாங்கியிருந்தது. பேக் அப் வீரர்களாக பென்ச்சிலேயே வைக்கப்படுவார்கள் என்றாலும் அதிர்ஷ்டவசமாக வாய்ப்பு கிடைத்தால் அதை பயன்படுத்திக் கொண்டு முன்னேறும் முனைப்பு உடையவர்கள். சஞ்சய் யாதவை 50 லட்சத்திற்கு மும்பையும், சாய் சுதர்சன் மற்றும் அபராஜித்தை அடிப்படை விலைக்கு குஜராத் மற்றும் மும்பை அணிகள் வாங்கியிருக்கின்றன.

banner

Related Stories

Related Stories