விளையாட்டு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ‘TOP 5’ - IPL ஏலத்தில் சென்னை அணி எடுத்த வீரர்கள் விவரம்!

நடந்த ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்த வீரர்கள் விவரம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ‘TOP 5’ - IPL ஏலத்தில் சென்னை அணி எடுத்த வீரர்கள் விவரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஐ.பி.எல் 2022 மெகா ஏலம் பெங்களூருவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நட்சத்திர வீரர்கள் விற்பனை நிறைவு பெற்ற நிலையில் இரண்டாம் சுற்று ஏலம் தொடங்கியது.

முதல் சுற்றில் முதல் வீரராக ஷிகர் தவான் ஏலத்தில் விடப்பட்டார். ஷிகர் தவானை ரூ.8.25 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது. இதனைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷன் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளார். அவரை 15.25 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. கடந்த 2018 முதல் அவர் மும்பை அணியில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில், முதல்நாளின் முடிவில் சென்னை அணி 6 வீரர்களை வாங்கியிருந்தது. அதன்படி ராபின் உத்தப்பா, ப்ராவோ, அம்பத்தி ராயுடு, தீபக் சஹார், ஆசிஃப், துஷார் தேஷ்பாண்டே ஆகியோரை சென்னை அணி ஏலத்தில் எடுத்கிருந்தது. இந்த 6 வீரர்களில் 5 பேர் கடந்த சீசன் வரை சென்னை அணியில் ஆடியவர்கள். துஷார் தேஷ் பாண்டே கடந்த சீசனில் சென்னை அணிக்கு நெட் பௌலராக இருந்தவர்.

ஏற்கனவே சென்னை அணி தோனி, ஜடேஜா, மொயீன் அலி, ருத்துராஜ் என 4 வீரர்களை சென்னை அணி தக்க வைத்திருந்தது. இப்போது 8 வீரர்களை எடுத்திருப்பதால் சென்னை அணியிடம் 12 வீரர்கள் இருக்கிறார்கள்.

இந்த அணியின் TOP 5 வீரர்களின் பட்டியல் இதோ..

1. தீபக் சாஹர் - ரூ.14.00 கோடி

2. அம்பத்தி ராயுடு - ரூ.6.75 கோடி

3. டிவைன் பிராவோ - ரூ.4.40 கோடி

4. சிவம் துபே - ரூ. 4.00 கோடி

5. ராபின் உத்தப்பா - ரூ.2.00 கோடி

இதுவரை நடந்த ஐ.பி.எல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்த வீரர்கள் விவரம்:

எம்.எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயாடு, டுவைன் பிராவோ, ராபின் உத்தப்பா, தீபக் சாஹர், கே.எம் ஆசிப், அம்பதி ராயாடு, டுவைன் பிராவோ, ராபின் உத்தப்பா, தீபக் சாஹர், கே.எம்.ஆசிப் , துஷார் தேஷ்பாண்டே ஆகியோரை எடுத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories