விளையாட்டு

”விளையாட ஆசை இருந்தாலும் என்னால முடியுமானு தெரில” - ஓய்வை அறிவித்தார் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா!

2022 ஆம் ஆண்டுடன் சர்வதேச டென்னிஸ் களத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா அதிரடியாக அறிவித்துள்ளார்.

”விளையாட ஆசை இருந்தாலும் என்னால முடியுமானு தெரில” - ஓய்வை அறிவித்தார் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா இணை தோல்வியை தழுவியது. இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் சானியா மிர்சா அமெரிக்காவின் ராஜீவ் ராம் உடன் விளையாடவுள்ளார்.

தோல்விக்கு பிறகு 2022 ஆம் ஆண்டுடன் தான் ஓய்வு பெற போவதாக சானியா மிர்சா அதிரடியாக அறிவித்துள்ளார். இது குறித்து கூறியுள்ள அவர், டென்னிஸ் களத்தில் இந்த ஆண்டே தனது கடைசி ஆண்டு எனவும், ஆண்டு முழுவதும் விளையாடும் ஆசை இருந்தாலும், அது தன்னால் முடியுமா என்பது தெரியவில்லை என கூறியுள்ளார். தவிர, தனது மகனுக்கு 3 வயதாவதாக கூறிய அவர், மகனை அழைத்து கொண்டு அனைத்து இடங்களுக்கும் செல்ல முடியாத சூழல் இருப்பதாகவும், முழங்கால் வலியால் அவதிப்படுவதால் இம்முடிவை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

2003 ஆம் ஆண்டு முதல் இந்தியாவுக்காக டென்னிஸ் களத்தில் பல்வேறு வெற்றிகளை குவித்துள்ள 35 வயதான சானியா மிர்சா, இதுவரை 6 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார்.

2016ஆம் ஆண்டு இதே ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரில் இரட்டையரில் சுவிஸ் வீராங்கனை மார்டினா ஹிங்கிஸ் உடன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சானியா தொடரில் பட்டத்தை கைப்பற்றியது இன்றளவும் அவரது சிறந்த ஆட்டங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

டென்னிஸ் அரங்கில் இரட்டையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையாகவும் வலம் வந்த சானியா, பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார்.

2010 ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலி-யை மணந்த சானியாவுக்கு, 2018 அக்டோபர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பேறுக்கு பிறகும் தனது விடாமுயற்சியால் மீண்டும் களத்தில் கால் பதித்த சானியா, இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளார்.

19 ஆண்டுகள் டென்னிஸ் களத்தில் இந்தியாவின் ஒன் அண்டு ஒன்லி நட்சத்திர வீராங்கனையாக வலம் வந்த சானியா, இளம் வீரர்களுக்கு முன்னுதாரணம் என பலரும் தங்கள் கருத்துகளை கூறி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories