விளையாட்டு

வெல்லுமா இந்தியா? - 7 விக்கெட்களை சாய்த்த ஷர்துல்.. இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் கைகொடுக்குமா? #IndvSA

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருக்கிறார் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாகுர்.

வெல்லுமா இந்தியா? - 7 விக்கெட்களை சாய்த்த ஷர்துல்.. இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் கைகொடுக்குமா? #IndvSA
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருக்கிறார் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாகுர். மற்ற பந்துவீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்தாத நிலையில், தனி ஆளாக தென்னாப்பிரிக்காவை காலி செய்தார் ஷர்துல்.

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பெர்க்கின் வாண்டரர்ஸ் மைதானத்தில் நடந்துகொண்டிருக்கிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 202 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் கே.எல்.ராகுல் மட்டுமே அரைசதம் கடந்தார். கடைசி கட்டத்தில் அஷ்வின் சிறப்பாக விளையாடி 46 ரன்கள் எடுத்ததால்தான் அந்த ஸ்கோரே வந்தது.

அடுத்து ஆடிய தென்னாப்பிரிக்க அணி, முதல் நாள் முடிவதற்கு முன்பே ஓப்பனர் மார்க்ரமை இழந்தது. ஆனா, இரண்டாவது நாள் தொடங்கியதும் எல்கர், கீகன் பீட்டர்சன் இருவரும் நன்றாக பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பும்ரா, ஷமி ஆகியோரை சிறப்பாகக் கையாண்டனர். ஒரு வழியாக ஷர்துல் தாகுரிடம் ராகுல் பந்தைக் கொடுக்க, விக்கெட் வீழ்த்தி இந்தியாவை மீண்டும் ஆட்டத்துக்குள் கொண்டுவந்தார் அவர். சிறப்பாக விளையாடி தன் முதல் டெஸ்ட் அரைசதத்தை அடித்த கீகன் பீட்டர்சனையும் அடுத்த சில ஓவர்களிலேயே வெளியேற்றினார். பீட்டர்சனை வெளியேற்றிய அடுத்த ஓவர் முக்கிய விக்கெட்டான வான் டெர் டுசனையும் வெளியேற்றி தென்னாப்பிரிக்காவை இக்கட்டான நிலைக்குத் தள்ளிக்கொண்டே இருந்தார்.

வெல்லுமா இந்தியா? - 7 விக்கெட்களை சாய்த்த ஷர்துல்.. இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் கைகொடுக்குமா? #IndvSA

டெம்பா பவுமா, கைல் வெரெய்ன் இருவரும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர். மற்ற பௌலர்கள் விக்கெட்டை வீழ்த்தமுடியவில்லை. மீண்டும் தாகுர் வந்தார். அவர்கள் இருவரையுமே வெளியேற்றி இந்தியாவை மீண்டும் ஆட்டத்துக்குள் கொண்டுவந்தார். இருந்தாலும் கடைசி கட்டத்தில் மார்கோ யான்சன், கேஷவ் மஹராஜ் ஆகியோர் ஓரளவு ரன் சேர்த்து தென்னாப்பிரிக்கா முன்னிலை பெறுவதற்கு உதவினர். யான்சன், எங்கிடி ஆகியோரையும் வெளியேற்றி, இந்த இன்னிங்ஸை 7 விக்கெட்டுகளோடு முடித்தார் ஷர்துல் தாகுர். இங்கிலாந்திலும் ஆஸ்திரேலியாவிலும் பேட்டிங்கில் கலக்கியவர், தென்னாப்பிரிக்காவில் தன் பந்துவீச்சால் அணியைக் காப்பாற்றியிருக்கிறார்.

இறுதியில் தென்னாப்பிரிக்க அணி 229 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 27 ரன்கள் பின்தங்கியிருந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி, ஏழாவது ஓவரிலேயே கேப்டன் ராகுலை இழந்தது. அவர் 8 ரன்களுக்கு அவுட் ஆனார். மயாங்க் அகர்வால் 23 ரன்கள் எடுத்து ஒலிவியர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆனால், சீனியர் வீரர்கள் புஜாரா, ரஹானே இருவரும் அதற்கு மேல் விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டனர். அதிரடியாக ஆடிய புஜாரா 42 பந்துகளில் 35 ரன்கள் எடுத்திருக்கிறார். 2 விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்திருக்கும் இந்திய அணி, 58 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கிறது.

banner

Related Stories

Related Stories