விளையாட்டு

’டிராவிட் கடுமையான முடிவை எடுக்க வேண்டும்’ : தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் காட்டம் -என்ன காரணம் தெரியுமா?

புஜாரா டெஸ்ட் போட்டிகளில் சதமடித்து 3 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ரஹானே எப்போதாவது ஒரு நல்ல இன்னிங்ஸை ஆடிவிட்டு எல்லா போட்டிகளிலும் சொதப்பிக் கொண்டிருக்கிறார்.

’டிராவிட் கடுமையான முடிவை எடுக்க வேண்டும்’ : தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் காட்டம் -என்ன காரணம் தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது. அங்கே டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஆடி வருகிறது. எதிர்பார்க்கப்பட்ட வீரர்களான புஜாராவும் ரஹானேவும் மீண்டும் இந்த தொடரிலும் சொதப்பலான பெர்ஃபார்மென்ஸ்களை கொடுத்திருக்கின்றனர். இது சார்ந்து தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் கொஞ்சம் காட்டமாகவே விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

புஜாரா மற்றும் ரஹானே இருவருமே டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடி வருகின்றனர். அந்த ஒரு ஃபார்மட்டிலும் பல காலமாக ஃபார்மிலேயே இல்லாமல் சொதப்பிக் கொண்டிருக்கின்றனர். புஜாரா டெஸ்ட் போட்டிகளில் சதமடித்து 3 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ரஹானே எப்போதாவது ஒரு நல்ல இன்னிங்ஸை ஆடிவிட்டு எல்லா போட்டிகளிலும் சொதப்பிக் கொண்டிருக்கிறார். இருவருக்குமே இந்த தென்னாப்பிரிக்க தொடர் மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது. இதிலும் இருவரும் சொதப்பினால் அணியிலிருந்து ஓரங்கட்டப்படுவார்கள் என்ற நிலையே இருந்தது. இதற்கு முன்னோட்டமாகவே ரஹானேவின் துணை கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டது.

’டிராவிட் கடுமையான முடிவை எடுக்க வேண்டும்’ : தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் காட்டம் -என்ன காரணம் தெரியுமா?

இருவருமே பல நல்ல இன்னிங்ஸ்களை ஆடிய திறமையான சீனியர் வீரர்கள் என்பதால் ரசிகர்களும் இவர்கள் எப்படியாவது கம்பேக் கொடுத்து தங்களது இடத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என நினைத்தனர். ஆனால், இந்த தென்னாப்பிரிக்க தொடரிலும் இருவரும் சொதப்பிக் கொண்டே இருக்கின்றனர். இந்த தொடரில் இதுவரை ஆடியிருக்கும் 3 இன்னிங்ஸ்களில் புஜாரா 0, 16, 3 என்றும் ரஹானே 48, 20, 0 என்றே ஸ்கோர் செய்திருக்கின்றனர். முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் ரஹானே நன்றாக தொடங்கியிருந்தார். ஆனால், அதை பெரிய இன்னிங்ஸாக அவரால் மாற்ற முடியவில்லை. இரண்டாவது போட்டியில் மற்றுமொரு வாய்ப்பு கிடைக்கவே இதில் முதல் போட்டியில் தவறவிட்டதை பிடித்துவிடுவார் என நினைக்க, முதல் இன்னிங்ஸில் முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். புஜாரா ஃபார்மிற்கு திரும்புவதற்கான எந்த அறிகுறியையும் காட்டாமல் மொத்தமாக சொதப்பியிருக்கிறார். இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸ் மட்டுமே இருவருக்குமான கடைசி வாய்ப்பாக இருக்கக்கூடும்.

இந்நிலையிலேயே இந்திய அணிக்கு ஆடியிருக்கும் தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் இருவர் குறித்தும் தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார். 'உலகின் சிறந்த இந்திய அணியில் இந்த இருவருக்குமே நிறைய நிறைய வாய்ப்புகள் வழங்கப்பட்டுவிட்டது. அவர்களின் கடந்த கால பெர்ஃபார்மென்ஸ்களாலும் திறனாலும் மட்டுமே அணியில் நீடிக்கின்றனர். அவர்கள் சீனியர்கள்தான் ஆனாலும், அவர்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகள் முடிவுக்கு வந்துவிட்டதாக உணர்கிறேன்.

’டிராவிட் கடுமையான முடிவை எடுக்க வேண்டும்’ : தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் காட்டம் -என்ன காரணம் தெரியுமா?

இது அவர்களுக்குமே தெரிந்திருக்கும். வெளியில் இருக்கும் வீரர்கள் நன்றாக பெர்ஃபார்ம் செய்துவிட்டு வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். அடுத்த போட்டியில் விராட் கோலி அணிக்குள் வரும்பட்சத்தில் இருவரில் ஒருவர் அவருக்கு வழியை விட்டே ஆக வேண்டும். பயிற்சியாளரான டிராவிட்டும் சில கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டும். இளம் வீரராக இருந்த புஜாரா நன்றாக ஆடினார். அது டிராவிட்டின் மீது ஒரு அழுத்தத்தை கொடுத்தது. டிராவிட்டின் ஓய்வுக்கு அதுவும் ஒரு காரணம். இப்போது அது அப்படியே தலைகீழாக நடக்கும் என நினைக்கிறேன்' என தினேஷ் கார்த்திக் கூறியிருந்தார்.

தினேஷ் கார்த்திக்கின் விமர்சனம் நேர்மையாகவே இருக்கிறது. தொடர்ந்து பெர்ஃபார்மே செய்யாமல் வாய்ப்பை பெற்று வரும் ரஹானே, புஜாரா விஷயத்தில் ராகுல் டிராவிட் என்ன முடிவை எடுக்கப்போகிறார்?

banner

Related Stories

Related Stories