விளையாட்டு

NZvBan: நியூஸி., வீரர் அருகே அமர்ந்திருக்கும் இந்த சிறுவன் யார்? இணையத்தில் வைரலாகும் போட்டோ: விவரம் இதோ!

வங்க தேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் 2வது நாள் போட்டியின் போது எடுக்கப்பட்ட இந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

NZvBan: நியூஸி., வீரர் அருகே அமர்ந்திருக்கும் இந்த சிறுவன் யார்? இணையத்தில் வைரலாகும் போட்டோ: விவரம் இதோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நியூஸிலாந்துக்கும் வங்கதேசத்துக்கும் இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நியூஸிலாந்தின் மவுண்ட் மெளங்கானுயில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டு தொடர் கொண்ட இந்த போட்டியின் மூன்றாவது நாள் தொடர் பே ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

இப்படி இருக்கையில் இரண்டாவது நாள் போட்டியின் போது சிறுவன் ஒருவனை நியூஸிலாந்து அணி ட்ரெஸ்ஸிங் ரூமில் வைத்து கிரிக்கெட் பார்க்கச் செய்த நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதற்கான காரணம் நியூஸிலாந்து கிரிக்கெட் அணி மீதான மதிப்பை கூட்டியிருக்கிறது என ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

அது என்னவெனில், ஜேக்கப் என்ற புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் நியூஸிலாந்து அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் அந்த அணியின் வீரர் டேரில் மிட்செலின் அருகே அமர்ந்து கிரிக்கெட் போட்டியை ரசித்து பார்க்கும் போட்டோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதற்கு அனுமதித்த நியூஸிலாந்து கிரிக்கெட் அணிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

banner

Related Stories

Related Stories