விளையாட்டு

மகளிர் துப்பாக்கிச்சூடு போட்டியில் வெண்கலம் வென்ற தமிழ்நாட்டு அணி; தி.மு.க எம்.எல்.ஏ மகள் சாதனை!

தேசிய மகளிர் துப்பாக்கி சூடும் போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம் வென்றது.

மகளிர் துப்பாக்கிச்சூடு போட்டியில் வெண்கலம் வென்ற தமிழ்நாட்டு அணி; தி.மு.க எம்.எல்.ஏ மகள் சாதனை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் 64வது தேசிய மகளிர் துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டு அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது.

ஜூனியர் துப்பாக்கிச்சூடு போட்டியில் டெல்லி அணி 293 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றது. அரியானா 260 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றது. தமிழ்நாடு 275 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் வீராங்கனைகள் பிரமயா, தனிஸ்கா, நிலா ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளனர். அதேபோல் சீனியர் பிரிவில் தமிழ்நாடு 5வது இடம் பிடித்தது.

இதையடுத்து வெண்கலம் பதக்கம் வென்ற இளம் வீரர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். வெண்கலப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டு அணியில் இடம் பெற்ற நிலா என்பவர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories