விளையாட்டு

சென்னை கொடுத்த குட்டி ட்விஸ்ட்.. தோனியை விட ஜடேஜாவுக்கு அதிக தொகை ஏன்?

ஜடேஜாவை அதிக தொகை கொடுத்து சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

சென்னை கொடுத்த குட்டி ட்விஸ்ட்.. தோனியை விட ஜடேஜாவுக்கு அதிக தொகை ஏன்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

ஐ.பி.எல் மெகா ஏலத்திற்கு முன்பாக எட்டு அணிகளும் தாங்கள் தக்க வைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.

சென்னை அணியும் தாங்கள் தக்கவைத்துக் கொள்ளப்போகும் 4 வீரர்களை அறிவித்திருந்தது.

எதிர்பார்த்ததை போலவே தோனி, ஜடேஜா, மொயீன் அலி, ருத்துராஜ் கெய்க்வாட் இந்த நான்கு வீரர்களே தக்க வைக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால், இதில் ஒரு சிறிய ட்விஸ்ட்டை சென்னை அணி வைத்திருக்கிறது.

அதாவது, முதல் வீரராக தோனியை தக்க வைக்காமல் ஜடேஜாவை தக்க வைத்திருக்கின்றனர். இதன்மூலம் ஜடேஜாவுக்கு 16 கோடி ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டும். இரண்டாவது வீரராகவே தோனி தக்க வைக்கப்பட்டிருக்கிறார். தோனிக்கு 12 கோடி ரூபாய் மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டும். தோனி மாதிரியான மாபெரும் வீரர் அணியில் இருக்கும்போது அவரை விட அதிக தொகைக்கு இன்னொரு வீரரை ஒப்பந்தம் செய்திருப்பது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக அமைந்திருக்கிறது.

இத்தனை சீசன்களாக சென்னை அணியில் அதிக ஊதியம் பெறும் வீரராக தோனியே இருந்திருக்கிறார். இனிமேல் அப்படி இருக்கப்போவதில்லை. ஆனால், இந்த முடிவை சென்னை அணி நிர்வாகம் எடுத்திருப்பதாக தெரியவில்லை. அவர்களை பொறுத்தவரைக்கும் சென்னை அணிக்கு தோனிதான் எப்போதும் முதல் சாய்ஸ். அவருக்குதான் எப்போதும் முன்னுரிமை வழங்கப்படும். இதை வெளிப்படையாகவும் அறிவித்திருந்தார்கள்.

சென்னை கொடுத்த குட்டி ட்விஸ்ட்.. தோனியை விட ஜடேஜாவுக்கு அதிக தொகை ஏன்?

ஆக, இந்த முடிவு சென்னை அணி நிர்வாகத்தால் எடுக்கப்படவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. தோனியே விரும்பி அவரின் ஆலோசனைப்படியே ஜடேஜாவுக்கு அதிக தொகை வழங்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. தோனி தனது கரியரின் கடைசிக்கட்டத்தில் இருக்கிறார்.

எப்போது வேண்டுமானாலும் ஓய்வு பெறலாம் என்ற சூழலில் சென்னை சேப்பாக்கத்தில் வைத்து கடைசி போட்டியை ஆட வேண்டும் என்பது தோனியின் விருப்பமாக இருக்கிறது. அதற்காகவே அடுத்த சீசனில் ஆடும் முடிவை எடுத்திருக்கிறார். இந்நிலையில் தான் இப்போதைக்கு தன்னை விட திறன்மிக்க வீரராக இருக்கும் ஜடேஜாவிற்கு அதிக தொகை செல்லட்டும். அவர்தான் அதற்கு முழுத்தகுதியுடையவர் என தோனி முடிவெடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆனால், 2022 சீசனோடு தோனி ஓய்வுபெறும்பட்சத்தில் மினி ஏலத்தில் சென்னைக்கு கூடுதலாக 12 கோடி மட்டுமே கிடைக்கும். அதேநேரத்தில், இங்கே தோனியை 16 கோடிக்கு ரீட்டெயின் செய்திருக்கும்பட்சதில், தோனி ஓய்வு பெற்ற பிறகு மினி ஏலத்தில் சென்னைக்கு 16 கோடி கிடைத்திருக்கும். தோனி 2022 சீசனோடு ஓய்வு பெறும்பட்சத்தில் சென்னைக்கு 4 கோடி நஷ்டமே.

banner

Related Stories

Related Stories