விளையாட்டு

CSK அணி தக்கவைக்கப்போகும் அந்த 4 வீரர்கள் யார் தெரியுமா? #IPL2022

நடப்பு சாம்பியனாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்தெந்த வீரர்களை தக்கவைக்கப்போகிறது என்பது குறித்து எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

CSK அணி தக்கவைக்கப்போகும் அந்த 4 வீரர்கள் யார் தெரியுமா? #IPL2022
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

ஐ.பி.எல் 2022 சீசனுக்கு முன்பாக மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. அந்த மெகா ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை தக்கவைத்துக்கொள்ள முடியும். அந்த 4 வீரர்கள் யார் என்பதை அத்தனை அணிகளும் இன்று இரவு அறிவிக்கவிருக்கின்றன. நடப்பு சாம்பியனாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்தெந்த வீரர்களை தக்கவைக்கப்போகிறது என்பது குறித்து எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை அணியின் முகமாக இத்தனை ஆண்டுகளாக அணியின் வெற்றிகரமான கேப்டனாக இருக்கும் மகேந்திர சிங் தோனியே முதல் சாய்ஸ். தோனிக்கு வயதாகிவிட்டதாலும் முன்பை போல ஃபார்மில் இல்லாததாலும் அவரை சென்னை அணி தக்கவைக்காது. மேலும், தோனியே ஓய்வு பெற்றுவிடுவார் என்பது போன்ற செய்திகளும் வெளியாகியிருந்தன. ஆனால், ஐ.பி.எல் இறுதிப்போட்டியின்போதே அந்த வதந்திகளுக்கு தோனி முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். பிசிசிஐயின் மெகா ஏலம் குறித்த அறிவிப்பைப் பொறுத்து சென்னை அணிக்காக ஆடுவேன் என பேசியிருந்தார். சமீபத்தில் சென்னையில் நடந்த வெற்றி விழாவிலும் சென்னை அணிக்காக தொடர்ந்து ஆடுவதை தோனி உறுதி செய்திருந்தார். சென்னை அணியின் நிர்வாகமும் தோனிதான் முதல் வீரராக தக்கவைக்கப்படுவார் எனக் கூறியிருந்தது. எனவே சந்தேகமே இல்லாமல் தோனிதான் சென்னை அணியின் முதல் சாய்ஸ்.

இரண்டாவதாக ஜடேஜாவை தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்பிருக்கிறது. ஒரு ஆல்ரவுண்டராக பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என மூன்று டிபார்ட்மெண்ட்டிலும் மிகச்சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். சமீபமாக சென்னை அணிக்காக ஃபினிஷர் ரோலிலும் வெளுத்து வாங்குகிறார். அதனால் ஜடேஜாவை தக்கவைத்துக் கொள்ளவே சென்னை விரும்பும்.

மூன்றாவதாக ருத்துராஜ் கெய்க்வாட்டை தேர்வு செய்வார்கள். சென்னை அணி கடைசியாக நடந்த சீசனில் கோப்பையை வென்றதற்கு ருத்துராஜ் கெய்க்வாட்டே மிக முக்கிய காரணமாக இருந்தார். அந்த சீசனின் ஆரஞ்சு கேப்பையும் வென்றார். ஓப்பனராக மற்ற வீரர்கள் சொதப்பினாலும் ஒற்றை ஆளாக நின்று அடித்துக் கொடுத்து சென்னையை வெல்லவும் வைத்திருக்கிறார். ஒரு தரமான ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இருப்பதால் இன்னும் பல சீசன்களுக்கு ருத்துராஜ் கெய்க்வாட் சென்னை அணிக்கே ஆட வேண்டும் என அணி நிர்வாகம் விரும்பும். அதனால் ருத்துராஜும் தக்கவைக்கப்படுவார் என உறுதியாக கூறலாம்.

CSK அணி தக்கவைக்கப்போகும் அந்த 4 வீரர்கள் யார் தெரியுமா? #IPL2022

இன்னும் ஒரே ஒரு இடம் இருக்கிறது. இந்த இடத்திற்குத்தான் குழப்பங்கள் ஏற்படும் வாய்ப்பிருக்கிறது. மூன்று இந்தியர்களை ஏற்கனவே தக்கவைத்துவிட்டதால், மீதமிருக்கும் ஒரு இடத்திற்கு ஒரு வெளிநாட்டு வீரரை தக்க வைக்க வேண்டும். அந்த ஒரு இடத்திற்கு சென்னை அணிக்கு டூ ப்ளெஸ்சிஸ், மொயீன் அலி, சாம் கர்ரன் என மூன்று ஆப்சன்கள் இருப்பதாக தெரிகிறது.

சந்தேகமே இல்லாமல் டூப்ளெஸ்சிஸை சென்னை அணி தேர்வு செய்யும் என கணிப்புகள் வெளியாகியிருந்தது. டூப்ளெஸ்சிஸும் கடந்த சீசனில் மிகச்சிறப்பாக ஆடியிருக்கிறார். ருத்துராஜ் கெய்க்வாட்டிற்குப் பிறகு அதிக ரன்களை அடித்த வீரராக இருந்தார். அதனால் டூப்ளெஸ்சிஸ் போட்டியே இன்றி தக்கவைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருடைய வயது இதற்கு ஒரு தடையாக இருப்பதாக தெரிகிறது. அடுத்த 10 ஆண்டுகளுக்கான சென்னை அணியை கட்டமைக்க வேண்டியிருக்கிறது என தோனியும் பேசியிருந்தார். டூ ப்ளெஸ்சிஸுக்கு இப்போதே 37 வயதாகிறது என்பதால் அவரை விட வயது குறைவான வீரர்களுக்குச் செல்லலாம் என சென்னை நினைப்பதாக தெரிகிறது.

சென்னை அணியின் அடுத்த வாய்ப்புகளாக மொயீன் அலியும் சாம் கர்ரனும் இருக்கிறார்கள். இதில் மொயீன் அலி தேர்வாக அதிக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. மொயீன் அலி கடந்த சீசனில் ரெய்னாவின் நம்பர் 4 இல் இறக்கப்பட்டிருந்தார். மிகச்சிறப்பாக ஆடி மிடில் ஓவர்களில் ரன்ரேட்டை உயர்த்தினார். இவர் ஒரு ஆல்ரவுண்டர், ஆஃப் ஸ்பின்னும் வீசுக்கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த சீசன் இந்தியாவில் நடக்க இருப்பதால், சென்னை அணி குறைந்தபட்சமாக சேப்பாக்கத்தில் 7 போட்டிகளை ஆட வேண்டியிருக்கும். சேப்பாக்கம் மந்தமான பிட்ச்சாக இருக்கும். ஸ்பின்னர்களுக்கு பெரிதாக உதவும். இதனால் மொயீன் அலியை தேர்ந்தெடுக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

தோனி, ஜடேஜா, ருத்துராஜ், மொயீன் அலி இந்த நால்வருமே சென்னை அணி தக்கவைக்கும் வீரர்களாக இருப்பார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories