விளையாட்டு

“ஓப்பனர்கள் யார்? - பௌலிங்கில் என்ன செய்ய போகிறார்கள்?”: T20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் திட்டம் என்ன?

கேள்விகளுக்கு விடைதேடும் முயற்சியோடு இங்கிலாந்துடன் பயிற்சி போட்டியில் களமிறங்கும் இந்தியா!

“ஓப்பனர்கள் யார்? - பௌலிங்கில் என்ன செய்ய போகிறார்கள்?”: T20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் திட்டம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

அக்டோபர் 17 முதல் டி20 உலகக்கோப்பை போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 சுற்றுக்குள் நுழைவதற்காக இலங்கை, வங்கதேசம் மற்றும் சில அசோசியேட் நாடுகள் தகுதிச்சுற்றில் மோதிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், இந்திய அணி இன்று இங்கிலாந்து அணிக்கெதிரான பயிற்சி போட்டியில் களமிறங்க இருக்கிறது.

அக்டோபர் 24 ஆம் தேதி இந்திய அணி பாகிஸ்தானை தங்களது முதல் போட்டியில் எதிர்கொள்கிறது. அதற்கு முன்பாக இரண்டு பயிற்சி ஆட்டங்கள் இந்திய அணிக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. முதல் பயிற்சி ஆட்டத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி மோதவிருக்கிறது.

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறும் அத்தனை வீரர்களும் ஐ.பி.எல் தொடரிலும் ஆடியிருக்கின்றனர். சமீபத்தில் முடிந்த ஐ.பி.எல் தொடர் முழுவதுமே ஐக்கிய அரபு அமீரகத்திலேயே நடந்திருப்பதால் இந்திய வீரர்கள் அந்த சூழலுக்கு ஏற்றவாறு ஏற்கனவே தங்களை தகவமைத்துக் கொண்டுவிட்டனர் என்பது இந்திய அணிக்கு சாதகமான விஷயம்.

“ஓப்பனர்கள் யார்? - பௌலிங்கில் என்ன செய்ய போகிறார்கள்?”: T20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் திட்டம் என்ன?

ஆனாலும், இந்த பயிற்சி ஆட்டத்தில் சில கேள்விகளுக்கு இந்திய அணி விடை தேடியாக வேண்டும். முதலில் இந்திய அணிக்கு ஓப்பனர்களாக எந்த வீரர்கள் இறங்கப்போகிறார்கள் என்பதில் தெளிவு கிடைக்க வேண்டும். தற்போதைய உலகக்கோப்பை அணியில் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், இஷன் கிஷன், விராட் கோலி என நான்கு வீரர்கள் ஓப்பனிங் ஸ்லாட்டில் இறங்குவதற்கு தயாராக இருக்கின்றனர். இந்த நால்வரில் எந்த இருவரை ஓப்பனிங்கில் இறக்க போகிறார்கள் என்பதே கேள்வி.

ஏனெனில், சமீபமாக இந்திய அணி டி20 தொடர்களில் இந்த நால்வருமே மாறி மாறி ஓப்பனிங்கில் இறங்கியிருக்கின்றனர். மேலும், சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல் தொடரிலும் நால்வரும் அவரவர் அணிக்காக ஓப்பனிங்கே இறங்கியிருக்கின்றனர். ரோஹித் சர்மா நிச்சயமாக ஓப்பனராக மட்டுமே இறங்குவார் என்பதை உறுதியாக கூறிவிடலாம். அதனால், அவரோடு இறங்க போவது யார் என்பதைத்தான் யோசிக்க வேண்டும்.

கே.எல்.ராகுல் ஐ.பி.எல் தொடரில் 600+ ரன்களை எடுத்திருக்கிறார். இஷன் கிஷன் ஃபார்ம் அவுட்டிலிருந்து மீண்டு வந்து அதிரடியான இன்னிங்ஸ்களை ஆடியிருக்கிறார். கோலி சமீபமாக டி20 கிரிக்கெட்டில் ஓப்பனிங் இறங்குவதையே விரும்புகிறார். கேப்டனாக இருப்பதால் இதனை மேலும் சிக்கலாக்காமல் கோலி பின்வாங்கக்கூடும். தனது ஆஸ்தான இடமான நம்பர் 3 க்கே அவர் திரும்புவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது போட்டி மொத்தமும் ராகுலுக்கும் இஷன் கிஷனுக்கும் இடையே மட்டும்தான். ரோஹித்துடன் யார் ஓப்பனிங் இறங்க போவது? யார் மிடில் ஆர்டரில் இறங்கப்போவது? இந்த கேள்விக்கான விடையை இந்த இரண்டு பயிற்சி போட்டிகளுக்குள் கண்டடைய வேண்டும்.

“ஓப்பனர்கள் யார்? - பௌலிங்கில் என்ன செய்ய போகிறார்கள்?”: T20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் திட்டம் என்ன?

கடைசி நேரத்தில் அக்சர் படேல் அணியிலிருந்து நீக்கப்பட்டு ஷர்துல் தாகூர் அணியில் சேர்க்கப்பட்டார். காரணம், இன்னமும் ஹர்திக் பாண்ட்யா பந்து வீசுவாரா இல்லையா என்பதில் எந்த தெளிவும் இல்லை. அதனாலயே முன்னெச்சரிக்கையாக ஷர்துல் தாகூர் அணிக்குள் கொண்டு வரப்பட்டார். இந்த இரண்டு பயிற்சி போட்டிகளுக்குள் ஹர்திக் பாண்ட்யா விஷயத்திலும் தெளிவு பிறந்தாக வேண்டும்.

ஷர்துல் தாகூர், புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி என நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். அதிகபட்சமாக மூன்று பேரைத்தான் பயன்படுத்த முடியும் என்பதால் இந்த நால்வரில் ஒருவருக்கு ஓய்வு கொடுக்கப்படும். கூடுதலாக மேலும் ஒரு ஸ்பின்னர் ஆடும்பட்சத்தில் இரண்டு வேகங்களுக்கு மட்டுமே இடம் இருக்கும். அப்போது இரண்டு வீரர்கள் ஓய்விலிருப்பார்கள். வீரர்களை கொஞ்சம் ரொட்டேஷனில் பயன்படுத்துவதும் கையில் கூடுதலாக ஒரு ஆப்சன் இருப்பதும் எப்போதும் நல்லதே!

ஸ்பின்னர்களில் அஷ்வின் தனக்கான இடத்திற்காக போராட வேண்டி வரலாம். ஐ.பி.எல்-லிலும் அவர் சரியான ஃபார்மில் இல்லை. இந்த பயிற்சி ஆட்டங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்பட்சத்தில் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் பெர்ஃபார்ம் செய்தே ஆக வேண்டும்.

ஓப்பனர்கள் யார்? ஹர்திக் பாண்ட்யா என்ன செய்யப்போகிறார்? பௌலிங்கில் என்ன காம்பீனேசனில் செல்ல போகிறார்கள்? இந்த கேள்விகளுக்கெல்லாம் விடைதேடும் வாய்ப்பாக இந்தியாவிற்கு பயிற்சி போட்டிகள் அமையும்.

banner

Related Stories

Related Stories