விளையாட்டு

“இவர் நாம பார்த்த தோனி இல்ல.. பந்து பேட்ல பட்டாலே போதும்னு நினைக்கிறாரு” : பிரையன் லாரா விமர்சனம்!

முன்னாள் மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் பிரையன் லாரா, சி.எஸ்.கே கேப்டன் தோனியின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளார்.

“இவர் நாம பார்த்த தோனி இல்ல.. பந்து பேட்ல பட்டாலே போதும்னு நினைக்கிறாரு” : பிரையன் லாரா விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நடப்பு ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டது. ஆனாலும், கடைசி இரண்டு போட்டிகளின் தோல்விகள் அந்த அணியின் ரசிகர்களை சோர்வடையச் செய்துள்ளது.

நேற்று முன்தினம் நடந்த ஐ.பி.எல் டி20 போட்டியின் 50-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேப்பிடல்ஸ் அணி.

டெல்லி அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் 27 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே சேர்த்தார் சி.எஸ்.கே கேப்டன் தோனி. அணியின் தோல்விக்கு தோனிதான் காரணம் என்று விமர்சனங்கள் எழுந்தன.

பந்துகளை வீணடிக்காமல் தோனி விரைவாக ஆட்டமிழந்திருந்தால்கூட, ஜடேஜா களமிறங்கி கூடுதல் ரன்களைச் சேர்த்து ஓரளவு ஸ்கோரை உயர்த்திருப்பார் என சி.எஸ்.கே ரசிகர்களே புலம்பினர்.

இந்நிலையில் இதுகுறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு பேட்டியளித்த முன்னாள் மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் பிரையன் லாரா, “சி.எஸ்.கே கேப்டன் தோனி பேட்டிங்கில் ஃபார்முக்கு வரும் முயற்சியாகவே ஜடேஜாவுக்கு முன்பாக களமிறங்கியுள்ளார். ஆனாலும், அவரின் பேட்டிங் இன்னும் மந்தமாகவே இருக்கிறது. இன்னும் முழுமையான வேகத்துக்கு வரவில்லை.

“இவர் நாம பார்த்த தோனி இல்ல.. பந்து பேட்ல பட்டாலே போதும்னு நினைக்கிறாரு” : பிரையன் லாரா விமர்சனம்!

நாம் அறிந்த, நல்ல ஃபினிஷர் தோனி இப்போது இல்லை. இப்போதிருக்கும் தோனி, தனது பேட்டில் பந்து பட்டாலே ஆறுதல் அடைந்து கொள்வார் போலத் தெரிகிறது. என்னைப் பொறுத்தவரை தோனி களமிறங்கிய இடத்தில் ஜடேஜாவைக் களமிறக்கியிருக்க வேண்டும்.

ஏனென்றால் ஜடேஜா நல்ல ஃபார்மில் இருக்கிறார். அவர் பேட்டிங் செய்திருந்தால் மாற்றம் ஏற்பட்டிருக்கும். டெத் ஓவர்கள் இப்போது அவர் கையில்தான் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories