விளையாட்டு

#IPL2021 : ராகுலின் பொறுப்பான ஆட்டம் + தமிழக வீரர் ஷாரூக்கானின் அதிரடி.. கொல்கத்தாவை வீழ்த்தியது பஞ்சாப்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டியில் பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

#IPL2021 : ராகுலின் பொறுப்பான ஆட்டம் + தமிழக வீரர் ஷாரூக்கானின் அதிரடி.. கொல்கத்தாவை வீழ்த்தியது பஞ்சாப்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நடைபெற்று முடிந்திருக்கிறது. இதில், பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

இரண்டு அணிகளுமே இன்னமும் ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்பில் நீடிப்பதால் இந்த போட்டியை வென்றே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கினர். முதலில் கொல்கத்தா அணியே பேட்டிங் செய்தது. வழக்கமாக அதிரடியாக ஆடும் வெங்கடேஷ் ஐயர் நேற்று நின்று நிதானமாக பொறுப்பாக ஆடினார். ஆனால், அவர் அளவுக்கு வேறு யாரும் நின்று ஆடவில்லை. திரிபாதி 34 ரன்களிலும் நிதிஷ் ராணா 31 ரன்களிலும் அவுட் ஆகியிருந்தனர். நின்று ஆடிவிட்டு வேகமெடுக்க தொடங்கிய நேரத்தில் வெங்கடேஷ் ஐயரும் விக்கெட்டை விட்டார். 49 பந்துகளில் 67 ரன்களில் ரவி பிஷ்னோயின் பந்துவீச்சில் அவுட் ஆனார். கேப்டன் மோர்கன் 2 ரன்னில் மோசமாக அவுட் ஆகியிருந்தார். இதனால், கொல்கத்தா அணியின் ஸ்கோர் எதிர்பார்த்த அளவுக்கு பெரிதாக உயரவில்லை. 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை எடுத்திருந்தது. பஞ்சாப் சார்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும் ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

பஞ்சாப்புக்கு இலக்கு 166.

அந்த அணியின் சார்பில் ஓப்பனர்களாக களமிறங்கியிருந்த மயங்க் அகர்வாலும் கேப்டன் ராகுலும் சிறப்பாக ஆடியிருந்தனர். முதல் விக்கெட்டுக்கு 70 ரன்களை சேர்த்திருந்தனர். மயங்க் அகர்வால் அவுட் ஆன பிறகும் கே.எல்.ராகுல் நின்று ஆடினார். ஆனால், இன்னொரு முனையில் பூரன், மார்க்ரம் என அடுத்தடுத்து விக்கெட் விழுந்தது. இதனால், கொஞ்சம் அழுத்தம் கூடியது. போட்டி கடைசி ஓவர் வரை சென்றிருந்தது. கடைசி ஓவரில் கே.எல்.ராகுல் அவுட் ஆனார். 47 பந்துகளில் 69 ரன்கள் அடித்திருந்தார். அப்போது 4 பந்துகளில் 4 ரன்கள் அடிக்க வேண்டிய சூழல் நிலவியது. தமிழக வீரரான ஷாரூக்கான ஒரு சிக்சரை அடித்து வெற்றிகரமாக முடித்துவிட்டார். ஷாரூக்கான் 9 பந்துகளில் 22 ரன்களை அடித்திருந்தார். இவரின் இந்த அதிரடியே பஞ்சாபை கடைசியில் காப்பாற்றியிருந்தது.

கொல்கத்தா அணியி தோல்விக்கு சில முக்கிய காரணங்கள் இருக்கிறது. முதலாவது கேப்டன் மார்கனின் பேட்டிங். 12 போட்டிகளில் வெறும் 109 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறார். அதில் ஒரு போட்டியில் 47 ரன்களை எடுத்திருந்தார். அதை தவிர்த்துவிட்டு பார்த்தால் 11 போட்டிகளில் 62 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறார். ரொம்பவே மோசமான பெர்ஃபார்மென்ஸ். அதுமட்டுமல்லாமல் நேற்று மயங்க் அகர்வாலுக்கு ஒரு கேட்ச்சையும் மேலும் ஒரு ரன் அவுட்டையும் தவறவிட்டிருந்தார். கேப்டன்சியிலும் தடுமாறுகிறார். வெங்கடேஷ் ஐயர் ஆல்ரவுண்டர்தான். ஆனால், அதற்கு அவரை 4 ஓவர்கள் முழுமையாக வீச சொல்லி அவரிடமிருந்து விக்கெட்டுகளை எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லை. அவருக்கு திறமை இருந்தாலும் இப்போதுதான் ஆட தொடங்கியிருக்கிறார் அதற்குள் அவருக்கு அதிக வேலைப்பளுவை கொடுத்து அழுத்தம் ஏற்றுவது சரியாக இல்லை. ரஸலுக்கு பதிலாக சீஃபர்ட் என ஒரு எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேனை இறக்காமல் பௌலரை இறக்கியிருந்தால் கொல்கத்தாவிற்கு ஒரு வாய்ப்பு இருந்திருக்கும்.

banner

Related Stories

Related Stories