விளையாட்டு

பஞ்சாபின் மிரட்டல் பௌலிங்கில் சுருண்டு போன சன்ரைசர்ஸ்!

டேவிட் வார்னருக்கு பிறகு அந்த அணியின் கேப்டனான வில்லியம்சனின் விக்கெட்டையும் ஷமி வீழ்த்தியிருந்தார். அங்கிருந்தே போட்டி பஞ்சாப் பக்கமாக திரும்ப ஆரம்பித்துவிட்டது.

பஞ்சாபின் மிரட்டல் பௌலிங்கில் சுருண்டு போன சன்ரைசர்ஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று இரவு நடைபெற்று முடிந்திருந்தது. ஷார்ஜாவில் இந்த போட்டி நடைபெற்றிருந்தது. அது இருப்பதிலேயே குட்டியான மைதானம் என்பதால் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமையும். 200+ ரன்களை அணிகள் ஸ்கோர் செய்யும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், இந்த போட்டியில் பஞ்சாப் அணி 125 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. மேலும், சன்ரைசர்ஸை 125 ரன்களுக்குள் டிஃபண்ட் செய்து போட்டியையும் வென்றிருந்தது.

டாஸை சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் வில்லியம்சனே வென்றிருந்தார். முதலில் பந்து வீசப்போவதாக அறிவித்தார். இது நல்ல முடிவாக அமைந்திருந்தது. தொடக்கத்திலிருந்தே சன்ரைசர்ஸ் பௌலர்கள் சிறப்பாக வீசியிருந்தனர். குறிப்பாக, ஜேசன் ஹோல்டர் அட்டாகசமாக வீசியிருந்தார். பஞ்சாப் அணியின் கேப்டனான கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் என இரண்டு ஓப்பனர்களையும் சீக்கிரமே வெளியேற்றியிருந்தார்.

பஞ்சாப் அணி ரொம்பவே மோசமாகத்தான் பேட்டிங் ஆடியிருந்தது. ஷார்ஜாவில் டெஸ்ட் கிரிக்கெட் ஆடுவதை போல ஆடிக்கொண்டிருந்தனர். ராகுல், மயங்க் அகர்வால், கெய்ல், மார்க்ரம் என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எல்லாருடைய ஸ்ட்ரைக் ரேட்டும் 100 க்கு கீழ்தான் இருந்தது. எப்படியோ உருட்டி உருட்டி கடைசியில் ப்ரார், நேதன் எல்லிஸ் போன்றோரின் பங்களிப்பால் 125 ரன்களை பஞ்சாப் அணி எட்டியது. ஷார்ஜா மைதானத்தில் இதெல்லாம் ஒரு ஸ்கோரே இல்லை. ஆனால், இதையும் கூட எடுக்கமுடியாமல் சன்ரைசர்ஸ் அணி தோல்வியை தழுவியிருந்தது.

ஷமி வீசிய முதல் ஓவரிலேயே டேவிட் வார்னர் 2 ரன்களில் அவுட் ஆகியிருந்தார். ஷமி பவர்ப்ளேயில் மட்டும் 3 ஓவர்களை வீசியிருந்தார். இதில் 5 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். 18 பந்துகளில் 15 பந்துகளக் டாட்டாக வீசியிருந்தார். டேவிட் வார்னருக்கு பிறகு அந்த அணியின் கேப்டனான வில்லியம்சனின் விக்கெட்டையும் ஷமி வீழ்த்தியிருந்தார். அங்கிருந்தே போட்டி பஞ்சாப் பக்கமாக திரும்ப ஆரம்பித்துவிட்டது. பவர்ப்ளே முடிவில் சன்ரைசர்ஸ் அணி 20 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.

பஞ்சாபின் மிரட்டல் பௌலிங்கில் சுருண்டு போன சன்ரைசர்ஸ்!

பவர்ப்ளேயில் ஷமி பிரமாதமாக வீசியிருக்க, மிடில் ஓவர்களில் லெக் ஸ்பின்னரான ரவி பிஷ்னோய் அதகளப்படுத்தினார். மனீஷ் பாண்டே, கேதார் ஜாதவ், அப்துல் சமத் என மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்தார். அத்தனை பந்துகளையும் கூக்ளியாகத்தான் வீசினார். ஆனால், அப்படியிருந்தும் இவரின் பந்துகளை பேட்ஸ்மேன்களால் சரியாக கணித்து ஆட முடியவில்லை.

ஜேசன் ஹோல்டர் க்ரீஸுக்குள் வந்தவுடன் தான் போட்டி பரபரப்பானது. பவுண்டரிக்களையும் சிக்சர்களையும் விளாசி போட்டியை நெருக்கமாக கொண்டு சென்றார். ஹோல்டர் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த போதும் அர்ஷ்தீப் சிங் எனும் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் இரண்டு ஓவர்களை வீசி 9 ரன்களை மட்டுமே கொடுத்து ரஷீத் கானின் விக்கெட்டையும் வீழ்த்தி கொடுத்தார். இதனால் போட்டி கடைசி ஓவர் வரை சென்றது.

கடைசி ஓவரின் கடைசி பந்தில் சிக்சர் அடித்தால் மேட்ச் டை ஆகி சூப்பர் ஓவர் செல்லும் என்ற சூழல் இருந்தது. ஆனால், அந்த பந்தை நேதன் எல்லிஸ் குறைவான வேகத்தில் லோ ஃபுல் டாஸாக வீசி ஒரு ரன்னை மட்டுமே கொடுத்து பஞ்சாபை வெற்றி பெற வைத்தார். பஞ்சாப் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றிக்கு முழுமையான பாராட்டும் பஞ்சாப் அணியின் பந்துவீச்சுக்கே சென்றாக வேண்டும். இந்த தோல்வியின் மூலம் சன்ரைசர்ஸ் ஏறக்குறைய ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்பை இழந்துவிட்டது.

banner

Related Stories

Related Stories