விளையாட்டு

முன்னாள் கேப்டனோடு அளவளாவிய இந்நாள் கேப்டன்.. நேற்றைய IPL போட்டியின் கொண்டாட்ட தருணம் இதுதான்!

இந்திய அணியின் முன்னாள், இந்நாள் கேப்டன்களான தோனியும், விராட் கோலியும் கட்டிப் பிடித்துப் பேசிக் கொண்டிருந்த வீடியோ வைரலாகி வருகிறது.

முன்னாள் கேப்டனோடு அளவளாவிய இந்நாள் கேப்டன்.. நேற்றைய IPL போட்டியின் கொண்டாட்ட தருணம் இதுதான்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

14வது ஐ.பி.எல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி, ரசிகர்களின் ஆரவாரத்திற்கு பஞ்சமே இல்லாத வகையில் நடைபெற்று முடிந்துள்ளது.

இந்தப் போட்டியில் பெங்களூரு அணியைச் சென்னை அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. மேலும் ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்பை உறுதி செய்துள்ளதால் சென்னை ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், போட்டி முடிந்தபிறகு, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை, இந்நாள் கேப்டன் விராட் கோலி கட்டிப்பிடித்து உற்சாகமாக பேசிக்கொண்டிருந்த வீடியோ வெளியாகி இருவரின் நட்பை வெளிப்படுத்தியுள்ளது.

பொதுவாகவே தோனி எதிரணி வீராக இருந்தாலும் சரி, சக அணி வீராக இருந்தாலும் சரி நட்போடு அவர்களுடன் பேசுவார். அவர் இப்படிப் பேசும் வீடியோ, புகைப்படங்கள் அவ்வப்போது டிரெண்டாவது வழக்கம்.

இந்நிலையில்தான் நேற்றைய போட்டி முடிந்து தோனியும், விராட் கோலியும் நட்புடன் கட்டி தழுவிப் பேசிக் கொண்டிந்த காட்சி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவையும், புகைப்படத்தையும் இரு அணி ரசிகர்களும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து இவர்களின் நட்பை வியந்து பாராட்டி வருகிறார்கள்.

விராட் கோலி தலைமையிலான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இந்திய அணியின் ஆலோசகராக எம்.எஸ்.தோனி நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விராட் கோலியை சுற்றி சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில், இந்த வீடியோ விராட் கோலி ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

banner

Related Stories

Related Stories