விளையாட்டு

CSK vs MI | சம பலத்துடன் முட்டி மோதப்போகும் சென்னை மற்றும் மும்பை அணிகள்... வெல்லப்போவது யார்??

ஹர்திக் பாண்ட்யா பந்தும் வீச முடியாமல் பேட்டிங்கிலும் அதிரடி காட்ட முடியாமல் திணறி வருகிறார். அவருடைய கரியரிலேயே இந்த ஐ.பி.எல் தொடர் மிக முக்கியமானதாக இருக்கும்.

CSK vs MI | சம பலத்துடன் முட்டி மோதப்போகும் சென்னை மற்றும் மும்பை அணிகள்... வெல்லப்போவது யார்??
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்த ஐ.பி.எல் போட்டிகள் இன்று முதல் தொடங்கவிருக்கிறது. முதல் ஆட்டத்திலேயே சென்னை அணியும் மும்பை அணியும் நேருக்கு நேர் மோதவிருக்கின்றன.

சென்னை அணியை பொறுத்தவரை இந்த சீசனில் இதுவரை 7 போட்டிகளில் ஆடி 5 போட்டிகளில் வென்றுள்ளது. இந்த வெற்றிகள் மூலம் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடம் வகிக்கிறது.

மும்பை அணியை பொறுத்தவரை அந்த அணி இதுவரை 7 போட்டிகளில் ஆடி நான்கு போட்டிகளை வென்றுள்ளது. புள்ளிப்பட்டியலில் நான்காம் இடம் வகிக்கிறது.

ஐ.பி.எல்-ல் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் போட்டியென்றால் எப்போதுமே அணல் பறக்கும். இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய போட்டிகளில் மும்பை அணி அதிகமான போட்டிகளில் வென்றிருந்தாலும் ஒவ்வொரு போட்டியுமே சுவாரஸ்யத்திற்கும் பரபரப்பிற்கும் பஞ்சமில்லாமலேயே இருக்கும்.

இரண்டு அணிகளின் பலம், பலவீனம் என்ன?

சென்னை அணி இன்றைய போட்டியில் சில வீரர்களை தவறவிடுகிறது. அதுவே அந்த அணிக்கு பெரிய பின்னடைவாக அமைய போகிறது. முடிந்திருக்கும் 7 போட்டிகளில் சென்னை அணிக்கு அதிக ரன்களை எடுத்துக் கொடுத்தவர் ஃபாப் டூ ப்ளெஸ்சிஸ்.

மொத்தமாக 320 ரன்களை எடுத்திருக்கும் டூ ப்ளெஸ்சிஸ் கடைசி நான்கு போட்டிகளிலும் அரைசதம் அடித்திருந்தார். அதேமாதிரி, முடிந்திருக்கும் 7 போட்டிகளில் சென்னை அணிக்கு அதிக விக்கெட்டுகளை எடுத்து கொடுத்திருப்பவர் சாம் கரன். மொத்தமாக 9 விக்கெட்டுகளை இவர் வீழ்த்தியிருந்தார்.

இன்றைய போட்டியில் இந்த இரண்டு வீரர்களுமே பங்கேற்பது சந்தேகம். சாம் கரன் குவாரண்டைனில் இருப்பதால் அவர் ஆடமாட்டார் என்பது உறுதியாகிவிட்டது. டூப்ளெஸ்சிஸ் கரீபியன் ப்ரீமியர்ல் லீகில் காயமடைந்ததால் 100% உடல் தகுதியோடு இல்லை. அதனால், அவர் ஆடுவதும் சந்தேகமே.

CSK vs MI | சம பலத்துடன் முட்டி மோதப்போகும் சென்னை மற்றும் மும்பை அணிகள்... வெல்லப்போவது யார்??

நல்ல ஃபார்மில் இருந்த இரண்டு வீரர்களை இழந்திருப்பது சென்னை அணிக்கு பின்னடைவாக அமையும். டூப்ளெஸ்சிஸுக்கு பதிலாக ராபின் உத்தப்பாவை ருத்ராஜ் கெய்க்வாட்டுடன் ஓப்பனராக இறக்கலாம் அல்லது மொயீன் அலியை ஓப்பனராக்கலாம். இந்த இரண்டு வாய்ப்புகளே தோனிக்கு இருக்கிறது.

ருத்ராஜ் கெய்க்வாட் எப்போதுமே முதல் இரண்டு மூன்று போட்டிகளில் அவ்வளவாக சோபிக்கமாட்டார். அதன் பிறகே நல்ல ஃபார்முக்கு வந்து வெளுத்தெடுப்பார். டூ ப்ளெஸ்சிஸ் இல்லாத சமயத்தில் ருத்ராஜும் செட் ஆக டைம் எடுத்து சொதப்பினால் அதுவும் சென்னை அணிக்கு பின்னடைவாக இருக்கும்.

ஆனாலும் தீபக் சஹார், ஷர்துல் தாகூர் என அடி ஆழம் வரைக்கும் பேட்டிங் வைத்திருப்பதால் சென்னை அணி இந்த பிரச்சனையை சமாளித்துவிடும் என்றே கணிக்கப்படுகிறது.

பௌலிங்கில் முதல் பாதியிலேயே சென்னை அணி கொஞ்சம் சுமாராகவே இருந்தது. தீபக் சஹார் இன்னும் வீரியத்துடன் பவர்ப்ளேயில் வீசியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ஷர்துல் தாகூர் முதல் பாதியில் மொத்தமாக சொதப்பியிருந்தார். ஆனால், இப்போது இங்கிலாந்து சீரிஸில் சிறப்பாக செயல்பட்டுவிட்டு வருவதால் ஷர்துல் தாகூர் இங்கேயும் ஜொலிக்கக்கூடும்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஹேசல்வுட் மீண்டும் சென்னை அணிக்கு திரும்பியிருப்பது கூடுதல் பலத்தை கொடுக்கும். ஸ்பின்னில் மொயீன் அலியும் ஜடேஜாவும் சீராக பெர்ஃபார்ம் செய்வதும் சென்னை அணிக்கு பலமாக இருக்கிறது.

CSK vs MI | சம பலத்துடன் முட்டி மோதப்போகும் சென்னை மற்றும் மும்பை அணிகள்... வெல்லப்போவது யார்??

மும்பை அணியை பொறுத்தவரைக்கும் ரோஹித், சூரியகுமார், பொல்லார்ட் இந்த மூன்று பேரை தவிர யாருமே பேட்டிங்கில் ஜொலிக்கவில்லை. டீகாக் ஃபார்ம் அவுட்டில் இருந்தார். ஆனால், இப்போது இலங்கை தொடரில் சிறப்பாக ஆடிவிட்டு வருவதால் இங்கேயும் ஜொலிப்பார் என நம்பலாம்.

இஷான் கிஷன் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருக்கிறார். அந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் இங்கே ஆடியாக வேண்டும். ஹர்திக் பாண்ட்யா பந்தும் வீச முடியாமல் பேட்டிங்கிலும் அதிரடி காட்ட முடியாமல் திணறி வருகிறார். அவருடைய கரியரிலேயே இந்த ஐ.பி.எல் தொடர் மிக முக்கியமானதாக இருக்கும்.

பௌலிங்கில் ட்ரெண்ட் போல்ட்டும் பும்ராவும் மிரட்டுவர். இவர்களுடன் நியுசிலாந்தை சேர்ந்தே ஆடம் மில்னேவும் இணையப்போகிறார். சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்து முடிந்திருக்கும் The 100 தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். எக்கானமி 4.6 மட்டுமே.

லெக்ஸ்பின்னர் ராகுல் சஹார் அசத்தலான பெர்ஃபார்மென்ஸ்களை கொடுத்து வந்திருக்கிறார். அதை தொடர்ந்தாலே போதும். இரண்டு அணிகளும் சரிசம அளவில் பலம் பலவீனங்களை கொண்டிருப்பதால் நிச்சயம் இந்த போட்டி பரபரப்பின் உச்சத்தை தொடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

banner

Related Stories

Related Stories