விளையாட்டு

ஆலோசகராக தோனி.. தமிழக வீரருக்கு மறுப்பு.. எப்படி இருக்கிறது உலகக்கோப்பை இந்திய அணி? - ஒரு பார்வை!

ஒரு இடத்திற்கு பல வீரர்கள் போட்டி போடும் நிலைமை இருக்கிறது. அதனால் சில ஏமாற்றங்கள் இருப்பதை தவிர்க்க முடியாது.

ஆலோசகராக தோனி.. தமிழக வீரருக்கு மறுப்பு.. எப்படி இருக்கிறது உலகக்கோப்பை இந்திய அணி? - ஒரு பார்வை!
DELL
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகக்கோப்பை T20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. எதிர்பாராத இன்ப அதிர்ச்சிகளையும் சிறிய ஏமாற்றங்களையும் கொண்ட தேர்வாகவே இந்த அணி இருக்கிறது.

உலகக்கோப்பைக்கான இந்திய அணி :

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், இஷன் கிஷன், சூரியகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, அக்சர் படேல், ராகுல் சஹார், ரவிச்சந்திரன் அஷ்வின், பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷமி, வருண் சக்கரவர்த்தி.

ரிசர்வ் வீரர்கள்: ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் சஹார், ஷர்துல் தாகூர்.

ஆலோசகர் : மகேந்திர சிங் தோனி

யாருமே எதிர்பார்க்காத வகையில் உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டிருக்கிறார். 2019 உலகக்கோப்பையில் ரன் அவுட் ஆகி துயர்மிகு தருணத்தோடு தன் கரியருக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். இப்போது வீரராக இல்லாவிட்டாலும் இந்திய அணிக்கு எதோ ஒரு வகையில் மீண்டும் திரும்பியிருப்பது ரசிகர்களை பரவசமடைய வைத்துள்ளது.

தமிழக வீரர்கள் அஷ்வின், வருண் சக்கரவர்த்தி இருவரும் அணியில் இடம்பிடித்திருக்கின்றனர். அஷ்வின் கடைசியாக 2017 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக T20 போட்டிகளில் ஆடியிருந்தார். அதன் பிறகு, நான்காண்டுகள் கழித்து நேரடியாக உலகக்கோப்பையிலேயே பங்கேற்க இருக்கிறார். இதுவும் பெரிதாக யாரும் எதிர்பார்த்திடாத தேர்வாகவே இருந்தது. இன்னொரு தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக ஓய்வில் இருப்பதால் அஷ்வினுக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கலாம்.

ஆலோசகராக தோனி.. தமிழக வீரருக்கு மறுப்பு.. எப்படி இருக்கிறது உலகக்கோப்பை இந்திய அணி? - ஒரு பார்வை!

வருண் சக்கரவர்த்தியை பொறுத்தவரைக்கும் புதிர்மிக்க ஸ்பின்னராக ஐ.பி. எல் இல் தொடர்ச்சியாக கலக்கி வருகிறார். அதனாலயே அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நிச்சயம் அணியில் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. காயத்திலிருந்து இப்போதுதான் மீண்டிருக்கிறார் என்பதால் அவர் தவிர்க்கப்பட்டிருக்கிறார்.

தவான், பிரித்திவி ஷா போன்ற ஓப்பனிங் ஸ்லாட்டில் ஆடக்கூடிய பேட்ஸ்மேன்களுக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மிடில் ஆர்டரில் மனீஷ் பாண்டே, சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. கோலியின் பிடித்தமான வீரர்களான சஹால் மற்றும் சிராஜுக்கு கூட அணியில் இடமில்லை.

இதை பெரிய குறையாக சொல்ல முடியாது. ஏனெனில், இந்தியா கிரிக்கெட் உலகில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது. ஏகப்பட்ட திறமையான வீரர்கள் இந்திய அணிக்கு தொடர்ந்து அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றனர். ஒரு இடத்திற்கு பல வீரர்கள் போட்டி போடும் நிலைமை இருக்கிறது. அதனால் சில ஏமாற்றங்கள் இருப்பதை தவிர்க்க முடியாது.

ஒட்டுமொத்தமாக ஒரு சிறப்பான அணியோடு அனுபவமிக்க தோனியை ஆலோசகராக கொண்டு கோப்பையை வென்றே ஆக வேண்டும் என்ற தீர்க்கத்தோடு இந்திய அணி களமிறங்குகிறது. லட்சியம் நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

banner

Related Stories

Related Stories