விளையாட்டு

அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய அணி பயிற்சியாளர்கள்: இதுதான் காரணமா? - BCCI கடும் அதிருப்தி!

கொரோனா விதிகளை மீறி நிகழ்ச்சி ஒன்றில் ரவி சாஸ்திரி பங்கேற்றதால் பிசிசிஐ கடும் அதிருப்தியில் உள்ளது.

அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய அணி பயிற்சியாளர்கள்: இதுதான் காரணமா? - BCCI கடும் அதிருப்தி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக இந்திய அணி இங்கிலாந்து சென்றது. இந்தத் தொடரில் இரண்டு போட்டிகளை வெற்றி பெற்றதன் மூலம் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

முன்னதாக இங்கிலாந்துடனான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடந்துகொண்டிருந்தபோது இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து ரவி சாஸ்திரி தனிமைப்படுத்தப்பட்டார். மேலும் இவருடன் தொடர்பிலிருந்த பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இப்படி அடுத்தடுத்து பயிற்சியாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளது. இந்நிலையில் செப்டம்பர் 2ஆம் தேதி நடந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, விராட் கோலி மற்றும் இந்திய வீரர்கள் கலந்துகொண்டது தெரியவந்துள்ளது.

அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய அணி பயிற்சியாளர்கள்: இதுதான் காரணமா? - BCCI கடும் அதிருப்தி!

கொரோனா விதிகளை மீறி நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால்தான் இந்திய வீரர்களுக்கு அடுத்தடுத்து தொற்று பாதிப்பு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இதுகுறித்து பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் கேப்டன் விராட் கோலி இருவரிடமும் பிசிசிஐ விளக்கம் கேட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories