விளையாட்டு

கிரிக்கெட் வீரருக்கு வைக்கப்பட்ட வானுயர கட் அவுட்.. கெத்து காட்டிய ரசிகர்கள்: எதற்கு தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் வேகபந்து வீச்சாளர் முகமது சிராஜுக்கு ஹைதராபாத்தில் வானுயர கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் வீரருக்கு வைக்கப்பட்ட வானுயர கட் அவுட்.. கெத்து காட்டிய ரசிகர்கள்: எதற்கு தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு, அவர்களின் ரசிகர்கள், ஆதரவாளர்கள் பிரம்மாண்டமான கட் அவுட்டுகளை வைத்து தங்களின் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்துவார்கள்.

இந்நிலையில், முதல் முறையாக இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு வானுயர கட் அவுட் வைத்து அவரின் ரசிகர்கள் அசத்தியுள்ளனர். அதுவும் பந்து வீச்சாளருக்கு என்பது இதில் கூடுதல் சிறப்பு.

இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டிகளை விளையாட இங்கிலாந்து சென்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெறும் நிலையிலிருந்தது. ஆனால் மழை குறுக்கிட்டதால் போட்டி டிராவானது.

இதையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி சிறப்பாக விளையாடி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியை இந்திய ரசிகர்கள் விமர்சையாக கொண்டாடினர்.

இந்நிலையில், வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 8 விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவின் வெற்றிக்குப் பக்க பலமாக இருந்தார். இதைக் கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள் ஹைதராபாத்தில் வானுயர கட் அவுட் வைத்துள்ளனர்.

முகமது சிராஜ் விக்கெட் வீழ்த்தும் போது, கப் சிப் என அமைதியாக இருக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்தும் விதமாக தனது உதட்டின் மீது விரலை வைத்துக் காட்டுவார். இது தான் இவரது அடையாளம்.

இந்த உற்சாக அடையாளத்தைக் கொண்ட முகமது சிராஜுக்கு வானுயர கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கட் அவுட் படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories