விளையாட்டு

கனவைச் சிதைத்த தாலிபான்கள்.. பாராலிம்பிக்கில் பங்கேற்க இருந்த வீராங்கனை கண்ணீர்.. உதவுமாறு கோரிக்கை!

பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்க உதவுமாறு ஆப்கானிஸ்தான் வீராங்கனை கோரிக்கை விடுத்துள்ளார்.

கனவைச் சிதைத்த தாலிபான்கள்.. பாராலிம்பிக்கில் பங்கேற்க இருந்த வீராங்கனை கண்ணீர்.. உதவுமாறு கோரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தாலிபான்கள் கைப்பற்றிவிட்டதால் அங்கு மக்களின் வாழ்க்கை முற்றிலுமாக தலைகீழாக மாறிவிட்டது. மேலும் தாலிபான்களிடம் நாடு சிக்கிவிட்டதால் தங்களின் உயிருக்கு ஆபத்து நேரிடும் என்ற அச்சத்தில் மக்கள் நாட்டைவிட்டு வெளியேறி வருகிறார்கள்.

இந்நிலையில், டோக்கியோவில் அடுத்த வாரம் நடக்க விருக்கும் பாராலிம்பிக் போட்டியில் ஆப்கானிஸ்தானில் இருந்து டேக்வோண்டோ பிரிவில் ஷாகியா என்ற வீராங்கனை பங்கேற்க இருந்தார். ஆப்கானிஸ்தான் வரலாற்றிலேயே பெண் ஒருவர் முதல்முறையாக பாராலிம்பிக்கில் பங்கேற்கவிருப்பது இப்போதுதான்.

ஆனால், தாலிபான்கள் முழுமையாக ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிவிட்டதால், ஷாகியா பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியாது என ஆப்கானிஸ்தான் பாராலிம்பிக் குழு தெரிவித்துள்ளது. இதனால் பெண் வீராங்கனை ஷாகியாவின் கனவும், ஆப்கானிஸ்தான் வரலாற்றின் எழுச்சியும் முற்றாகச் சிதைந்துவிட்டது.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் பாராலிம்பிக் குழு கூறுகையில், "நாட்டிலிருந்து இரண்டு விளையாட்டு வீரர்கள் ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்கும் பாராலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது. ஆனால், துரதிருஷ்டவசமாக ஆப்கானிஸ்தானில் நடந்து கொண்டிருக்கும் சூழல் காரணமாக காபூலை விட்டு நாங்கள் வெளியேற முடியவில்லை.

ஆப்கானிஸ்தான் வரலாற்றில் வீராங்கனை ஒருவர் பாராலிம்பிக்கில் பங்கேற்கவிருப்பதால் நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம். ஷாகியாவும் உற்சாகமாக இருந்தார். ஆனால் அவர் பங்கேற்க முடியாததை நினைக்கும்போது இதயமே உடைந்துவிட்டது போல் இருக்கிறது. இவரது பங்கேற்பு ஆப்கானிஸ்தான் வரலாற்றில் ஒரு எழுச்சியாக இருந்திருக்கும். பல பெண்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகவும் ஷாகியா இருந்திருப்பார்" எனத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஷாகியா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்க உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். 1996ஆம் ஆண்டிலிருந்து ஆப்கானிஸ்தான் வீரர்கள் பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்று வருகிறார்கள். 2008ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற போட்டியில் ஆப்கனிலிருந்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர்.

பிறகு 2012ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற பாராலிம்பிக்கில் ரோகுல்லா நிக்பாய் என்ற ஆப்கானிஸ்தான் வீரர் முதல் தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார். தற்போது ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிவிட்டதால் டோக்கியோ 2020 பாராலிம்பிக் போட்டியில் ஒரு ஆப்கன் வீரர் கூட பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories