விளையாட்டு

அரைகுறை பேட்ஸ்மேன்கள்.. விக்கெட் இன்றி திணறும் பௌலர்கள்.. இங்கிலாந்தை எப்படி சமாளிக்க போகிறது இந்தியா?

முழுக்க முழுக்க ஸ்விங் பந்துவீச்சிற்கு சாதகமான இங்கிலாந்து மைதானங்களில் பேட்டிங் ஆட இந்திய வீரர்கள் ரொம்பவே திணறுகின்றனர்.

அரைகுறை பேட்ஸ்மேன்கள்.. விக்கெட் இன்றி திணறும் பௌலர்கள்.. இங்கிலாந்தை எப்படி சமாளிக்க போகிறது இந்தியா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆரம்பமாக இருக்கிறது. முதல் போட்டி நாட்டிங்காமில் வைத்து இன்று தொடங்குகிறது. கோலி தலைமையிலான இந்திய அணி கடந்த ஜுன் மாதத்தில் இங்கிலாந்துக்கு பறந்திருந்தது. அங்கே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் நியுசிலாந்துக்கு எதிராக மோதியிருந்தது.

அதில், மோசமாக பேட்டிங் ஆடி போட்டியை இழந்தை கோப்பையையும் பறிகொடுத்தது. அந்த போட்டி முடிந்த பிறகும் இந்திய வீரர்கள் இங்கிலாந்திலேயே தங்கியிருந்தனர். 5 டெஸ்ட் போட்டிகளை கொண்ட இங்கிலாந்துக்கு எதிரான தொடரையும் ஆடிவிட்டு வருவதே இந்தியாவுடைய திட்டமாக இருந்தது.

இடையில் கொரோனா கட்டுப்பாடுகளில் கூடுதல் சுதந்திரமாக இருந்த ரிஷப் பண்ட் போன்ற ஒரு சில வீரர்களுக்கு கொரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டது. அதிலிருந்து இப்போது அவர்கள் மீண்டு மைதானத்துக்குள் களமிறங்க தயாராகிவிட்டனர். காயங்களும் இந்திய அணிக்கு பெரிய தலைவலியை கொடுத்திருக்கிறது. ஏற்கனவே சுப்மன் கில் காயம் காரணமாக இந்தியாவிற்கு திரும்பிவிட்டார்.

அரைகுறை பேட்ஸ்மேன்கள்.. விக்கெட் இன்றி திணறும் பௌலர்கள்.. இங்கிலாந்தை எப்படி சமாளிக்க போகிறது இந்தியா?

பயிற்சி போட்டியின் போது வாஷிங்டன் சுந்தரும் ஆவேஷ் கானும் காயமடைந்திருந்தனர் அவர்களும் இந்தியாவிற்கு திரும்பிவிட்டனர். இப்போது மயங்க் அகர்வாலும் வலைபயிற்சியின் போது காயமடைந்திருக்கிறார். அவர் முதல் போட்டியில் ஆட வாய்ப்பில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் காயங்களால் வீரர்கள் வெளியேறியதால் அணியில் இல்லாத பிரித்திவி ஷா வும் சூரியகுமார் யாதவும் இங்கிலாந்துக்கு அழைக்கப்பட்டனர். ஆனால், அவர்களும் குவாரண்டைனை முடித்துவிட்டு மூன்றாவது போட்டியிலிருந்தே அணியுடன் இணைவார்கள் என தெரிகிறது.

இந்தியா இங்கிலாந்தில் எப்போதும் திணறவே செய்திருக்கிறது. குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் இங்கிலாந்தில் 14 போட்டிகளில் ஆடியிருக்கும் இந்தியா 11 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது. முழுக்க முழுக்க ஸ்விங் பந்துவீச்சிற்கு சாதகமான இங்கிலாந்து மைதானங்களில் பேட்டிங் ஆட இந்திய வீரர்கள் ரொம்பவே திணறுகின்றனர்.

இப்போதைய இந்திய அணியில் கேப்டன் கோலி, புஜாரா, ரஹானே, ரோஹித் என முக்கியமான பேட்ஸ்மேன்கள் எல்லாருமே அரைகுறையான ஃபார்மிலேயே இருக்கின்றனர். கோலி சதமடித்து நெடுங்காலம் ஆகிவிட்டது. புஜாரா பெரிய இன்னிங்ஸ் ஆடுவதில்லை. ரஹானே சீராக பெர்ஃபார்ம் செய்வதில்லை. இவற்றோடு இப்போது ரோஹித்துடன் யார் ஓப்பனிங் இறங்குவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அரைகுறை பேட்ஸ்மேன்கள்.. விக்கெட் இன்றி திணறும் பௌலர்கள்.. இங்கிலாந்தை எப்படி சமாளிக்க போகிறது இந்தியா?

ரொம்ப நாட்களாக பென்ச்சில் உட்கார வைக்கப்பட்டிருந்த கே.எல்.ராகுல் கவுண்டி அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் சதமடித்திருந்தார். அதனால் அவரை ரோஹித்துடன் ஓப்பனிங் இறக்கவே அதிக வாய்ப்பிருக்கிறது. இந்திய பேட்ஸ்மேன்களில் குறைந்தபட்சம் இரண்டு வீரர்களாவது நிலைத்து நின்று பெரிய இன்னிங்ஸை ஆடியாக வேண்டும்.

பௌலிங்கை பொறுத்தவரைக்கும் பும்ரா, ஷமி, இஷாந்த், சிராஜ், ஷர்துல் என நல்ல வேகப்பந்து வீச்சாளர்களே இருக்கின்றனர். ஆனால், அனுபவத்திற்கு முன்னுரிமை கொடுத்து கோலி தேர்ந்தெடுத்த பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா கூட்டணி, டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் சொதப்பியிருந்தது. ஷமி மட்டுமே ஓரளவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் வீசியிருந்தார்.

எனவே இந்த முறை சிராஜ் மற்றும் ஷர்துலுக்கு கோலி அதிக முக்கியத்துவம் கொடுக்க வாய்ப்பிருக்கிறது. இருவருமே ஆஸ்திரேலிய சீரிஸின் மேட்ச் வின்னர்கள். அவர்கள் இங்கிலாந்திலும் சிறப்பாக செயல்படுவார்கள் என நம்பலாம். ஸ்பின்னை பொறுத்தவரைக்கும் சந்தேகமே இல்லாமல் அஷ்வினும் ஜடேஜாவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். சமீபத்தில் கவுண்டி போட்டியில் ஆடி அஷ்வின் ஒரு 5 விக்கெட் ஹாலும் எடுத்துள்ளார். இருவரும் பேட்டிங்கிலும் கணிசமான பங்களிப்பை அளிப்பார்கள் என்பதால் நிச்சயம் ப்ளேயிங் லெவனில் இருப்பார்கள்.

அரைகுறை பேட்ஸ்மேன்கள்.. விக்கெட் இன்றி திணறும் பௌலர்கள்.. இங்கிலாந்தை எப்படி சமாளிக்க போகிறது இந்தியா?

இங்கிலாந்துக்கு அதன் சொந்தமண்ணில் வைத்து நடைபெறும் தொடர் என்கிற சாதகம் இருக்கிறது. ஆனால், அவர்களும் நிறை குறைகளுடன் இந்திய அணியை போன்றேதான் இருக்கின்றனர். பென் ஸ்டோக்ஸ் இல்லாதது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும். பேட்டிங்கில் க்ராலி, பர்ன்ஸ், லாரன்ஸ் போன்ற இளம் வீரர்கள் சீரற்ற முறையில் பெர்ஃபார்ம் செய்கின்றனர்.

இதனால் கேப்டன் ரூட் மீது அதிக அழுத்தம் உண்டாக வாய்ப்பிருக்கிறது. லிமிடெட் ஓவர் ஸ்பெசலிஸ்ட்களான பட்லரும், பேர்ஸ்ட்டோவும் நின்று பெரிய இன்னிங்ஸ் ஆடி கொடுக்க வேண்டும். ஆண்டர்சன், ப்ராட் இருவரும்தான் இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய பலம். இவர்களின் அனுபவமே இந்தியாவுக்கு மிகப்பெரிய எதிரியாக இருக்கும்.

இங்கிலாந்து அணி இந்த ஆண்டு இறுதுயில் ஆஸ்திரேலியாவில் ஆஷஸ் தொடரில் ஆடவுள்ளது. அதற்காக, தங்கள் நாட்டு பிட்ச்களை கொஞ்சம் ஃப்ளாட்டாக தயாரிக்கும் எண்ணமும் அவர்களுக்கு இருக்கலாம். ஆனால், நியுசிலாந்துக்கு எதிரான தொடரிலும் அப்படி செய்தே தொடரை இழந்திருந்தனர். இதனால் பிட்ச் எப்படியிருக்கும் என்பது கணிக்க முடியாததாகவே இருக்கிறது.

இரண்டு அணிகளும் கடைசியாக பெரிய தோல்வியை சந்தித்துவிட்டு இந்த தொடருக்கு வந்திருக்கின்றனர். அதனால் இந்த தொடரின் வெற்றி அணிகளுக்குமே தேவைப்படுகிறது. நிச்சயமாக இரண்டு அணிகளும் வெற்றிக்காக மல்லுக்காட்டுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

-உ.ஸ்ரீ

banner

Related Stories

Related Stories