விளையாட்டு

டோக்கியோவில் கூட்டம் கூடி மதுவிருந்து நடத்தியதால் சர்ச்சை; ஒலிம்பிக் வீரர்களை கடுமையாக எச்சரித்த CEO!

போட்டியின் விதிகளை மீறும் எவராக இருந்தாலும் அவர்கள் டோக்கியோவில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டோக்கியோவில் கூட்டம் கூடி மதுவிருந்து நடத்தியதால் சர்ச்சை; ஒலிம்பிக் வீரர்களை கடுமையாக எச்சரித்த CEO!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா பரவலுக்கு இடையே டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படி இருக்கையில் ஒலிம்பிக் நடைபெறும் பகுதிக்கு வெளியே தடகள வீரர்கள் சிலர் கட்டுப்பாடுகளை மீறி மது விருந்தில் ஈடுபட்டதாக தற்போது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

மேலும் கடந்த வெள்ளியன்று டோக்கியோவிற்கு வெளியே உள்ள பூங்காவில் தடகள வீரர், வீராங்கனைகளும் அவர்களது அணியைச் சேர்ந்த பலரும் மதுவிருந்து நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சுமார் 11 ஆயிரம் தடகள வீரர் வீராங்கனைகளுக்கு ஒலிம்பிக் போட்டியின் தலைமை நிர்வாகி டொஷிரோ முட்டோ கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளதோடு தங்களது அறைகளில் தனித்தனியே வேண்டுமானால் மது அருந்திக்கொள்ளலாம் என்றுக் கூறியுள்ளார்.

மேலும் போட்டியின் விதிகளை மீறும் எவராக இருந்தாலும் அவர்கள் டோக்கியோவில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றும் அவர்களது சான்றுகளும் பறிக்கப்படும் என தெரிவித்துள்ளார். பார்க்கில் மது அருந்தியவர்களிடம் முறையாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதன் முடிவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என டொஷிரோ தெரிவித்துள்ளார்.

இதனிடையே கொரோனா விதிமுறைகளை மீறியதாக ஏற்கெனவே 6 வீரர்களின் அனுமதியை போட்டிக்குழு ரத்து செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories