விளையாட்டு

இந்திய அணி மேஜிக் செய்யுமா?!. ரிசல்ட் Vs ட்ரா என்ன ஆக போகிறது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்!? #WTCFINALS

எதாவது மேஜிக் நடந்தால்தான் ரிசல்ட் வரும் என்கிற நிலையே இப்போது இருக்கிறது. எந்த அணி மேஜிக் நிகழ்த்தும் என்று பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

இந்திய அணி மேஜிக் செய்யுமா?!. ரிசல்ட் Vs ட்ரா என்ன ஆக போகிறது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்!? #WTCFINALS
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் நான்காவது நாள் ஆட்டமும் ஒரு பந்து கூட வீசப்படாமல் மழையால் ரத்தானதால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர். மீதமிருக்கும் இரண்டு நாட்கள் எப்படியிருக்கும்?? போட்டிக்கு முடிவு கிடைக்குமா?? கிடைக்குமெனில் கோப்பையை வெல்லப்போவது யார்??

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 217 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருந்தது. இதனை தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியுசிலாந்து அணி 101-2 என்ற நிலையில் இருந்தது. போதிய வெளிச்சம் இல்லாததால் அரைமணி நேரத்திற்கு முன்பாகபே மூன்றாம் நாள் ஆட்டம் முடிந்திருந்தது.

இந்நிலையில்தான் தொடர் மழையால் நான்காம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. இப்போதைய நிலையில் நியுசிலாந்து அணி 116 ரன்கள் பின்னிலையில் உள்ளது. இன்னும் எட்டு விக்கெட்டுகளை வைத்துள்ளது. களத்தில் வில்லியம்சனும் ராஸ் டெய்லரும் பேட்டிங் செய்து கொண்டிருக்கின்றனர். இந்த புள்ளியில் யோசித்து பார்த்தால் ஆட்டம் நியுசிலாந்துக்கு சாதகமாக இருப்பதாகவே தோன்றும்.

இந்திய அணி மேஜிக் செய்யுமா?!. ரிசல்ட் Vs ட்ரா என்ன ஆக போகிறது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்!? #WTCFINALS

இன்று முழுவதும் நியுசிலாந்து பேட்டிங் செய்து நல்ல முன்னிலையை எடுத்து இந்தியாவை நாளை இரண்டாம் இன்னிங்ஸை ஆட வைத்து, சீக்கிரமே ஆல் அவுட் எடுத்து போட்டியை நியுசிலாந்து வெல்ல நினைக்கும். ஒருவேளை, அதிகமாக மழை பெய்திருப்பதால் பிட்ச் பேட்டிங் செய்ய கடினமாகியிருக்கும் பட்சத்தில் இந்திய அணி இன்று நியுசிலாந்தின் விக்கெட்டுகளை விரைவாக எடுக்கவும் வாய்ப்பிருக்கிறது.

அப்படி, நியுசிலாந்தை 250 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கும்பட்சத்தில், இந்திய அணி பதிலுக்கு ஒரு இரண்டு மூன்று செஷன்களை ஆடி நல்ல டார்கெட்டை செட் செய்யும். மீதமிருக்கும் நேரத்தில் நியுசிலாந்தை ஆல் அவுட் ஆக்க முனையும். இப்படி நடக்கும்பட்சத்தில் இந்திய அணி கோப்பையை வெல்லும். ஆனால், இவ்விரண்டுக்கும் 40% வாய்ப்புகளே இருக்கிறது. 60% இந்த போட்டி ட்ராவை நோக்கி செல்வதற்கான வாய்ப்பே இருக்கிறது.

ஏனெனில், ஒருநாளைக்கு 98 ஓவர்கள் என்ற கணக்கில் இரண்டு நாட்களுக்கு 196 ஓவர்கள் மீதமிருக்கிறது. இந்த 196 ஓவர்களும் முழுமையாக வீசப்பட்டால் ரிசல்ட்டுக்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அப்படி முழுமையாக வீசப்படுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. ஒன்று, மழை குறுக்கிட்டு ஆட்டம் தடைபட வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை மழையே இல்லாவிட்டாலும் போதிய வெளிச்சம் இல்லை என்கிற காரணத்தால் ஆட்டம் தடைபட வாய்ப்பிருக்கிறது. அதனால்தான் இந்த போட்டி ட்ராவை நோக்கி செல்வதற்கே அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இந்திய அணி மேஜிக் செய்யுமா?!. ரிசல்ட் Vs ட்ரா என்ன ஆக போகிறது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்!? #WTCFINALS

ட்ராவை நோக்கி செல்லும்பட்சத்தில் வெற்றி கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும். இதை ரசிகர்கள் அவ்வளவாக விரும்பவில்லை. ஐ.சி.சி நடத்தும் பெரிய தொடர் ஒன்றில் தகுதியும் திறனும் வாய்ந்த ஒரு அணியே வெற்றியாளராக வர வேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர். இதனால் ஐ.சி.சியையும் இங்கிலாந்தையும் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சனே 'ஐ.சி.சி யின் முக்கியமான போட்டிகளை இங்கிலாந்தில் நடத்தாதீர்கள்' என கருத்து தெரிவித்துள்ளார். எதாவது மேஜிக் நடந்தால்தான் ரிசல்ட் வரும் என்கிற நிலையே இப்போது இருக்கிறது. எந்த அணி மேஜிக் நிகழ்த்தும் என்று பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

-உ.ஸ்ரீ

banner

Related Stories

Related Stories