விளையாட்டு

பி.டி.உஷா சாதனையை முறியடித்த தங்க மங்கை தனலட்சுமி: பரிசுத்தொகையை வழங்காமல் இழுத்தடிக்கும் எடப்பாடி அரசு!

தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த வீராங்கனை தனலட்சுமி தேசிய அளவிலான தடகளப் போட்டியில் தங்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.

பி.டி.உஷா சாதனையை முறியடித்த தங்க மங்கை தனலட்சுமி: பரிசுத்தொகையை வழங்காமல் இழுத்தடிக்கும் எடப்பாடி அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் கடந்த வாரம் தேசிய தடகளப் போட்டி நடைப்பெற்றது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த தனலட்சுமி என்ற வீராங்கனை 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கமும் , 200 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும் வென்று சாதித்துள்ளார்.

100 மீட்டர் தொலைவை 11.39 விநாடிகளிலும், 200 மீ ஓட்டத்தை 23.26 விநாடிகளிலும் கடந்து, முன்னணி வீராங்கனைகளான டூட்டி சந்த், ஹிமா தாஸ் உட்பட பத்மஸ்ரீ வீராங்கனை பி.டி.உஷா சாதனையையும் தனலட்சுமி முறியடித்துள்ளார். மேலும் ஒலிம்பிக் போட்டியில் தகுதிப் பெறுவதற்கு 11.15 விநாடிகள் நிர்ணயிக்கப்பட்ட நிலையில் நூலிழையில் தனலட்சுமி வாய்ப்பை தவறவிட்டிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

இந்நிலையில், தடகள போட்டியில் தங்கம் வென்று தமிழகம் திரும்பிய தனலட்சுமிக்கு சொந்த ஊரான திருச்சியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பி.டி.உஷா சாதனையை முறியடித்த தங்க மங்கை தனலட்சுமி: பரிசுத்தொகையை வழங்காமல் இழுத்தடிக்கும் எடப்பாடி அரசு!

அதன் பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசுகையில் “நான் நீண்ட காலமாக இதற்காக என்னை தயார்படுத்திக்கொண்டேன், என் தாயாரும் பயிற்சியாளர்களும் எனக்கு உதவி செய்ததால் என்னால் வெற்றிப்பெற முடிந்தது. மேலும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதே எனது உட்சபச்ச ஆசை” என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனியார் தொலைகாட்சிக்கு தனலட்சுமியின் தாயார் அளித்துள்ள பேட்டியில், தனலட்சுமி 10 வயது முதலே ஓட்டப் பந்தயத்தின் மீதான ஈர்ப்பால் பல்வேறு பரிசுகளை வாங்கி வீடு முழுவதும் குவித்துள்ளார். அவர் தந்தை சிறு வயதிலேயே இறந்துவிட்டதால் எங்களால் குடும்பம் நடத்தவே முடியாத நிலை உருவானது.

ஆடு, மாடு வளர்த்து வீடு வீடாக சென்று பால் விற்று, வீட்டு வேலை செய்து அதன் மூலம் வரும் வருமானத்தை வைத்தும், கடும் சிரமங்களுக்கு மத்தியில் sports shoe வாங்கி கொடுத்தேன். கணவரின் மறைவுக்குப் பின் மூன்று பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு சிரமப்பட்ட எனக்கு, மகளின் வெற்றி மன மகிழ்ச்சியை தருகிறது எனக் கூறியுள்ளார்.

இதற்கிடையே தங்கம் வென்று சாதனை புரிந்த தடகள வீராங்கங்கனை தனலட்சுமிக்கு தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் “விளையாட்டு வானில் மீண்டும் ஒரு தமிழக நட்சத்திரம். தடகளப் போட்டிகளில் சாதனை மங்கையாக விளங்கும் திருச்சியை சேர்ந்த தனலட்சுமிக்கு வாழ்த்துக்கள். மின்னலென ஓடும் அவரது சாதனை சிறகுகள் அவரை மேலும் பல உயரங்களுக்கு அழைத்துச் செல்லட்டும்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான தடகளப் போட்டியிலும் தனலட்சுமி பரிசு பெற்றுள்ளார். ஆனால் கொரோனவை காரணம் காட்டி பரிசுத் தொகையான ஒரு லட்சம் ரூபாயை இன்னும் வழங்கப்படாமல் அதிமுக அரசு காலம் தாழ்த்தி வருகிறது.

banner

Related Stories

Related Stories