விளையாட்டு

தேசிய பாரா பவர் லிஃப்டிங் போட்டி : தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்த தமிழக மாற்றுத்திறனாளிகள்!

தேசிய பளு தூக்கும் போட்டியில் தமிழக மாற்றுத்திறனாளி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.

தேசிய பாரா பவர் லிஃப்டிங் போட்டி : தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்த தமிழக மாற்றுத்திறனாளிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மாற்றுத்திறனாளிகளுக்கான 18வது சீனியர் மற்றும் 14வது ஜூனியர் தேசிய பாரா பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப் 2021 போட்டி கர்நாடக மாநிலத்தின் பெங்களூரில் மார்ச் 19 முதல் 21 ஆம் தேதி வரை ஸ்ரீ கண்டி ரவா மைதானத்தில் நடைபெற்றது.

இதில் தமிழகம் சார்பாக கலந்து கொண்ட வீரர்களுக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர் கணேஷ் சிங் மற்றும் அணி மேலாளர் விஜயசாரதி தலைமையில் ஆண்கள் பிரிவில் 7 வீரர்களும் பெண்கள் பிரிவில் 2 வீராங்கனைகளும் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் தமிழக வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 6 பதக்கங்களை வென்று குவித்தனர்.

பதக்கங்களை வென்று சாதித்த மாற்றுத்திறனாளிகளின் பட்டியல்:-

1. V.சரவணன்

59 கிலோ எடை பிரிவு

தங்கப் பதக்கம் (தமிழக வரலாற்றின் பேரா பவர் லிஃப்டிங் பிரிவில் முதல் தேசிய தங்கப் பதக்கம் )

2. C.வெங்கடேஷ் பிரசாத்

59 கிலோ எடை பிரிவு (தமிழக வரலாற்றின் முதல் ஜூனியர் பிரிவில் தங்கப் பதக்கம்)

3. B. கோமதி

50 கிலோ எடை பிரிவு

வெள்ளிப் பதக்கம்

4. R. கஸ்தூரி

67 கிலோ எடை பிரிவு (முதல் பாரா பெண் பவர் லிஃப்டிங் சாம்பியன்)

வெள்ளிப் பதக்கம்

5. G .வேல்முருகன்

65 கிலோ எடை பிரிவு

வெண்கலப் பதக்கம்

6. M.கிருஷ்ணமூர்த்தி

59 கிலோ எடை பிரிவு

வெண்கலப் பதக்கம்

banner

Related Stories

Related Stories