விளையாட்டு

ஆஸி பவுலர்களை திணறடித்த பார்ட்னர்ஷிப் : வலியுடன் போராடி அணியைக் காத்த அஸ்வின் - விஹாரி! #IndvAus

இந்தியா தோல்வியடையும் என்ற நிலையை மாற்றி வெற்றிக்கு வித்திட்ட அஸ்வின் - விஹாரி ஜோடிக்கு இணையத்தில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

ஆஸி பவுலர்களை திணறடித்த பார்ட்னர்ஷிப் : வலியுடன் போராடி அணியைக் காத்த அஸ்வின் - விஹாரி! #IndvAus
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி டி-20, ஒரு நாள் தொடர்களையடுத்து தற்போது டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது.

சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெல்ல 407 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா. இந்த இலக்கை இந்திய அணி போராடி ட்ரா செய்துள்ளது. இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 334 ரன்கள் எடுத்து ட்ரா செய்துள்ளது.

ரிஷப் பன்ட்டின் அதிரடியும், விஹாரி - அஸ்வின் அபாரமான பார்ட்னர்ஷிப்பும்தான், இந்திய அணி ட்ரா செய்ததற்கு மிக முக்கிய காரணம். இந்த ஆட்டத்தில் 130 ஓவர்களுக்கு மேல் விளையாடியே தீர வேண்டும் என்ற நிர்பந்தத்துடன் 2வது இன்னிங்ஸில் களம் இறங்கியது இந்திய அணி. ஆனால், ஜடேஜாவுக்கு ஏற்பட்ட பெருவிரல் காயம் காரணமாக 2வது இன்னிங்ஸை விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டது.

ஆஸி பவுலர்களை திணறடித்த பார்ட்னர்ஷிப் : வலியுடன் போராடி அணியைக் காத்த அஸ்வின் - விஹாரி! #IndvAus

இந்திய அணிக்காக களம் இறங்கிய ரோகித் - சுப்மன் கில் தொடக்கத்தை தொடர்ந்து செதேஷ்வர் புஜாரா தன்பங்கிற்கு தன்விளையாட்டை நிதானமாகத் தொடங்கினார். பின்னர் வந்த ரஹானே 18 பந்துகளில் மைதானத்தைவிட்டு வெளியேறினார். அதன்பின்னர் ரிஷப் பன்ட் - புஜாரா பார்ட்னர்ஷிப் அமைந்தது.

இருவரும் அடுத்தது விக்கெட்டை இழந்ததும் இந்திய அணியின் தோல்வி நிச்சயிக்கப்பட்டதாக பேச்சுகள் எழுந்தது. கேலி பேச்சுக்கள் எல்லாம் எங்களை ஒன்றும் செய்துவிடாது என சொல்லி அடிக்கும்படி ஆஸி வீரர்களுக்கு அச்சத்தைக் கொடுத்தார் விஹாரி. விஹாரியின் ஆட்டத்தால் இந்திய அணி புத்துணர்ச்சியடைந்தது. விஹாரிக்கு கைகொடுக்க அஷ்வின் களம் இறங்கினார்.

அவ்வளவுதான் இரண்டு பேரின் பார்ட்னர்ஷிப் இந்த விளையாட்டையே கிளாஸாக மாற்றியது. இதில் விஹாரிக்கு காயம் (Hamstring Injury) ஏற்பட, ஓடும்போது திடீரென தசைபிடிப்பு ஏற்பட்டு, கிளவுஸை தூக்கி எறிந்துவிட்டு - கீழே சுருண்டு விழுந்தார். ஆனாலும், வலியை பொறுத்துக்கொண்டு மட்டையை விளாசினார் விஹாரி.

ஆஸி பவுலர்களை திணறடித்த பார்ட்னர்ஷிப் : வலியுடன் போராடி அணியைக் காத்த அஸ்வின் - விஹாரி! #IndvAus

அதேபோல், உடனிருந்த அஸ்வின் உடம்பின் எல்லா இடங்களிலும் அடி வாங்கினார். அதில் ஒருமுறை கையில் வேகமாகப் பட்ட பந்தால், துடித்துப்போய் கத்தினார். அஸ்வின் வலியால் அவதிப்பட்டது குறித்து அஸ்வினின் மனைவி ப்ரீத்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அஸ்வின் நேற்று படுக்கச் செல்லும்போது அவருக்கு முதுகுப்பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. காலையில் எழுந்ததும் அவரால் குனிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி இருந்தும் அணிக்காக சிறப்பான பங்களிப்பைச் செய்துள்ளார். அஸ்வின் 128 பந்தில் 39 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் விட்டுக் கொடுக்காத ஒரு அசாத்திய உறுதியை அஸ்வின் வெளிப்படுத்தியுள்ளார்.

ஆஸி பவுலர்களை திணறடித்த பார்ட்னர்ஷிப் : வலியுடன் போராடி அணியைக் காத்த அஸ்வின் - விஹாரி! #IndvAus

மேலும் இன்றைய ஆட்டத்தின் மூலம், “இந்திய அணியின் அடுத்த ட்ராவிட் நான்தான்” என சொல்லாமல் சொல்லியிருக்கிறார் விஹாரி. சுவர் போல நின்று 161 பந்துகளில் 23 ரன்களை மட்டுமே அடித்தார் விஹாரி. அதில் 4 பவுண்டரிகளும் அடங்கும்.

இந்த விளையாட்டில் குட் லெந்த், ஷார்ட் பால் - இன் கட்டர் - அவுட் ஸ்விங் - யாக்கர் என அஸ்திரேலிய பவுலர்களின் பவுலிங்களை அசராமல் ஆடி, வெரியேஷன்களால் என்னை ஒன்றும் செய்யமுடியாது என்பதனை காட்டியுள்ளார். விக்கெட் எடுக்க முடியாமல் திணறிய ஆஸி பவுலர்களுக்கு விஹாரி பெரும் இம்சையாக மாறிவிட்டார்.

அதுமட்டுமல்லாது டாப் பால் ஆடவிட்டு பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுக்கும் பவுலர்களின் பாணியை, முறியடித்துவிட்டார் இந்த விஹாரி. இந்தியா 200 ரன்கள் கூட தாண்டாது என ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் பாண்டிங் கூறியிருந்தார். டிராவிட் இருந்தால் தான் இந்தியா இந்த போட்டியை ட்ரா செய்யமுடியும் எனப் பலரும் கூறியிருந்தார்கள். அதனை புஜாராவும் - ரஹானேவும் செய்வார்கள் என எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் விஹாரி அந்த எதிர்பார்பை பூர்த்தி செய்திருக்கிறார்.

ஆஸி பவுலர்களை திணறடித்த பார்ட்னர்ஷிப் : வலியுடன் போராடி அணியைக் காத்த அஸ்வின் - விஹாரி! #IndvAus

இன்று இந்தியாவின் பெருஞ்சுவர் என சொல்லப்படும் ராகுல் டிராவிட்டுக்கு பிறந்தநாள். இந்த வெற்றியை (டிரா) டிராவிட்டுக்கு பரிசாக கொடுத்துள்ளார் விஹாரி. 27 வயதான விஹாரி ஆந்திராவை சேர்ந்தவர். இந்தியாவுக்காக 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் ஒரு சதம் மற்றும் நான்கு அரைசதங்களை அடித்துள்ளார்.

இந்தியா தோல்வியடையும் என்ற நிலையை மாற்றி வெற்றிக்கு வித்திட்ட ரிஷப் பன்ட் - அஸ்வின் - விஹாரி ஆகியோருக்கு இணையத்தில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

banner

Related Stories

Related Stories